திருவெம்பாவை பாடுவோம் மார்கழியில் !

Default Image

திருவெம்பாவை -12

ஆர்த்த பிறவித் துயர்கெட நாம் ஆர்த்து ஆடும்

தீர்த்தன் நற்றில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்

கூத்தன் இவ்வானும் குவலயமும் எல்லோமும்

காத்தும் படைத்தும் சுரந்தும் விளையாடி

வார்த்தையும்பேசி வளைசிலம்ப வார்கலைகள்

ஆர்ப்பரவம் செய்ய அணி குழல்மேல் வண்டார்ப்பப்

பூத்திகழும் பொய்கை குடைந்து உடையான்

பொற்பாதம் ஏத்தி இருஞ்ச்சுனைநீர் ஆடேலோர் எம்பாவாய்!

அதாவது, பேராரவாரம் செய்கின்ற பிறவித் துன்பம் கெடுவதற்காக, நாம் விரும்பி வழிபடும் தீர்த்தன். தில்லைச் சிற்றம்பலத்தில் தீயேந்தி ஆடுகின்ற கூத்தபிரான். இந்த விண்ணையும் மண்ணையும் நம் எல்லோரையும் விளையாட்டாகவே காத்தும், படைத்தும், கவர்ந்தும் வருபவன்.

அவன் புகழைப் பேசியும் வளைகள் ஒலிக்கவும் மேகலைகள் ஆரவாரிக்கவும் கூந்தல் மேல் வண்டுகள் ரீங்காரமிடவும் பூக்கள் நிறைந்த இந்தக் குளத்தில் ஈசனின் பொற்பாதத்தை வாழ்த்திக் கொண்டே நீராடுங்கள்! என்கிறார் மாணிக்கவாசகர்.

இந்த திருவெம்பாவைப் பாடலை மனமுருகிப் பாடுங்கள். உங்கள் வாழ்வில் எல்லா சத்விஷயங்களையும் காத்தருளி, உங்கள் வாழ்வை மலரச் செய்வான் ஈசன்!

source: dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்