பணத்தை ஈர்க்கும் செல்வந்தர்களின் சூட்சம ரகசியங்களை தெரிஞ்சுக்கோங்க..!
Dovotion-பணத்தை ஈர்ப்பதற்கான சூட்சுமங்கள் ,கடன் அடைவதற்கான எளிமையான வழிமுறைகள் மற்றும் சமையலறை ரகசியங்களை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
ஒரு சிலர் பணம் சம்பாதிக்க பல மணி நேரம் உழைத்தாலும் போதிய வருமானம் கிடைக்காமல் சிரமப்படுவார்கள். அதே ஒரு சிலர் சில மணி நேரங்களிலேயே பணத்தை எளிதில் சம்பாதித்து விடுவார்கள். குறிப்பாக வணிகர்கள் மற்றும் மார்வாடியினர்கள் பணத்தை ஈர்க்கும் சூட்சமங்களை தெரிந்து வைத்திருப்பார்கள். ஆனால் சாமானியர்களின் யோசனைகளில் இவர்கள் மட்டும் பணத்தை எப்படி சம்பாதிக்கிறார்கள் பணத்தை ஈர்க்கக்கூடிய பொருள் ஏதாவது இருக்குமோ என நினைப்பார்கள் அது என்னவெல்லாம்என்பதை பார்க்கலாம் .
பணத்தின் சூட்சம ரகசியங்கள்;
பணத்தை ஈர்ப்பதற்கு முதல் சூட்சமமாக இருப்பது நேர்மறையான சிந்தனைகள் ஆகும்
நான் ஆனந்தமாக இருக்கிறேன் என்று நினைப்பதும் பேசுவதும் பணத்தை ஈர்க்கும் சூட்சம ரகசியங்களில் ஒன்றாகும். மேலும் நாம் பேசும் வார்த்தை செயலாக மாறும் தன்மை கொண்டது. அதனால் பேசும் வார்த்தைகள் நேர்மறையாக இருக்க வேண்டும் அது மட்டுமல்லாமல் செய்திகளில் கூட எதிர்மறை செய்திகளை படிப்பதும் கேட்பதும் தவிர்த்து விடுவது நல்லது.
வாஸ்து சாஸ்திரப்படி பணத்தை ஈர்க்கும் முறை;
சிலர் பணத்தை தண்ணீராக செலவு செய்கிறார்கள் என்று கூறுவார்கள் அந்த தண்ணீரிலும் ஒரு ரகசியம் உள்ளது .வாஸ்து சாஸ்திரப்படி தண்ணீரை சேமிப்பதன் மூலம் பணத்தை ஈர்க்கும் தொடர்பு ஏற்படுகிறது. பண்டைய காலத்தில் இல்லங்களில் ஈசானிய மூலையில் தண்ணீர் தொட்டி அமைத்து சேமித்து வைப்பது மற்றும் ஈசானிய மூலையில் கிணறு வெட்டுவது செல்வம் சேர்வதற்கு ஒரு சூட்சமமாக கடைபிடிக்கப்பட்டது.
பண வரவு அதிகரிக்க எளிய பரிகாரம்;
இல்லங்களில் செல்வம் செழிப்பாக இருப்பதற்கு மகாலட்சுமியின் சுபிட்சம் நிறைந்திருக்க வேண்டும் அதற்கு இந்த பரிகாரத்தை செய்து வாருங்கள். அதிகாலையில் வீட்டு வாசலில் கோலம் இடுவது போல் வாசல் படியிலும் கோலமிட வேண்டியது அவசியம்.
ஒரு சொம்பில் தண்ணீர் எடுத்து அதில் 2 ஏலக்காய் ,கற்பூரம், வெட்டிவேர், ஒரு நாணயம் இவற்றைக் கலந்து வாசல் படிக்கு உட்புறமாக நின்று அந்த சொம்பை இடது கையில் வைத்து வலது கையால் மூடிக்கொண்டு பத்து முறை மகாலட்சுமியை நமஹ என உச்சரித்து பிறகு அந்த நீரை வாசல் படியில் தெளித்து மீதம் உள்ள தண்ணீரை வீடு முழுவதும் தெளித்துக் கொள்ளவும் .
பிறகு மாக்கோலம் போட வேண்டும். இதை தினமும் காலையில் செய்து வர வேண்டும் அல்லது செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் செய்து வரலாம். இதன் மூலம் இல்லங்களில் நேர்மறை ஆற்றல் அதிகரித்து செல்வம் அதிகரிக்க துவங்கும்.
பணத்தை ஈர்க்கும் சமையலறை;
மளிகைப் பொருள்கள் எப்போதுமே நிறைந்து இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும் சமைத்த மற்றும் சாப்பிட்ட எச்சில் பாத்திரங்களை இரவில் அப்படியே வைத்து விடாமல் அதை கழுவி சுத்தமாக வைத்து விட வேண்டும். எச்சில் பாத்திரங்களை அப்படியே வைத்தால் செல்வம் வருவதில் தடை ஏற்படும். வடமேற்கு பகுதியில் மீன் தொட்டி வைத்து தினமும் ஐந்து நிமிடம் மீன்களை பார்ப்பது பணத்தை ஈர்க்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தும்.
கடன் அடைய எளிய வழிமுறைகள்;
வரவு செலவு கணக்கு நோட்டில் வருமானத்தை மகிழ்ச்சியுடன் எழுத வேண்டும். இது நேர்மறையான சிந்தனையை ஏற்படுத்தி பணத்தை ஈர்க்கும். கடன் இருந்தால் அதை திருப்தியுடன் சிந்தித்து மஞ்சள் நிற காகிதத்தில் சிவப்பு நிற மையால் எழுத வேண்டும். மேலும் தினமும் 30 நிமிடங்கள் மௌன விரதம் இருக்க வேண்டும். அந்த நேரத்தில் பண வரவை ஏற்படுவதற்கான வழிமுறைகளை யோசிக்க வேண்டும். மேலும் வீட்டில் இருக்கும் பெரியோர்களின் ஆசிர்வாதம் மிகவும் முக்கியமாகும். இவற்றையெல்லாம் கடைப்பிடிப்பதால் தான் ஒரு சிலர் வீடுகளில் எப்போதுமே செல்வ செழிப்போடு உள்ளது.