காக்கும் கடவுளாக இன்றும் மக்கள் மனதில் இருப்பதில் முதலாவதாக வருவது பைரவர்.இவர் நன்னை வணங்கும் பக்தர்களின் துயரை போக்கி அவர்களை காத்து ரட்சிக்கும் காவல் தேவமாக திகழ்பவர் காலபைரவர்.
சனிஸ்வரனின் குருவானவர்,சனி கிரகம் பயப்படும் ஒரே தெய்வம் ஆவார்.இவரின் கருணை பார்வை கிடைக்க பெறுபவர் யோகம் பெற்றவர் ஆவர்.காரணம் பைரவரின் கடைக்கண் பார்வைக்கே அத்தனை மகிமை உண்டு.அப்படி இருக்கையில் அவருடை அருட்பார்வை கிடைக்கின்ற பட்சத்தில் எல்லா வளங்களையும் அள்ளித் தருபவர் தான் பைரவர்.
எவ்வாறு அவரின் அருளை பெறுவது என்று நினைக்கும் தங்களுக்கு இதோ அவரை மகிழ்விக்கும் வழிப்பாட்டு வழிமுறைகள் காலபைரவருக்கு உரிய நாளான அஷ்டமி வழிபாடானது மிகச்சிறப்பு வாய்ந்தது,இன்னும் குறிப்பிட்டு சொன்னால் இவரை அஷ்டமி தோன்றல் என்று தான் அழைப்பார்கள்.
அவ்வாறு வரும் எட்டாவது திதி நாள் எனப்படுகின்ற வளர்பிறை மற்றும் தேய்பிறை என்ற இரண்டு பிறைகளிலும் வருகின்ற எட்டாவது திதிநாட்கள் தான் பைரவ வழிபாட்டிற்கு உரியவை.
இந்த இரு அஷ்டமிகளில் ஒன்றான தேய்பிறை அஷ்டமியில் விரதம் இருந்து சிவனின் தோன்றலான பைரவரை வழிபடுவதற்குரிய நாள்.ஞாயிற்று கிழமை மாலை 4.30-5.30 மணி வரையிலான காலம் பைரவ வழிபாட்டிற்கு உகந்த நாள் மற்றும் நேரமாகும்.
மேலும் நவக்கிரக தோஷங்கள் மற்றும் சனி தோஷம் நீங்க சதுர்கால பைரவரை செவ்வரளி பூவால் 9 வாரங்கள் “ஸ்கஸ்ரநாமா” அர்ச்சனை செய்தால் சகலமும நலன் பெரும்.இது மட்டுமல்லாமல் குழந்தைப்பேறு கிடைக்க தம்பதியர் காலை பைரவரை ஆறு தேய்பிறை அஷ்டமிகளில் சிவப்பு நிறப் பூக்களால் அர்ச்சனை செய்தால் உடனே பலனை கண்கூடாக பக்தர்கள் அறிய முடியும்.
வறுமையால் வாடுபவர்கள் வளர்பிறை அஷ்டமி மாலை நேரத்தில் வில்வம் மற்றும் வாசனை மலர்களால் அஷ்டோத்திரமே அர்ச்சனை செய்து பைரவருக்கு 11 பைரவ தீபங்கள் ஏற்ற வழிபாடு நடத்த வேண்டும். இவ்வாறு தொடர்ந்து அஷ்டமிகளில் வழிட்டு வர வறுமை நீங்குவதை காண்பீர்கள். இதில் தங்கள் இழந்த சொத்தைத் திரும்பவும் பெற பைரவருக்கு 11 அஷ்டமிகள் பைரவ தீபங்கள் ஏற்றி வழிபட சொத்து மீண்டும் பைரவர் அருளால் கைக்கூடும் ( மிளகை சிறு மூட்டையாகக் கட்டி நெய் அல்லது நல்லெண்ணை இட்டு தீபம் ஏற்றுவதே பைரவ தீபம்) என்பதை நம் அவருக்கு ஏற்ருவதம் மூலம் அவரின் அருளை பெறலாம்.
படாது பாடாய் படுத்தும் சனி தோஷம் ஏற்படுத்தகே கூடிய saniஸ்வரர் தன்னுடை குருவின் முன்னர் தங்களை வணங்கும் பக்தர்களை துன்புறுத்த மாட்டேன் என்று வாக்கி அளித்துள்ளார்.அதன் படி பைரவரை வணகுபவர்க்கு தீமை அளிக்கமாட்டார் சனி .இதற்கு பரிகாரமாக பைரவருக்கு 9 சனிக்கிழமைகள் சிவப்பு நிறப் பூக்களால் அர்ச்சனை செய்து 4 மிளகு பைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும்.இதனால் சனியின் தாக்கம் குறையும். திருமணத் தடை நீங்கவில்லை என்று கல்ங்குபவர்கள் ஞாயிற்று கிழமை இராகு காலத்தில் பைரவருக்கு திருநீறு அபிஷேகம் செய்து மிளகு வடை மாலை சாத்தி அர்ச்சனை செய்து வழிபட திருமண தடை நீங்கும்.
மேலும் தன் பகைபயத்தை நீக்குபர் இவருக்கு 9 முறை அர்ச்சனை செய்யது வசதிக்கு ஏற்ப நிவேதனங்கள் செய்து வழிபட வேண்டும்.9 கிழமைகள் இவ்வாறு செய்து வழிபடுவதால் வியாபாரத்தில் ஏர்பட்ட நஷ்டம் விலகி எல்லாத் தொல்லைகளும் உங்களை விட்டு அகலும் சுழலை உருவாக்குகிறார்..
“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் “தீராத் நோய்கள் தீர பைரவருக்கு பைரவ ஹோமமும் மற்றும் அபிஷேகமும் செய்து வழிப்பட்டு வர நோய்கள் நீக்குகிறது. பைரவரின் அபிஷேக தீர்த்தத்தை உட்கொள்ள பிணிகள் தீரும் அதிசிய ந்ஹிகழ்வு நடைபெறுகிறது.பில்லி,சூனியம் போன்றவற்றை ஒழித்து தீய சக்திகளை அழித்து ஒடுக்குபவர்.
வீட்டில் செல்வம் செழிக்க வேண்டும் என்றால் வளர்பிறையில் வருகின்ற அஷ்டமி நாளில் களில் சதுர்கால பைரவருக்கு சொர்ணபுஷ்பம் அல்லது 108 காசுகளால் அர்ச்சனை செய்ய வேண்டும். அர்ச்சனை செய்த அந்தக் காசுகளை வீட்டில் பணப் பெட்டி அல்லது அலுவலகம் வைப்பதன் முலமாக செல்வம் செழிக்கும்.
இத்தகைய சிறப்பு படைத்த பைரவரை அஷ்டமி திதி வரும் நாளில் விரதம் இருந்து வழிபட்டால் வளங்களை அள்ளி வழங்கும் கோடை வள்ளலாக காட்சி அளிப்பவர். விரதம் இருப்பவர்கள் இந்த நாளில் பழங்கள் மட்டுமே உண்டு பைரவரை அர்ச்சிக்க வேண்டும்.பைரவர் வழிப்பாடுக்கு என்றே சிறப்பு பெற்ற தளங்களுக்கு சென்று வழிபாடு செய்யுங்கள்.தினந்தோறும் காலையில் பைரவ காயத்ரி மந்திரத்தை சொல்லி வருவதால் சகல வித நன்மைகளையும் பெற்று பைரவரின் ஆசியை பெறுங்கள்.
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த…
ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…