குழந்தைகள் படிக்க அடம்பிடித்தால் இந்த ஒரு எளிய பரிகாரத்தை செய்து வந்தாலே போதும்.
பொதுவாகவே சில குழந்தைகள் படிப்பில் ஆர்வம் இல்லாமல், படிக்க பிடிக்காமல் இருப்பார்கள். ஆனால், சில குழந்தைகளை நாம் படிக்க சொல்லாமலே படிப்பார்கள். அதில் ஆர்வம் கொண்டிருப்பார்கள். தற்போது இரண்டு வருட காலமாக ஊரடங்கு காரணமாக பள்ளிக்கு செல்லாமல் குழந்தைகள் இருந்து வந்ததால் அவர்களுக்கு படிப்பில் ஆர்வம் இல்லாமல் விளையாட்டு, வீடியோ கேம் என அதில் மட்டுமே அதிக ஆர்வத்துடன் இருந்து வருகிறார்கள்.
அதனால் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து சென்று விட்டாலும் வீட்டிற்கு வந்து படிக்க வைக்க முயன்றால் அவர்கள் ஆர்வம் காட்டாமல் அடம் பிடிக்கிறார்கள் என்றால் இந்த பதிவு உங்களுக்கு அவசியமானது. குழந்தைகளை திட்டி, அவர்களை வறுபுறுத்தி படிக்க வைத்தால் நிச்சயமாக படிக்க மாட்டார்கள். அதில் ஆர்வமும் இருக்காது. மேலும் தினமும் படிக்க பிடிக்காமல் வற்புறுத்தலால் மனஉளைச்சலுக்கு குழந்தைகள் ஆளாகிவிடுவார்கள்.
இதற்கு எளிய பரிகாரங்களை இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். படிப்பிற்கு உகந்த கிரகம் புதன் கிரகம். அதனால் புதன் கிழமைகளில் புதன் பகவான் இருக்கும் கோயிலுக்கு சென்று உங்கள் குழந்தையை அழைத்து செல்ல வேண்டும். அவர்கள் கையில் 5 ஏலாக்காய்களை குழந்தையின் கையில் கொடுத்து புதன் பகவான் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்ய வேண்டும். உங்கள் குழந்தை பெயரில் அர்ச்சனை செய்ய வேண்டும்.
பிறகு அந்த 5 ஏலக்காய்களை திரும்பி வாங்கி கொண்டு வீட்டிற்கு வந்து அதனை குழந்தைகளுக்கு கொடுத்து சாப்பிட சொல்லுங்கள். வெறும் ஏலக்காயை சாப்பிட மறுத்தால், பாலில் கலந்து கொடுங்கள். அல்லது கேசரி, அசோகா போன்ற எதாவது ஒரு இனிப்பு வகையை செய்து அதில் இந்த ஏலக்காய்களை சேர்த்து கொடுத்து விடுங்கள். நிச்சயமாக படிப்பில் ஆர்வம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க தொடங்கும்.
அதே போல் குழந்தைகளை பள்ளிக்கு தாய்மாமனோடு இரண்டு நாட்கள் அனுப்பி வைத்தால் மிகவும் சிறப்பு. ஏனென்றால் புதன் கிரகம் இருப்பது ஐந்தாம் இடம். அதனால் ஐந்தாம் இடத்தை குறிக்க கூடிய தாய்மாமனோடு குழந்தையை படிக்க அனுப்பினால் நிச்சயமாக படிப்பில் குழந்தைகளுக்கு ஆர்வம் அதிகரித்து நன்றாக படிப்பார்கள்.
அடுத்தப்படியாக படிப்பிற்கு உகந்த கடவுளான யோக ஹயக்ரீவர் சன்னதி உங்கள் வீடு இருக்கும் அருகில் உள்ள கோவிலில் இருந்தால் அங்கு உங்கள் குழந்தையை அழைத்து செல்ல வேண்டும். 50 ஏலக்காய்களை கொண்டு ஒரு மாலை தொடுத்து அதனை குழந்தை கையால் ஹயக்ரீவருக்கு மாலை அணிவிக்க கூறுங்கள். இதனை புதன் கிழமை அன்று செய்து வாருங்கள். குழந்தைகளுக்கு ஞாபக சக்தி அதிகரித்து படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். நம்பிக்கையோடு இதனை செய்து வாருங்கள்.
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…
மும்பை : இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான…
கொல்கத்தா : நாட்டில் மிகவும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய சம்பவங்களில் ஒன்று கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் மருத்துவ…
சென்னை : பிக் பாஸ் சீசன் 8 தமிழ் ஆரம்பத்தில் எதிர்பார்புகளுடன் தொடங்கப்பட்டாலும் அதற்கு பிறகு சில நாட்கள் வரவேற்பு குறைந்தது…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள்…