சித்ரா பௌர்ணமி 2024-சித்ரா பௌர்ணமியின் சிறப்புகள் மற்றும் வழிபாட்டு முறைகளை இப்பதிவில் காணலாம்.
பௌர்ணமி என்றால் முழுமை என்று பொருள் .அதுவும் தமிழ் வருடத்தில் முதல் மாதமான சித்திரை மாதமும், சித்திரை நட்சத்திரமும், பௌர்ணமி திதியும் ஒன்றினையும் நாளே சித்ரா பௌர்ணமி ஆகும்.இது சித்திரப்பூர்ணிமா என்றும் அழைக்கப்படுகிறது.
மேலும் சூரியனின் மறைவும் சந்திரனின் உதயமும் இன்றைய தினத்தில் ஒரே நேரத்தில் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அழகைக் காண ஏராளமான மக்கள் கன்னியாகுமரி கடற்கரைக்கு செல்வது வழக்கம்.
சித்ரா பௌர்ணமி ஏப்ரல் 23, 2024- சித்திரை பத்தாம் நாள் வர இருக்கிறது. இந்நாளில் நம் வழிபாடுகளை செய்வதால் மன கவலை நீங்கி, மன ஆரோக்கியம் பெருகும், குடும்ப ஒற்றுமை நிலைக்கும் ,செல்வம் விருத்தியாகும்.
சந்திரனுக்கும் நம் மனதிற்கும் நிறைய தொடர்புண்டு இதனால் இந்த நாளில் தியானம் மேற்கொள்வதால் உடலில் உள்ள கிரீட சக்கரம் மற்றும் இதய சக்கரத்திற்கு இடையே தொடர்பை ஏற்படுத்தும்.
இன்றைய நாள் சித்திரகுப்தர் பிறந்த தினம் ஆகும். இந்நாளில் சித்ரகுப்தரை வழிபாடு செய்வது மிகச் சிறப்பாகும். காஞ்சிபுரத்தில் சித்ரகுப்தருக்கு தனி கோவில் உள்ளது. இங்கு சித்திரகுப்தருக்கும் சித்ரலேகாவிற்கும் திருக்கல்யாணம் நடத்தப்படும்.
சித்திரகுப்தரை வழிபாடு செய்வதால் பாவம் செய்யக்கூடிய நம் எண்ணங்களை மாற்றி நல்ல எண்ணங்களை ஏற்படுத்திக் கொடுப்பார். ஆனால் நாம் செய்த பாவத்தை மறைத்தோ குறைத்தோ எழுத மாட்டார் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இனிமேல் பாவம் செய்யும் எண்ணத்தை வராமல் பாதுகாப்பார். அவருக்கு நோட்டும் பேனாவும் வைத்து வழிபாடு செய்யலாம். இன்றைய தினம் சத்திய நாராயண பூஜை செய்ய உகந்த தினமாகும்.
மேலும் கிரிவலம் செய்ய உகந்த நாளாகும். சிவபெருமானை வழிபாடு செய்து இந்நாளில் கிரிவலம் செல்லலாம் .மேலும் மலை மேல் இருக்கும் இறைவனை கிரிவலம் செய்வது மிகச் சிறப்பாகும்.
அது மட்டுமல்லாமல் குலதெய்வ வழிபாடு, அம்மன் வழிபாடு செய்யவும் உகந்த நாள். கடற்கரை, ஆற்றங்கரையில் உள்ள இறைவனை வழிபாடு செய்து அன்று இரவு சந்திர ஒளி நம் மீது படும் படிஇருக்கவும் . தியானம் மேற்கொள்வது சிறப்பாகும்.
இன்றைய தினத்தில் நான் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபோகம் நடைபெறும். இந்திரன் தீர்த்த யாத்திரை மேற்கொண்டு சிவ பூஜை செய்த தளமாக மதுரை கூறப்படுகிறது.
அதுவும் சித்திரை பௌர்ணமி அன்று அவர் இந்திர பூஜை செய்ததாக கூறப்படுவதால் இன்றும் சித்ரா பௌர்ணமி அன்று இந்திர பூஜை விழா மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறுகிறது. இதை காண இந்திரன் வருவார் எனவும் நம்பப்படுகிறது.
ஆகவே மனோகாரரான சந்திரன் வலுப்பெற்ற தினமாக இந்நாளில் நாம் வழிபாடு செய்தோமேயானால் நம் மனக் கவலை,மனக்குழப்பங்கள் நீங்கும் .
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…