ஆடி மாதத்தின் வியப்பூட்டும் அறிவியல் ரகசியங்களை தெரிஞ்சுக்கோங்க.!.
Devotion– ஆடி மாதத்தில் மட்டும் ஏன் கூல் ஊற்றுகிறார்கள், ஏன் சுப நிகழ்வுகளை தள்ளி வைத்து என்றும், திருமண தம்பதிகளை பிரித்து வைப்பதற்கான காரணங்களும் ,எதற்காக இந்த ஆடி மாதத்தில் பூமி பூஜை செய்வதில்லை என்பதை எல்லாம் பற்றி இப்பதிவின் காணலாம்.
ஆடி மாதமும் அறிவியல் காரணமும் ;
நம் முன்னோர்கள் செய்த ஒவ்வொரு செயல்களிலும் ஒரு அறிவியல் காரணம் உள்ளது. அதன் அடிப்படையில் ஆடி மாதம் பல அறிவியல் காரணங்களை புதைத்து வைத்துள்ளது. 12 மாதங்களில் ஆடி மாதம் தான் சிறந்த மாதம். ஏனெனில் தமிழனின் வழிபாட்டில் பெண் தெய்வ வழிபாடு அந்த காலம் முதல் இன்று வரை பின்பற்றப்படுகிறது.அதிலும் அம்மன் வழிபாட்டிற்கு சிறந்த மாதம் ஆடி மாதம் எனவும் கூறப்படுகிறது.
கூழ் ஊற்றுவதன் அறிவியல் காரணம் ;
1990 காலகட்டத்தில் அம்மை நோய் பாதிப்பு அதிகம் இருந்தது. 150 ஆண்டுகளுக்கு முன் இந்த நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் பல ஆயிரம் மக்கள். இன்று கொரோனா எப்படியோ அதுபோல் அன்று அம்மை நோய். ஒரு நோய் வந்த பின் அதற்கான மருத்துவ சிகிச்சையை மேற்கொள்வதை விட அது வருவதற்கு முன் செய்வதுதான் சிறந்தது .அதன் அடிப்படையில் தான் சங்க கால தமிழர்கள் ஆன்மீகத்தை வைத்து அறிவியலை புதைத்துள்ளனர்.
ஆடியில் அம்மனுக்கு எலுமிச்சை, கூழ் ,வேப்பிலை போன்றவற்றை முன்னிலையில் வைத்து வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் அதற்குப் பின்னால் ஒரு காரணமும் உள்ளது. ஆடி மாதத்தில் நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதற்கு காரணம் அந்த மாதத்தில் ஏற்படும் தட்பவெப்ப நிலை தான். வெப்பம், வறட்சி, காற்று போன்றவை அதிகமாக இருக்கும் .இதனால் பல நோய்கள் தாக்கி நோய் எதிர்ப்பு சக்தியும் குறைக்கிறது.
கேழ்வரகு மற்றும் ராகி அதிக எதிர்ப்பு சக்தியை கொண்ட உணவாகும். ஆனால் அந்த காலத்தில் வசதி படைத்தவர்களிடம் மட்டுமே இருந்தது .ஏழை மக்களிடம் தட்டுப்பாடாக இருந்தது. இதனை கருத்தில் கொண்டு ஆன்மீகத்தை வைத்து திருவிழாக்கள் நடத்தப்பட்டது.
மேலும் அம்மனுக்கு கூல் ஊற்றினால் சகலவித நன்மையும் கிடைக்கும் என கூறவும் வசதி படைத்தவர்கள் அம்மனுக்கு வைத்து பூஜை செய்து பிறகு அன்னதானமாக வழங்கினார். இதன் மூலம் அனைத்து மக்களுக்கும் இந்த உணவு கிடைத்தது இப்படி அனைவருக்கும் இந்த உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த ஆடி மாதத்தில் திருவிழாக்களும் வழிபாடுகளும் மேற்கொள்ளப்பட்டது.
ஆடி காற்றில் அமையும் நகரும் என்பார்கள் இந்த காற்றின் மூலம் பல நோய்கள் பரவும் இதை தடுப்பதற்காகத்தான் வேப்பிலை மற்றும் எலுமிச்சையை மாலையாக செய்து வீட்டு வாசலிலும் கோவிலிலும் கட்டப்பட்டது.
விவசாயம் செய்ய உகந்த மாதம் ;
‘ஆடி பட்டம் தேதி தேடி விதை’ ,”தை பிறந்தால் வழி பிறக்கும்” இதன் அடிப்படையை கொண்டு தான் ஆடி மாதம் விவசாயத்திற்கு என்று ஒதுக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் ஆடி மாதம் பருவமழை தொடங்கும் காலமாகும் இந்த காலத்தில் விவசாயம் தொடங்கினால் விளைச்சல் கார்த்திகை மார்கழி மாதங்களில் அமோகமாக கிடைக்கும். இதன் மூலம் வரும் வருமானத்தை வைத்து தை மாதங்களில் தங்களுடைய வீடுகளில் சுப நிகழ்ச்சிகளையும் திருவிழாக்களையும் கொண்டாடி வந்தனர்.
மேலும் இந்த மாதங்களில் தான் தமிழக ஆறுகளில் நீர்வரத்து அதிகமாக இருக்கும் இந்த வாய்ப்புகளை தவறவிடக்கூடாது என்றும் தங்களுடைய கவனத்தை விவசாயத்தைத் தவிர வேறு எதிலும் வைக்க கூடாது என்று தான் திருமணம் போன்ற வீட்டு நிகழ்வுகளை தள்ளி வைத்தனர்.
ஆடி மாதத்தில் புதுமண தம்பதிகளை பிரித்து வைப்பதற்கான காரணம்;
ஆடி மாதத்தில் தம்பதிகள் இணைந்து விட்டால் மருத்துவ கணக்கின்படி குழந்தை சித்திரை மாதத்தில் பிறக்கும் .அந்த மாதத்தில் கடும் வெயில் நிலவும். இதனால் தாய்க்கும் சேய்க்கும் பல உடல் பிரச்சினைகள் ஏற்படும் இதனை தவிர்க்க தான் இவ்வாறு வைத்துள்ளனர்.
மேலும் ஆடி மாதத்தில் பூமி பூஜை போன்ற வீடு கட்டுதல் பணி செய்வதில்லை. இதற்கும் ஒரு அறிவியல் காரணம் உள்ளது. இந்த மாதம் பூமி தெற்கு திசை நோக்கி நகரும் போது நில அதிர்வுகளை ஏற்படுத்தும். அது மட்டுமல்லாமல் பலத்த மழை மற்றும் காற்று இருக்கும். அதனால் தான் கட்டுமான பணிகளை தொடங்குவதை தவிர்த்தனர்.
இப்படி ஆன்மீகத்திற்குள் இவ்வளவு நுட்பமான மருத்துவத்தையும்அறிவியலையும் வைத்து தன் அறிவிற்கு எல்லை இல்லை என்று நம் முன்னோர்கள் உணர்த்தி சென்றுள்ளனர். ஆனால் இன்று அறிவியல் காரணங்கள் மறைக்கப்பட்டு ஆன்மீகம் மட்டும் நம் முன்னால் நிறுத்தி விட்டார்கள்.