இன்று ஈஷாவில் மஹாசிவராத்திரி கொண்டாட்டம்!!குடியரசு தலைவர் பங்கேற்பு!!

Default Image
  • கோவை ஈஷா யோகா மையத்தில் இன்று  மஹாசிவராத்திரி விழா நடைபெறுகிறது.
  • பிரபல இசை கலைஞர்கள் அமித் திரிவேதி, ஹரிஹரன், கார்த்திக் பங்கேற்கின்றனர்.  

கோவை ஈஷா யோகா மையத்தில் இன்று  மஹாசிவராத்திரி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதில் பிரபல இசையமைப்பாளர்கள் திரு.அமித் திரிவேதி, திரு.ஹரிஹரன் மற்றும் பின்னணிப் பாடகர் கார்த்திக் உள்ளிட்டோரின் இசை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

நம் கலாச்சாரத்தில் மஹாசிவராத்திரி என்பது மிக முக்கியமான ஒரு நாளாகும். குறிப்பாக, ஆன்மீக பாதையில் இருப்பவர்களுக்கு அவர்கள் உள்நிலையில் வளர்வதற்கு இந்நாள் பல்வேறு சாத்தியங்களை வழங்குகிறது. இதன்காரணமாக, கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் மஹாசிவராத்திரி விழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டு, 25-வது ஆண்டு மஹாசிவராத்திரி விழா இன்று மாலை 6 மணிக்கு தொடங்கி மறுநாளை காலை 6 மணி வரை மிக கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

Related image

 

 

ஆதியோகி முன்பு நடக்கும் இவ்விழாவில் சத்குருவின் அருளுரை, சக்திவாய்ந்த நள்ளிரவு தியானம், மந்திர உச்சாடனைகள், லிங்க பைரவி மஹா யாத்திரை, பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்து வரும் தலைசிறந்த கலைஞர்களின் பாரம்பரிய இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள், நாட்டுப்புற இசை நிகழ்ச்சிகள், சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா குழுவினரின் இசை நிகழ்ச்சிகள் என பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக, தேசிய விருது வென்ற பிரபல இசையமைப்பாளர் திரு.அமித் திரிவேதி, மெல்லிசை வித்தகர் திரு.ஹரிஹரன், பிரபல பின்னணி பாடகர் திரு.கார்த்திக் உள்ளிட்டோர் பங்கேற்று இசை விருந்து படைக்க உள்ளனர்.

இதுதவிர, இவ்விழாவை மேலும் அழகூட்ட நூற்றுக்கணக்கான நாட்டு மாடுகள் பங்கேற்கும் நாட்டு மாடுகள் கண்காட்சி, தலைப்பாகை கட்டுதல், வீதி நாடகங்கள், பல்வகை சேலை உடுத்தும் பயிற்சி, பல மாநில உணவு அரங்கங்கள் உள்ளிட பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இந்தாண்டு, மக்களின் கண்ணை கவரும் விதமாக ஆதியோகி குறித்த பிரத்யேகமாக ‘லேசர் ஷோ’ ஒன்றும் நடத்தப்பட உள்ளது.

மஹாசிவராத்திரி விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு ஆதியோகி ஒரு வருடமாக அணிந்திருந்த 1 லட்சத்து 8 ருத்ராட்ச மணிகள் மற்றும் சர்ப்ப சூத்திரம் பிரசாதமாக வழங்கப்படும். விழாவில் பங்கேற்கும் லட்சக்கணக்கான மக்களுக்கு மஹா அன்னதானமும் வழங்கப்பட உள்ளது.

மஹாசிவராத்திரி விழாவில் கலந்துகொள்வதற்காக தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்டங்களில் தன்னார்வ தொண்டர்கள் மூலம் பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், விழா நாட்களில் கோவையில் இருந்து ஈஷா யோகா மையத்துக்கு சிறப்பு பேருந்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பேருந்து முன்பதிவுக்கு 83000 83111 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதேபோல்   ஈஷா யோக மையத்தில் நடைபெறும் சிவராத்திரி நிகழ்ச்சியிலும், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்து கொள்கிறார்.

ஈஷா மஹாசிவராத்திரி விழா தமிழ், இந்தி, ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மராத்திரி என பல்வேறு மாநில மொழிகளில் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்பட உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்