தீராத கடனை தீர்க்கும் மைத்ரேய முகூர்த்தம்..! ஜனவரி 2025 இல் எப்போது?
கடன் தீர்க்கும் மைத்ரேய முகூர்த்தம் ஜனவரி 2025-ல் வரும் தேதிகள் பற்றி இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.
கடன் தீர்க்கும் மைத்ரேய முகூர்த்தம் ஜனவரி 2025-ல் வரும் தேதிகள் பற்றி இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.
சென்னை :மைத்ரேய முகூர்த்தம் ஒவ்வொரு மாதமும் இரண்டு அல்லது மூன்று முறை வரக்கூடியது. மைத்ரேய முகூர்த்தம் என்பது மேஷ லக்னமும் அஸ்வினி நட்சத்திரமும் இணையக்கூடிய நாளிலும் ,விருச்சிக லக்னம் அனுஷ நட்சத்திரமும் ஒன்றாக வரும் நாட்களிலும் வரக்கூடியது.இது மைத்ரா அல்லது மைத்ரேய முகூர்த்தம் என அழைக்க படுகிறது . ஜோதிட ரீதியாகவும், சாஸ்திர அடிப்படையிலும் மைத்ரேய முகூர்த்தம் கடன் பிரச்சனையை தீர்க்கும் என சொல்லப்படுகின்றது.
இந்த மாதம் [ஜனவரி 2025 ]இரண்டு நாட்கள் வருகின்றது. ஜனவரி 8, புதன்கிழமை[ மார்கழி 24 ]12 ;45pm முதல் 2; 27 வரை உள்ளது. ஜனவரி 25ம் தேதி [தை 12] மதியம் 1:38 முதல் 44 வரை உள்ளது.. இந்த நேரத்தை பயன்படுத்தி கடனை திருப்பி கொடுக்கலாம் அல்லது அதற்கான ஒரு தொகையை தனியாக எடுத்து வைத்து பிறகு கொடுக்கலாம். இவ்வாறு செய்து வரும் பொழுது கடன் விரைவில் அடையும் என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இது நம் முன்னோர்களும் பின்பற்றிய ஒரு ரகசியமாகவும் சொல்லப்படுகிறது.
இதுபோல் சாஸ்திரத்தில் பல விஷயங்கள் கூறப்பட்டு முன்னோர்கள் பின்பற்றியதாகவும் சொல்லப்பட்டுள்ளது. மேலும் ஜோதிட உலகில் வாக்கியம் பஞ்சாங்கம் ,திருக்கணித பஞ்சாங்கம் என இரு வகை பஞ்சாங்கம் உள்ளது. இதன் அடிப்படையில் தான் இந்த தேதிகள் மற்றும் நேரங்கள் குறிக்கப்படுகிறது. வாக்கிய பஞ்சாங்கம் என்பது ஆதிகாலம் முதல் எந்த ஒரு மாற்றம் செய்யாமல் அப்படியே பின்பற்றக் கூடியது ஆகும் .இது இன்றும் கோவில்களில் பின்பற்றப்படுகிறது.இந்த முறையில் அடுத்த நாள் என்பது காலை 6 மணிக்கு மேல் என சொல்லப்படுகிறது.
திருக்கணித பஞ்சாங்கம் என்பது திருத்தி அமைக்கப்பட்ட பஞ்சாங்கம் ஆகும். சூரியனின் சுழற்சி மற்றும் பூமியின் சுழற்சியை வைத்து கணிக்கப்படுகிறது. அதாவது சூரிய உதயம் அந்த நாளில் எந்த நேரத்தில் வருகிறது என்பதை துல்லியமாக கணிக்கப்பட்டு முறையாக சொல்லப்படுகிறது. இதில் எந்த முறை சரி என இன்று வரை கணிக்கப்படவில்லை .அதனால் அவரவர் நம்பும் முறைகளை பின்பற்றிக் கொள்ளலாம்.
ஆகவே தீராத கடன் பிரச்சனையால் சிக்கித் தவிப்பவர்கள் இந்த மைத்ரா முகூர்த்தத்தை நம்பி கடைப்பிடித்து வருவதன் மூலம் அதன் பலனை பெறலாம் .