சித்திரை திருவிழா பவளக்கனிவாய் பெருமாள்..!! திருப்பரங்குன்றத்தில்..!! 26 தேதி புறப்படுகிறார்..!!
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் முத்திரை பதிக்கும் சித்திரை திருவிழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
இதையொட்டி திருக்கல்யாணத்தின் முதல் நாளான 26-ந்தேதி மாலை 5 மணிக்கு முருகப்பெருமான் அருள் ஆட்சி புரியும் அறுபடைவீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றத்தில் இருந்து மதுரைக்கு பவளக்கனிவாய் பெருமாள் புறப்பட்டு செல்லுகிறார்.
அதேவேளை திருமணத்தில் பங்கேற்பதற்காக தெய்வானையுடன் முருகப்பெருமானும் மதுரைக்கு செல்லுகிறார். இதையொட்டி திருப்பரங்குன்றத்தில் இருந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வரை உள்ள சுமார் 125-க்கும் மேற்பட்ட திருக்கண் மண்டகப்படிகளில் சாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்
அதைத்தொடர்ந்து 4 நாட்கள் மதுரையில் தங்கி இருக்கும், பவளக்கனிவாய் பெருமாள், தெய்வானை சமேத முருகப்பெருமான் ஆகியோர் மே 1-ந்தேதி மாலை 5 மணிக்கு சிம்மாசனம், பூப்பல்லக்கில் எழுந்தருளி திருப்பரங்குன்றமான தங்களது இருப்பிடத்திற்கு புறப்பட்டு செல்கின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்