சித்திரை அமாவாசை அன்று உங்கள் கடன் தீர இந்த எளிய பரிகாரத்தை செய்து வாருங்கள்.
இன்று இந்த வருடத்தின் முதல் அமாவாசை திதியான சித்திரை அமாவாசை திதி ஆகும். இன்று நீங்கள் எப்போதும் எப்படி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பீர்களோ அதேபோல் திதி தர்பணங்களை கொடுத்து விடுங்கள். இன்று குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது மிகவும் சிறந்தது. உங்களின் கடன் தீர இன்று என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இந்த பரிகாரத்தை செய்ய வேண்டிய நேரம் காலை 6 மணி முதல் 7 மணி வரை அல்லது மாலை 6 மணி முதல் 7 மணி வரை ஆகும். ஒரு சிறிய சதுர வடிவ மஞ்சள் துணியை எடுத்து கொள்ளுங்கள், மேலும் ஒரு கைப்பிடி கல்லுப்பு தேவைப்படும்.
பூஜை அறையில் அமர்ந்து கொண்டு முதலில் உங்கள் குலதெய்வத்தின் பெயரை மூன்று முறை கூறி உங்கள் கடன் தீர வேண்டும் என்று மனதார வேண்டி கொள்ளுங்கள். பின்னர் உங்கள் கையில் இருக்கும் கைப்பிடி கல்லுப்பை அந்த மஞ்சள் துணியில் வைத்து விடுங்கள். பிறகு ஒரு பிரியாணி இலையில் உங்கள் கடன் தொகையை எழுதி அந்த கடன் தீர வேண்டும் என்று எழுதி கொள்ளுங்கள். இதனையும் அந்த மஞ்சள் துணியில் வைத்து, இதனுடன் ஒரு துண்டு வசம்பை வைத்து முடிச்சி போட்டு கொள்ளுங்கள். இந்த மஞ்சள் துணியை வீட்டின் நிலைவாசல் முகப்பில் கட்டி விடுங்கள். அடுத்த அமாவாசை அன்று இதில் இருக்கும் உப்பை மட்டும் எடுத்து தண்ணீரில் கரைக்க வேண்டும்.
அப்படி கரைக்கும் போது உங்கள் கடன் கரைய வேண்டும் என்று நினைக்க வேண்டும். பின்னர் புதிய ஒரு கைப்பிடி கல்லுப்பை அந்த மஞ்சள் துணியில் வைத்து ஏற்கனவே இருந்த பிரியாணி இலை, வசம்புடன் கட்டி விடுங்கள். இதேபோன்று மாதம் மாதம் வரும் அமாவாசையில் செய்ய வேண்டும். உங்கள் கடன் கரைந்து வருவதை நீங்கள் உணர்வீர்கள். நம்பிக்கையோடு செய்து வாருங்கள், உங்கள் கடன் பிரச்சனை தீரும். உங்களுக்கு நகை கடன் இருந்தால் பிரியாணி இலையில் நகைக்கடன் தீர வேண்டும் என்று எழுதி கொள்ளுங்கள்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…