திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

இந்த சிலை சர்வ தேவதா சமன்வையா என்கிற ஆகம விதிப்படி அமைந்த அற்புத சிலையாக கருதப்படுகிறது. அதாவது ஒரே சிலையில் பல கடவுள்கள்  உருவத்தை காண்பதாகும்

thirupathi perumal (1)

சென்னை –திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

மூலவர் சிலையின் விளக்கு ;

திருப்பதி வெங்கடாசலபதியின் சிலைக்கு முன் இருக்கும் விளக்கானது  முதலில் யார் ஏற்றியது என்ற எந்த குறிப்புகளும் இன்று வரை கிடைக்க இல்லை .கோவில் நிர்வாகமானது அந்த விளக்கு அணையாமல் இருக்க வெறும் எண்ணெயை மட்டுமே ஊற்றி வருகின்றனர்  என கூறப்படுகிறது. மூலவர் சிலை நடுவில் இருப்பதாக நம் கண்களுக்கு தோன்றும் ஆனால் உண்மையிலேயே கற்ப கிரகமான மூலவர்  சிலை வலப்புற மூலையின்  ஓரம் இருப்பதாக கூறப்படுகிறது.

பெருமாளின் பா வடிவ நாமம் உருவான கதை;

வைஷ்ணவத்தில் தென்கலை வடக்கலை என இரு பிரிவுகள் உள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன் வெங்கடாசலபதிக்கு எந்த வகை திலகம் இடுவது  என்ற விவாதம் இரு பிறவினர்களுக்கும் ஏற்பட்டது. இதில் வடக்கலை பிரிவினர் U வடிவ திலகம் இடவேண்டும் என்றும் தென்கலை பிரிவினர் Y  வடிவத்தில் திலகம் இடவேண்டும் என்றும் கூற விவாதம் பெரிதானது . இருவரும் ஹைதராபாத் நிஜாமிடம் முறையிட்டனர். ஆனால் அவர் இருவருக்கும் இல்லாமல் ப எழுத்து வடிவத்தில் திலகம் சூட்ட ஆணையிட்டார்.

பெருமாளின் தாடையில் கற்பூரம் சாத்த காரணம் ;

வியாழக்கிழமை பெருமாளை அலங்காரம் இல்லாமல் பார்க்கலாம் இதை நேத்ர தரிசனம் என்று கூறுகின்றனர். திருப்பதியில்  பெருமாளின் தாடை பகுதியில் பச்சைக் கற்பூரம் சாத்தப்படுகிறது. இதற்கும் ஒரே காரணம் சொல்லப்படுகிறது. கோவிலின் நுழைவாயிலில் கடப்பாரை ஒன்றை பார்க்கலாம் இதை வைத்து தான் ஆனந்தாழ்வார் பெருமாளை தாடையில் தாக்கினார் என சொல்லப்படுகிறது. இதனால்தான் பெருமாளுக்கு தாடையில் சந்தனம் மற்றும் கற்பூரம் சாத்தப்படுவதாக கூறப்படுகிறது.

மூலவர் சிலையின் மர்மங்கள் ;

பெருமாளின் சிலையானது எப்போதுமே 110 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையிலேயே இருக்குமாம். மேலும் சிலையிலிருந்து வியர்வை சுரப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த வியர்வை வியாழக்கிழமை நாட்களில் அதிகமாக சுரக்கின்றது என அங்குள்ள அர்ச்சகர்கள் கூறுகின்றனர். பெருமாளுக்கு நெய்வேத்தியமாக ஒரு பானையில் தயிர் சாதம் பிரசாதமாக வைக்கப்படுகிறது. பெருமாளுக்கு சாத்தப்படும் உடையானது 29 முழம் நீளமும் 6 கிலோ எடையும் கொண்டது. இந்த உடை பிரத்தியேகப்பட்டுத்துணியால் செய்யப்படுவதாகும். வெள்ளிக்கிழமைகளில் பெருமாளுக்கு ஆடை சாத்துவது சிறப்பாக கூறப்படுகிறது.

மேலும் மூலவர் சிலையானது 9 அடி  அங்குலம் 9அடி  உயரமும் கொண்டது. பெருமாளுக்கு நான்கு  கைகள் இருப்பதற்கு ஒரு ரகசியம் சொல்லப்படுகிறது. மேலிருக்கும் இரண்டு கைகளில் சங்கு மற்றும் சக்கரத்தை தாங்குவது போன்று இருக்கும் ஆனால் அது உண்மை கிடையாது. ராமானுஜர் காலத்தில் அணிவிக்கப்பட்ட அணிகலனாக  சொல்லப்படுகிறது .கீழே இருக்கும் இரு கைகள் கட்டி வரதா என்ற இரு முத்திரைகளை காட்டுவதாக அமைந்துள்ளது.

இந்த பெருமாள் சிலைக்கு நீண்ட கூந்தலும் உள்ளது, இது துர்க்கை அல்லது சக்தியை குறிப்பிடுவதாகவும் உடலில் உள்ள பாம்புகள் சிவபெருமானை குறிப்பதாகவும், கையில் காட்டும் முத்திரைகள் முருகப்பெருமானை குறிப்பதாகவும், மார்பில் உள்ள லட்சுமி தேவி மற்றும் நான்கு கரங்களும் விஷ்ணுவை குறிப்பதாகவும் உள்ளதால் இந்த சிலை சர்வ தேவதா சமன்வையா என்கிற ஆகம விதிப்படி அமைந்த அற்புத சிலையாக கருதப்படுகிறது. அதாவது ஒரே சிலையில் பல கடவுள்கள்  உருவத்தை காண்பதாகும். இவ்வாறு  திருப்பதியில் பல மர்மங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்