சிவராத்திரி என்பது, பிரளய காலத்தின் போது படைக்கும் பிரம்மனும், அவரால் படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்ட நிலையில், இரவுப்பொழுதில் அம்பிகை உமாதேவி, பரம்பொருள் பரமேஸ்வரனை நினைத்து பூஜை செய்தாள். இரவு முழுவதும் ஆகம விதிப்படி அர்ச்சனை செய்தார் பரமேஸ்வரி.இந்த பூஜையின் முடிவில் அம்பிகை ஈஸ்வரனை வணங்கி, ஈஸ்வரனிடம் நான் பூஜித்த இந்த இரவை, தேவர்களும், மனிதர்களும் தங்கள் திருநாமத்தாலேயே, அதாவது ‘சிவராத்திரி’ என்றே கொண்டாட வேண்டும்’ என்று வேண்டிக்கொண்டார். அந்த நாளை ஆண்டு தோறும் சிவராத்திரியாக […]
வாழ்க்கையில் வளங்களை அருளும் ரத சப்தமி இன்று நடைபெறுகிறது. விரதம் இருந்து எவ்வாறு அனுஷ்டிக்கலாம் என்று காண்போம் இன்று ரதசப்தமி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.விழா நாயகனாக திகழ்பவர் சூரிய பகவான் அவரை விழிமேல் வழிவைத்து வழிபட வேண்டிய நாளாகும்.ஆரோக்கியத்தை அருள்பவர் கண் முதலான நோய்களை விரட்டுபவர்,ஞானம் அளிப்பவர் அவரை நினைத்து வழிபட்டால் நினைத்தை நிறைவேற்று தருவார் ஆதித்யன்.அவரை விரத மூலமாக வழிபாடு நடத்தினால் இன்னும் சிறப்பு என் கிறார் .அப்படி விரத வழிபாடுகளை மேற்கொள்வதன் மூலமாக நம்முடைய […]
இன்றைய காலகட்டத்தில் மாணவர்களின் கல்வி என்பது பெற்றோர்களுக்கு பெரும் பிரச்சினையாக இருக்கிறது. மாணவர்களின் கல்வி பிரச்சனையை தீர்க்க மரகத விநாயகருக்கு அபிஷேகம் செய்தால் பிரச்சனை தீர்ந்து விடும். தற்போதைய காலகட்டத்தில் கல்வி என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்த பெற்றோர்கள் எவ்வளவோ முயன்று வருகிறார்கள். சில நேரம் மாணவர்கள் ஞாபக சக்தி குறைபாட்டால் மிகவும் பாதிக்கப்பட்டு அதனால் அவர்கள் கல்வியில் முன்னேற்றம் இல்லாமல் மந்தமாக காணப் படுகிறார்கள். இந்த பிரச்சனை பெற்றோர்களுக்கு […]
நவராத்திரியில் ஒன்பதாவது நாளாக சரஸ்வதி பூஜை நடத்தி வருகிறோம். இந்த பூஜையில் அலுவலகங்கள் , வீடுகளில் பூஜை செய்து பூஜை செய்வது வழக்கம். ஒன்பது மலர்கள் , ஒன்பது பழங்கள் , ஒன்பது தானியங்கள் , 9 பிரசாதங்கள் என ஒன்பது விதமான நிவேதனங்களால் முப்பெருந்தேவியை பூஜை செய்து வழிபடுவது நவராத்திரியின் சிறப்பம்சமாகும். நவராத்திரியின் ஒன்பது நாட்களும் , ஒன்பது விதமான அம்பிகையை பூஜை செய்ய வேண்டும் அதனால் நம் வாழ்க்கை இன்னும் அழகாகவும் நலம் தரும் […]
நவராத்திரியை ஒன்பது ராத்திரி என்றும் புதிய ராத்திரி என்றும் அழைப்பார்கள். அந்த ஒன்பது தினங்களிலும் லஷ்மி பூஜை செய்து நாம் வழிபட்டு வருகிறோம். கல்வி,செல்வம் ,வீரம் என்று தானே கூறுவார்கள். அப்பிடியிருக்க கலை மகளுக்கு முதலில் பூஜை செய்யாமல் அலைமகளுக்கு பூஜை செய்வது ஏன் ? என்றும் பலர் மனதில் கேள்விகள் எழக்கூடும். ஆனால் சிருஷ்டி வரிசை படி பார்த்தால் முதலில் சரஸ்வதி ,லட்ஷமி ,துர்க்கை என்று தான் வரும்.ஆனால் நவராத்திரி முறைப்படி துர்க்கை ,லஷ்மி ,சரஸ்வதி […]
நம் அன்றாட வாழ்வில் இறை உடனே தொடங்கி அன்றைய பொழுதும் இறை உடனே நிறை பெறுகின்றது. எல்லாம் அவன் செயல் உலகை நடத்துவதும் அவனே நம்மை நடத்துவதும் அவனே இப்படி இறை சிந்தனையில் மூழ்கி இருப்பவர்களுக்கு இறைவனே அனைத்தும் நாம் தினமும் மேற்கொள்ளும் வழிபாடுகள் எல்லாம் நம் வாழ்க்கையை மாற்றி அமைத்து தான் உள்ளது. பொதுவாக இறை நம்பிக்கை உள்ளவர்களிடம் உரையாடும் போது கூறுவார்கள் காலை எழுந்து கடவுளை வணங்கமால் இருந்தால் அன்றைய பொழுதே சரியில்ல என்று […]
