மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழா மிகவும் புகழ்பெற்றதாகும்.
இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கொடியேற்றத்தையொட்டி சன்னதியில் உள்ள கம்பத்தடி மண்டபம் அழகிய மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அங்கு பட்டர்கள் யாகம் வளர்த்து சிறப்பு பூஜை செய்தனர். சித்திரை திருவிழாவிற்காக காப்பு கட்டிய பட்டர்கள் காலை 10 மணியளவில் 66 அடி உயர கொடிக்கம்பத்தில் கொடிப் பட்டத்தை ஏற்றினார்.
பின்பு கொடிமரத்திற்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்து, யாக பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் ஊற்றப்பட்டது. அப்போது மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் வெள்ளி சிம்மாசனத்தில் கொடிமரம் அருகே எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…