மதுரை சித்திரை திருவிழா 2024.! திக் விஜயத்தின் சிறப்புகளை தெரிஞ்சுக்கோங்க .!

மதுரை சித்திரை திருவிழா – சித்திரை திருவிழாவின் 9 ம் நாளான, நாளை நடைபெறும் திக் விஜயத்தின் சிறப்புகளை இப்பதிவில் காணலாம்.
மதுரை சித்திரை திருவிழா கோலா கோலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாமதுரையின் அரசியான மீனாட்சி ஒவ்வொரு நாளும் விதவிதமான பல்லக்கில் பவனி வருவார்.
மதுரையின் பட்டத்தரசியாக முடி சூட்டிக்கொண்டவுடன் எட்டுத்திக்கும்சென்று வென்று வர அம்மன் செல்வதே திக் விஜயம் ஆகும்.
திக் விஜயம்:
சித்திரை திருவிழாவின் ஒன்பதாம் நாளான திக் விஜயம், சித்திரை 7, ஏப்ரல் 20ஆம் தேதி நாளை நடைபெற உள்ளது. காலை ஏழு மணிக்கு அம்மன் நான்கு மாசி வீதிகளிலும் மரவர்ண சப்பரத்தில் எழுந்தருளுவார்.
பிறகு 9:30 மணிக்கு வீதி உலா நிறைவு பெறும். மேலும் மாலை 6:00 மணி அளவில் மீண்டும் இந்திர விமானத்தில் மாசி வீதிகளில் வலம் வந்து 11:30 மணிக்கு கோவிலுக்குள் அம்மன் வந்து சேர்வார்.
திக் விஜயத்தின் சிறப்பு:
மாமதுரையின் பேரரசியான மீனாட்சி அம்மை ஆணுக்கு நிகராக அனைத்துப் போர் கலைகளையும் கற்றுத் தெரிந்தவர். பட்டத்தரசி ஆனவுடன் இவர் ஒவ்வொரு திக்குகளுக்கும் சென்று போர் தொடுத்து வெல்கிறார்.
பிறகு கைலாயத்தின் மீது போர் தொடுக்கிறார். அங்கு சிவபெருமானோ மீனாட்சி யார் என அறிந்தவர் ,ஆதலால் போர் தொடுக்க உற்சாகத்துடன் அன்னையை எதிர்கொள்ள செல்கிறார்.
ஆனால் மீனாட்சி அம்மனோ சிவபெருமானை பார்த்தவுடன் நாணத்தில் தலை குனிகிறார். தன் மணவாளனை கண்டுவிட்டதை புரிந்து கொள்கிறார். இதனைத் தொடர்ந்து தான் மீனாட்சி அம்மனுக்கும் சுந்தரேஸ்வரருக்கும் திருமணம் நடைபெற்றது. இதுவே திக் விஜயத்தின் சிறப்பாகும்.
லேட்டஸ்ட் செய்திகள்
மீனவர்கள் பிரச்சனை: “கூட்டுப் பணிக்குழுவை உடனடியாக கூட்டுங்கள்..” – மு.க.ஸ்டாலின் கடிதம்.!
February 23, 2025
NDvsPAK : டாஸில் மோசமான சாதனை படைத்த இந்தியா!! விக்கெட்டுகளை இழந்து மந்தமாக ஆடி வரும் பாகிஸ்தான்…
February 23, 2025
வசூல் ராஜா யாரு? டிராகனா? NEEK-ஆ? இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரம்.!
February 23, 2025