முருகனின் அறுபடை வீடுகளில் பழனி முருகன் கோயில் முன்றாவது படை வீடு ஆகும். இந்தக்கோயில் 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மிகவும் பிரசித்தி பெற்றது.இந்த கோவில்களில் தைப்பூசம்,பங்குனிதிருவிழா,சுரசம் ஹாரம் முதலிய திருவிழாக்கள் மிகவும் சிறப்பாக கொண்டாட பட்டு வருகிறது. இந்தத்தலத்தின் மூலவர் நவபாஷானத்தால் ஆனவர். போகர் என்ற சித்தர், இந்தத் தலத்தின் மூலவரை பிரதிஷ்டை செய்துள்ளார். இந்த கோவிலில்தான் தமிழகத்தில் முதன்முதலாக பக்தர்கள் வேண்டுதல்கள் அலகு குத்துதல், காவடி எடுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் தேய்பிறை அஷ்டமிக்கும் […]
மாசி அமாவாசையை முன்னிட்டு நேற்று நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டார்கள். நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில்களில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை ,பௌர்ணமி நாட்களில் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்புவழிபாடு மற்றும் அபிஷேகம் முதலிய நிகழ்வுகள் நடைபெறும். மாசி அமாவாசையை முன்னிட்டு நேற்று நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. மேலும் 18 அடி உயரத்தில் உள்ள ஆஞ்சநேயருக்கு வடைமாலை அணிவிக்கபட்டது. இந்த […]
அய்யா வைகுண்டரின் 187வது அவதார தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் கடற்கரையில் ஏராளமான பக்தர்கள் சூரிய வழிபாடு செய்தனர். வைகுண்டரின் திருக்கோவிலில் தாலாட்டு பாடுதல், பள்ளி உணர்தல், அபயம் பாடுதல் முதலிய வழிபாடுகள் நடைபெற்றது. அய்யா வைகுண்டரின் அவதார தினம் இன்று. எனவே ஏராளமான பக்தர்கள் இன்று திருசெந்தூர் கடற்கரையில் சூரியவழிபாடு செய்தனர்.இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டார்கள். எனவே அய்யா வைகுண்டரின் அவதார தினத்தை முன்னிட்டு அதிகாலை 3 மணியளவில் கோவில் திறக்கப்பட்டது. வைகுண்டரின் திருக்கோவிலில் […]
காக்கும் கடவுளாக இன்றும் மக்கள் மனதில் இருப்பதில் முதலாவதாக வருவது பைரவர்.இவர் நன்னை வணங்கும் பக்தர்களின் துயரை போக்கி அவர்களை காத்து ரட்சிக்கும் காவல் தேவமாக திகழ்பவர் காலபைரவர். சனிஸ்வரனின் குருவானவர்,சனி கிரகம் பயப்படும் ஒரே தெய்வம் ஆவார்.இவரின் கருணை பார்வை கிடைக்க பெறுபவர் யோகம் பெற்றவர் ஆவர்.காரணம் பைரவரின் கடைக்கண் பார்வைக்கே அத்தனை மகிமை உண்டு.அப்படி இருக்கையில் அவருடை அருட்பார்வை கிடைக்கின்ற பட்சத்தில் எல்லா வளங்களையும் அள்ளித் தருபவர் தான் பைரவர். எவ்வாறு அவரின் அருளை […]
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பிரதோஷ வழிபாடு வெகுவிமரிசையாக நடைபெற்றது. மார்கழி மாதத்தில் வரும் பிரதோஷம், மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அமாவாசைக்கு, முன் தினத்தன்று வரும் பிரதோஷ திருவிழா, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி, பெரிய நந்தி பகவானுக்கு விபூதி அபிஷேகம், சந்தன அபிஷேகம், பால், தயிர் அபிஷேகங்கள் செய்யப்பட்டன. மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. நந்தி பகவானின் அருளைப் பெறுவதற்காக ஏராளமான பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்தனர்.
