நவகிரகங்களை வழிபடும் சரியான முறையை தெரிஞ்சுக்கோங்க..!

Published by
K Palaniammal

நவகிரகங்கள் -நவகிரகங்களை சுற்றும் முறை மற்றும் அதனால் ஏற்படும் பலன்கள் பற்றி இப்பதிவில் காணலாம்.

கோவிலுக்குச் செல்லும் பலருக்கும் நவகிரகங்களை வழிபடுவது எப்படி என்பதில் பல குழப்பங்கள் இருக்கும்.

நவகிரகங்கள் :

பொதுவாக சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஏழு கிரகங்களையும் இடம் இருந்து வலமாக சுற்ற வேண்டும் எனவும் ராகுவையும் கேதுவையும் வலம் இருந்து இடமாக சுற்ற வேண்டும் என்று பலரும் நினைப்பதுண்டு.ஆனால் இது தவறான முறையாகும்.

ஒவ்வொருவருக்கும் பூர்வ புண்ணியத்தின் படி தான் உங்கள் ஜாதகத்தில் கிரக நிலை அமைந்திருக்கும். அனைத்து ஜாதகத்திலும் கிரகநிலை சாதகமாக அமைந்திருக்காது. இதன் விளைவாக தோஷங்கள் ஏற்படுகிறது, அதை நிவர்த்தி செய்ய மக்கள் கோவிலை நாடி செல்கின்றனர்.

நவகிரகங்களை வழிபடும் முறை:

முதலில் கோவிலுக்கு சென்றதும் அங்குள்ள அனைத்து தெய்வங்களையும் வழிபட்டு விட்டு பிறகுதான் நவகிரகங்களை வழிபட வேண்டும். நவகிரகங்களை வழிபடுவதில் வலபுறம்  இடபுறம்  என குழப்பிக் கொள்ளாமல் மொத்தமாக ஒன்பது சுற்று சுற்றினாலே போதும் . அதேபோல் எந்த கிரகத்தையும் கையில் தொட்டு வணங்க கூடாது .

பலன்கள்:

ஒவ்வொரு கிரகத்துக்கு ஒவ்வொரு ஆற்றல் உண்டு .முறையாக வழிபாடும் போது அதன் பலனை நாமும் பெற முடியும் .அப்படி எந்த கிரகத்தை வழிபட்டால் நம் என்ன பலனை பெறுவோம் என தெரிந்து கொள்வோம் .

  • சூரிய வழிபாடு வாழ்வில் ஆரோக்கியத்தையும் மங்கலமும் பெற்று தரும்.
  • சந்திர வழிபாடு வாழ்வில் உங்களை புகழ்பெற செய்யும்.
  • செவ்வாய் வழிபாடு தைரியத்தை தரும்.
  • புதன் வழிபாடு நல்ல அறிவையும் ,தெளிவான சிந்தனையும் பெற்று தரும்.
  • குரு (வியாழன்) வழிபாடு புத்திர பாக்கியத்தையும் செல்வத்தையும் பெற்று தரும்.
  • சுக்கிர வழிபாடு வீடு நிலம் வாங்கும் யோகம், நல்ல வாழ்க்கை துணை ஆகியவற்றை கிடைக்கச் செய்யும்.
  • சனிபகவானை வழிபட்டால் நீண்ட ஆயுளை பெறலாம்.
  • ராகு வழிபாடு பயணத்தால் நன்மையை ஏற்படுத்தி தரும்.
  • கேது வழிபாடு மோட்சம் தரும் ,ஞானம் பெருகும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும்.

மேலும் அந்தந்த கிரகங்களுக்கு உரிய கிழமைகளில் வழிபாடு செய்தால் கூடுதல் பலன்களைப் பெறலாம்.

ஆகவே இனிமேல் நீங்கள் கோவிலுக்குள் செல்லும்போது குழப்பம் இல்லாமல் தெளிவாக சென்று மனநிறைவோடும் முழு மனதோடும் வழிபடுங்கள்.

Recent Posts

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவு : இந்திய கிரிக்கெட் வீரர்களின் ‘கருப்பு பேட்ஜ்’ அஞ்சலி!

மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…

29 minutes ago

LIVE: மன்மோகன் சிங் மறைவு முதல்… அடுத்தடுத்த அரசியல் நிகழ்வுகள் வரை!

டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…

29 minutes ago

மன்மோகன் சிங் மறைவு – அரசியல் தலைவர்கள் இரங்கல்! மோடி முதல் ஸ்டாலின் வரை…

டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…

1 hour ago

மன்மோகன் சிங் மறைவு – 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு! இறுதிச்சடங்கு எப்போது?

டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…

2 hours ago

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு… மருத்துவமனை அறிக்கை.!

டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…

3 hours ago

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (27/12/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…

13 hours ago