சங்கடம் தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி…..!சனிதோஷத்தையும் கட்டுப்படுத்தி…சகலத்தையும் தரும்…!

Default Image

ஆனைமுகனை வழிபாடு செய்வதற்கு பல விரத தினங்கள் இருந்தாலும் விரதத்தில் மிகச் சிறந்ததும், முக்கியத்துவம் மிகுந்ததுமான சங்கடங்கள் அனைத்தையும் குறைக்ககுடிய சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால் தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும் அளவு கடந்த ஆற்றலையும்,ஆனந்தத்தை பெறலாம்.

ஓவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தி திதியே சங்கடஹர சதுர்த்தி ஆகும். ஆவணி மாத தேய்பிறையில் வரும் சதுர்த்தி நாளிலிருந்து இவ்விரதத்தை கடைப்பிடிக்க தொடங்க வேண்டும். செவ்வாய்க்கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்

வரம் தரும் விரதம்….!

இவ்விரதத்தை கடைப்பிடிப்பதால் தீராமல் உள்ள நோய் தீரும். வாழ்க்கையில் துன்பங்களுக்கு உள்ளாகின்றவர்கள் மகிழ்ச்சியை அடைய முடியும். சிறப்பான கல்வி அறிவு, புத்திக்கூர்மை, நீண்ட ஆயள், நிலையான செல்வம். நன்மக்கட்பேறு என பலவிதமான நன்மைகளை பெற இவ்விரதம் துணை. சனிதோஷத்திற்கு ஆளாகியவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்தால் சனியின் தாக்கம் அதிகமாகக் குறையும்.

வரம் தரும் விரதத்தை கடைப்பிடிக்கும் முறை….!

சங்கடஹர சதுர்த்தியன்று அதிகாலை நீராடி உணவு உட்கொள்ளாமல் மாலை வரை விநாயகனை உள் அன்போடு நினைத்து உபவாசம் இருக்க வேண்டும். பால் பழம் மட்டும் அருந்தலாம்.

மாலை அருகில் உள்ள ஆலயத்திற்குச் சென்று விநாயகப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனையில் கலந்து கொண்டு விநாயகரின் அருளை பெறலாம் சதுர்த்தியன்றுஆலயத்தை எட்டு முறை வலம் வருதல் நன்று.

அனைத்து பூசைகளும் முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து உபவாசத்தை முடித்துக் கொள்ளவேண்டும்.விநாயகருக்கு பிடித்த வெள்ளெருக்கு அறுகம்புல் மாலை சாற்ற வேண்டும். ஏனென்றால் அருகம்புல் ஆனைமுகனின் திருமேனி அதிக வெப்பத்தால் இருந்தபோது சப்தரிஷிகள் ஒரு சாண் அளவு அருகம்புல்லை வைத்த போது ஆனைமுகனின் திருமேனி குளிர்ந்தது சப்தரிஷிகளுக்கு வரம் அளிக்க விரும்பினார்ஆனைமுகன்.

அப்போது சப்தரிஷிகள் தங்களை யார் அருகம்புல் சாற்றி  வழிபடுகின்றர்களோ அவர்கள் வேண்டிய வரத்தினை வழங்க வேண்டும் என கேட்டனர் ஆனைமுகனும் அவ்வரத்தினை வழங்கினார்.அதன்படி அருகம்புல் அணிவித்து வணங்கினால் அருமையான அருளை அருள்வார் ஆனைமுகன்…

மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்