கோவை புலியகுளத்தில் உள்ளது ஆசியாவிலே மிக பெரிய விநாயகர் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சுவாமிக்கு அபிஷேகம், ஆராதனை நடபெற்றது ஆசியாவிலேயே பெரிய விநாயகரான முந்தி விநாயகருக்கு 2 டன் பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. கனி தரிசனம் காண வேண்டும் வருட பிறப்பு நாளில் இதனால் சுவாமிக்கு கனியினால் அலங்காரம் செய்யப்பட்டது வருட துவக்க நாளில் கனியில் கண் விழித்தால் கனி போல் வாழ்வமையும் என்பது நம்பிக்கை கனியினால் அலங்காரம் செய்யப்பட்ட சுவாமியை ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு […]
தமிழ் புத்தாண்டில் இறை வழிபாடு செய்வதால் அந்த வருடம் முழுவதும் இறைவனின் அருள் வேண்டியும் இறை வழிபாடுகளை செய்வது வழக்கமான ஒன்றாக இன்றளவும் கடைபிடிக்கபடுகிறது இதனை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடுகளை செய்தனர் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடுகளும் முக்கிய நிகழ்வான கனி காணும் நிகழ்சியு நடைபெற்றன. பல்லயாயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
விஷூ பண்டிகையையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த 10-ந் தேதி திறக்கப்பட்டது. நாள்தோறும் வழக்கமான பூஜைகளுடன், சிறப்பு வழிபாடுகளான படிபூஜை, உதயாஸ்தமன பூஜை, களபாபிஷேகம், சகஸ்ர கலசாபிஷேகம் உள்ளிட்ட பூஜைகள் நடந்து வருகின்றன. விஷூ பண்டிகையையொட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. பக்தர்களுக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு, மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி ஆகியோர் கைநீட்டமாக நாணயங்கள் வழங்குகிறார்கள். சபரிமலை அய்யப்பன் கோவிலில், விஷூ தினத்தில் […]
மும்பையில் தமிழ்ப் புத்தாண்டு தினம் நேற்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. தமிழர்கள் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். வாட்ஸ்அப் மூலம் உறவினர்கள், நண்பர்களுக்கு வாழ்த்து செய்திகளை பகிர்ந்தனர். தமிழ்ப் புத் தாண்டையொட்டி தமிழர்கள் நிர்வகிக்கும் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. அனைத்து கோவில்களிலும் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது.தமிழர்கள் அதிகாலையில் எழுந்து குளித்து, புத்தாடை அணிந்து கோவில்களில் நடந்த சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டு வழிபட்டனர். செம்பூர் செட்டா நகர் முருகன் கோவில்,மாட்டுங்கா […]
நடிகர் ரஜினிகாந்த் இமயமலை புறப்பட்டுச் சென்ற அவர், இமாச்சலப் பிரதேசத்தில் வழிபாடு நடத்திய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து அதிகாலையில் புறப்பட்ட அவர், இமயமலை சென்று நீண்டநாளாகிவிட்டதால், தற்போது அங்கு செல்வதாக தெரிவித்தார். பின்னர் சென்னை விமான நிலையத்திலும் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், குறைந்தபட்சம் 15 நாட்கள் இமயமலையில் தங்கியிருக்க உள்ளதாக கூறினார். இந்நிலையில், இமாச்சலப் பிரதேசம் சென்ற ரஜினிகாந்த் பைஜ்நாத் (Baijnath) என்ற இடத்தில் உள்ள பழமையான பைஜ்நாத் சிவாலயத்தில் வழிபாடு நடத்தினார். மேலும் செய்திகளுக்கு […]
முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பொதுமக்கள் வழிபாடு! ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தி வருகின்றனர். முன்னோர்களுக்கு திதி கொடுத்து தர்ப்பணம் செய்தனர். தொடர்ந்து இராமநாதசுவாமி கோயிலுக்குள் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள தாமிரபரணி நதியில், அதிகாலை 4 மணி முதலே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனர். அவர்கள், தாமிரபரணியில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். அமாவாசை நாட்களில் […]
தூத்துக்குடி : பிஅன்டி காலனியில் உள்ள ஶ்ரீ ராதா கிருஷ்ண பொருமாள் ஆலயத்தில் ஆண்டாளுக்கு கூடாரை வல்லி விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
டாடா குழுமத்தின் முன்னால் தலைவர் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார் . திருப்பதியில் திருமலை தேவஸ்தானத்துடன் இணைந்து ஆயிரத்து 400 கோடி ரூபாய் செலவில் புற்றுநோய் மருத்துவமனை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக, டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா கூறியுள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று காலை டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா, சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கி, வேத பண்டிதர்கள் மூலம் […]