மகாளய அமாவாசை 2024-அமாவாசை அன்று கட்டாயம் சமைக்க வேண்டிய காய்கறிகள் எது தெரியுமா?
சூரியனும் சந்திரனும் இணையும் நாளை அமாவாசை தினமாகும் இந்நாளில் காற்று, வெப்பம் ,கடல், நம் உடல் ஆகியவற்றில் சில மாற்றங்கள் ஏற்படும்.
சென்னை- அமாவாசை அன்று சமைக்க வேண்டிய காய்கறிகள் மற்றும் சமைக்க கூடாத காய்கறிகள் என்னவென்று இந்த செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்..
அமாவாசை தினத்தில் ஏற்படும் மாற்றங்கள் ;
அமாவாசை தினத்தில் ஆண்கள் விரதம் இருந்து தர்ப்பணம் கொடுக்க வேண்டும். சுமங்கலி பெண்கள் விரதம் மேற்கொள்ளக்கூடாது, அன்றைய தினம் அவர்கள் முன்னோர்களுக்கு பிடித்த உணவுகளை சமைத்து படையல் போட வேண்டும் என சாஸ்திரம் கூறுகின்றது.
சூரியனும் சந்திரனும் இணையும் நாளை அமாவாசை தினமாகும் இந்நாளில் காற்று, வெப்பம் ,கடல், நம் உடல் ஆகியவற்றில் சில மாற்றங்கள் ஏற்படும். இந்த அமாவாசை தினத்தில் கடலில் அலைகள் அதிகமாகவும், வெப்பம் சமநிலை அற்றதாகவும் அதேபோல் நமது உடலும் சமநிலையை இழக்கும், குறிப்பாக மூளை பகுதி, நரம்பு பகுதி மற்றும் உடலில் உள்ள நீர்ச்சத்து ஆகியவை சற்று பாதிப்புக்கு உள்ளாகும். இதனால்தான் முன்னோர்கள் அமாவாசை அன்று எதை சமைக்கலாம் எதை சமைக்க கூடாது என வகுத்துள்ளனர் . அமாவாசை தினத்தில் பொட்டாசியம் மற்றும் சோடியம் நிறைந்துள்ள காய்கறிகளை அதிகம் சமைக்க வேண்டும்.
சமைக்க வேண்டிய காய்கறிகள்;
அம்மாவாசை தினத்தில் வாழைக்காய் கட்டாயம் சமைக்க வேண்டும். ஏனெனில் வாழைக்காய் சமைப்பதற்கு ஒரு சூட்சமம் இருப்பதாக கூறப்படுகிறது. வாழை மரம் வெட்ட வெட்ட அதிகம் வளர கூடியது. நம் முன்னோர்களின் ஆசியை பெறுவதோடு நமது குலமும் வாழையடி வாழையாய் தலைக்கும் என்று சாஸ்திரம் கூறுகின்றது.
அதுமட்டுமல்லாமல் அவரைக்காய், புடலங்காய், பயத்தங்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ ,சேனைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு ,பிரண்டை ,மாங்காய், இஞ்சி, நெல்லிக்காய் ,பூசணிக்காய், பாசிப்பருப்பு ,கோதுமை, வெல்லம், பாகற்காய், உளுந்து ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.
சேர்க்கக் கூடாத காய்கறிகள்;
முட்டைக்கோஸ், முள்ளங்கி ,நூல்கோல் , கீரைகளில் அகத்திக் கீரையைத் தவிர, பீன்ஸ் ,உருளைக்கிழங்கு, கேரட் ,கத்திரிக்காய், வெண்டைக்காய் ,காலிஃப்ளவர், ப்ரோக்கோலி, பட்டாணி, பெருங்காயம் , முருங்கைக்காய், பீட்ரூட் ,சுரைக்காய், பச்சை மிளகாய் ,வெங்காயம் ,துவரம் பருப்பு மற்றும் அசைவ உணவுகள் போன்றவற்றை அமாவாசை நாளில் தவிர்ப்பது நல்லது. நம் முன்னோர்கள் வகுத்துள்ள ஒவ்வொரு செயல்களிலும் ஒரு காரணம் இருக்கும் என்பதை நாம் புரிந்து கொண்டு செயலாற்றுவது சிறந்தது .