சகல தோஷங்களையும் பாவங்களையும் நீக்கும் மாசி மகம்..!
மாசி மகம் வருகின்ற மாசி மாதம் 12ஆம் தேதி, பிப்ரவரி 24,2024 கொண்டாடப்பட உள்ளது. மாசி மகத்தின் சிறப்புகள் மற்றும் பலன்கள் அன்று நாம் வணங்க வேண்டிய தெய்வங்கள் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
மாசி மகம் பௌர்ணமி திதியுடன் மக நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாளை மாசி மகமாகும். மாதம் தோறும் மக நட்சத்திரம் வந்தாலும் மாசி மாதம் வரும் மக நட்சத்திரத்திற்கு சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது இந்த மாசி மகத்தை கடலாடும் தினம் எனவும் கூறுவர்.
மாசி மகத்தின் சிறப்பு:
வருண பகவான் பிரம்மஹத்தி தோஷத்தால் பாதிக்கப்பட்டு சிவபெருமானை நோக்கி தவம் புரிகிறார் ,அப்போது சிவபெருமான் அங்கு காட்சி அளித்து தோஷத்தை நிவர்த்தி செய்கிறார். திருவண்ணாமலையில் வள்ளலார் என்ற அரசனுக்கு மகன் இல்லாததால் அவருக்கு ஈமச்சடங்கை சிவபெருமானை செய்த நாளாகவும் கருதப்படுகிறது.
இந்நாளில் தான் பெருமாள் வராகர் அவதாரம் எடுத்து பூமியை காப்பாற்றினார் எனவும் கூறப்படுகிறது .அம்பாள் தக்ஷாயினி அவதாரம் எடுத்த நாளாகவும் கூறப்படுகிறது. நவ நதிகளும் தன்னை புனிதப்படுத்திக் கொள்ளும் நாளும் இன்று தான். மனிதர்கள் தங்கள் பாவத்தைப் போக்க நதிகளிலும் கடல்களிலும் நீராட்டுகின்றனர் .அந்தப் பாவத்தை வாங்கிக் கொள்ளும் நாங்கள் என்ன செய்வது என்று சிவபெருமானிடம் கேட்டபோது அவர் இந்த மக நட்சத்திரத்தன்று தங்களை புனிதப்படுத்திக் கொள்ளலாம் என்று கூறிய நாளாகவும் கருதப்படுகிறது.
கும்பகோணத்தில் கும்பேஸ்வரர் கோவிலில் வெகு விமர்சையாக மாசிமகம் கொண்டாடப்படுகிறது .வட மாநிலத்தில் இதை கும்பமேளா எனவும் கொண்டாடுகின்றனர். இன்று சத்திய நாராயண பூஜை செய்ய உகந்த நாள் ஆகும். இந்நாளில் செய்வது ஒரு வருடம் சத்தியநாராயண பூஜை செய்வதற்கு சமம் எனவும் கூறப்படுகிறது.பெண்கள் இன்று மாங்கல்ய கயிறு மாற்றவும் சிறப்பான நாளாகும் .
பலன்கள்:
இன்றைய நாளில் புனித நீர் நிலைகளில் குளித்து வந்தால் தங்களுடைய பாவங்களும் தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.
வீடுகளில் தீர்த்தமாடும் முறை:
புனித நீர் நிலைகள் இல்லை என்றால் நம் வீடுகளிலேயே ஒரு பித்தளை செம்பில் தண்ணீர் பச்சைக் கற்பூரம், ஏலக்காய் ,மஞ்சள் தூள் ,பூக்கள் சேர்த்து இறைவனின் முன்பு மனம் உருகி தங்கள் பாவங்கள் தோஷங்கள் நீங்க வேண்டும்பூஜை செய்து அந்த நீரை தீர்த்தமாக கருதி குளிக்கும் நீரில் கலந்து குளித்து பிறகு சிவபெருமானுக்கு வில்வ இலையால் பூஜை செய்து பெருமாளுக்கு துளசிகளாலும், அம்பாளுக்கு மல்லிகையாலும் பூஜை செய்து மனம் உருகி வேண்டிக்கொள்ள வேண்டும்.
பொதுவாகவே பௌர்ணமி திதி சிவ வழிபாட்டிற்கும் சந்திரனின் வழிபாட்டிற்கும் ஏற்ற நாளாகும். மனம் தடுமாறாமல் இருக்க இந்த பௌர்ணமி நாளன்று தியானம் மேற்கொள்ள வேண்டும் என புராணங்களும் கூறுகின்றது. எனவே இந்த பௌர்ணமியுடன் கூடிய மக நட்சத்திரம் வருவதால் நாம் சிறப்பாக கொண்டாடி பயன் படுத்திக்கொள்ளவோம் .