வருகிறது மகா சிவராத்தரி!! சிவராத்திரி விரதத்தின் பலன்கள் என்ன?
மகா சிவராத்திரி இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதம் ஆகும்.இந்த விரதம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படும்.இந்நிலையில் சிவராத்திரியில் விரத்தத்தின் பலன்கள் என்ன என்பதை இதில் பார்ப்போம்…
சிவராத்திரியின் விரதத்தின் பலன்கள்…!
‘சிவாய நம’ என்று சிந்தையில் நினைத்திருந்தால் ‘சிரமம்’ நமக்கு ஏற்படாது,’சிறப்பு’மட்டுமே நமக்கு ஏற்படும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.அந்த புனிதம் நிறைந்த நாளில் விரதம் இருந்தால் புண்ணியமும் கூடும்.பொருளாதார நிலையும் உயரும். அன்று ஒரு நாள் முழுவதும்,நான்கு கால ஜாம பூஜையிலும் சிவனை நினைத்து வழிப்பட்டு சிவாலயங்களில் சிவன் சன்னதியில் அமர்ந்து சிவன் திருநாமத்தை உச்சரித்து வந்தால் ஒரே நாளில் ஓர் ஆண்டிற்கான பலனும் நமக்கு கிடைக்கும் அதனால் தான் “சிவராத்திரி” விரதம் சிறந்த பலனைக் கொடுக்கிறது.
ஒரு வருடம் சிவராத்திரி விரதம் இருப்பது என்பது நூறு அசுவமேத யாகம் செய்த பலனும், பல தடவை கங்கையில் நீராடிய பலனும் புண்ணியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.பூஜை செய்ய முடியாதவர்கள் நான்கு ஜாமத்திலும் சிவபுராணம் கேட்டும், சிவன் கோயிலுக்குச் சென்று இரவைக் கழித்தும் சிவனை வழிபடலாம்.
மகா சிவராத்திரி விரதம் இருப்போருக்கு நற்கதி கிடைப்பதுடன் இப்பூத உடல் மடிந்த பின் சொர்க்கத்தையும் இறைவன் அளிப்பான் என்பதே பின்னணித் தத்துவம். இப்படி இருபத்து நான்கு வருடங்கள் சிவராத்திரி விரதமிருந்தால் அவர்கள் சிவகதி அடைவார்கள் என்கின்றன புராணங்கள்.