நாகர்கோவில் நாகராஜா கோவில் மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த தை தேரோட்டம்..!!

Default Image

கன்னியகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று நாகர்கோவில் நாகராஜா கோவில்.

இக்கோவிலனது நாகதோஷ பரிகார தலமாக விளங்குகிறது.மேலும் இந்த கோவிலில் பெண்கள் சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம்.மேலும் இக்கோவிலில் தை திருவிழாவானது ஆண்டு தோறும் 10 நாட்கள் படு சிறப்பாக கொண்டாடப்பட்டும்

அதன்படி இந்த ஆண்டுக்கான தை திருவிழாவானத்து கடந்த 13 தேதி அன்று கொடியேற்றத்துடன் வேகுஸ் சிறப்பாக தொடங்கியது.கொடியேற்ற விழாவை முன்னிட்டு தினமும் காலையில் சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு,சுவாமி வாகனத்தில் எழுந்தருளல் மற்றும் மாலையில் சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை, சொல்லரங்கம் என்று வெகுச் சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டமானது  நேற்று நடைபெற்றது.காலை 9 மணிக்கு நடந்த தேரோட்டத்தை  தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியான  தளவாய் சுந்தரம் மற்றும் கன்னியகுமரி மாவட்ட நீதிபதி கருப்பையா மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் நாகர்கோவில் தொகுதி எம்.எல்.ஏவான  சுரேஷ்ராஜன் மேலும்  மாவட்ட பால்வள தலைவர் எஸ்.ஏ.அசோகன் உள்ளிட்டோர்  தேரை வடம் தொட்டு இழுத்து தொடங்கி வைத்தனர்.

தேரானது மக்கள் வெள்ளத்தில் தெற்குரதவீதி, மேற்கு ரதவீதி மற்றும் வடக்கு ரதவீதி வழியாக  பவனி வந்து மதியம் 2 மணியளவில் கிழக்கு ரதவீதியில் உள்ள நிலையை வந்து அடைந்தது. தை தேரோட்டத்தின் போது கூயிருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.தை தேரோட்டத்தை முன்னிட்டு கோவில் கலையரங்க மண்டபத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை சிறப்பு ஆன்மிக சொற்பொழி மற்றும் 8.15 மணிக்கு இசை பட்டிமன்றமும் ,சரியாக 9.30 மணிக்கு சப்தாவர்ணம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

திருவிழாவின் கடைசி  நாளான இன்று அதிகாலை 4.15 மணிக்கு சிறப்பு அபிஷேகம்,  மற்றும் மாலை 5 மணியளவில் சுவாமி ஆறாட்டுக்கு எழுந்தருளளும் சரியாக மாலை 6.30 இரவு 8 மணி வரை சிறப்பு ஆன்மிக சொற்பொழிவும் ,இரவு 8.15 மணிக்கு நகைச்சுவையுடன் கலந்த சிந்தனை பட்டிமன்றமும இரவு 9.30 மணிக்கு ஆறாட்டுத்துறையில் இருந்து சுவாமி கோவிலுக்கு எழுந்தருளலும் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றது.இந்நிலையில் நாகராஜா கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு  நேற்று குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  இருந்தது. மாவட்டம் முழுவதும் இதனால்  ஏராளமான பக்தர்கள்  தேரோட்ட நிகழ்ச்சியில் கலந்து தரிசனம் செய்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்