ஈஷா யோகா மஹா சிவராத்திரி விழா கொண்டாட்டம் !!!!!
- கோவை ஈஷா யோகா மையத்தில் கடந்த 4 ந் தேதி மஹா சிவராத்திரி விழா மிகவும் சிறப்பாக நடை பெற்றது.
- இந்த விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
கோவை ஈஷா யோகா மையத்தில் கடந்த 4 ந் தேதி நடை பெற்ற மஹா சிவராத்திரி விழா மிகவும் சிறப்பாக நடை பெற்றது. இந்த நிகழ்வில் லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள். இந்த நிகழ்வில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டார்.
ஈஷா யோகா மையத்தில் ஆண்டுதோறும் மஹா சிவராத்திரி விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.இந்நிலையில் சிவராத்திரி அன்று பஞ்சபூத ஆராதனையுடன் மாலை, 6:00 மணிக்கு சிவராத்திரி விழா தொடங்க பட்டது. மேலும் இந்த நிகழ்வின் போது காஷ்மீர் புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் நினைவாக மகிழம்’ மரக்கன்று நடப்பட்டது. காஷ்மீர் புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இவ்விழாவில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இந்த நிகழ்வில் உள்ளூர்,வெளியூர்,வெளிநாடுகளை சேர்ந்த பக்தர்களும் கலந்துக்கொண்டார்கள். பின்னர், பல்வேறு நாடுகளை சேர்ந்த கலைஞர்களின் பாரம்பரிய இசை, நடனங்கள் அரங்கேறியது.
சத்குருவுடன், ஜனாதிபதி, ஆராதனையில் பங்கேற்றார். மேலும் இந்த நிகழ்வில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், அமைச்சர்கள் வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்றார்கள். அதற்கு பின்பு சத்குரு நடுநிசியில், 112 அடி ஆதியோகி சிலை முன் ‘சம்போ’ மந்திரத்தை மக்களுக்கு வழங்கினார்.
பின்பு அவர் பேசியதாவது, நமது குடியரசு தலைவர் ஈஷா யோகா மையத்துக்கு வருகை தந்து மஹா சிவராத்திரி விழாவில் பங்கேற்றது மிகவும் பெருமை அளிக்கிறது. மேலும் ஆதியோகி என்பவர் இறந்த காலத்தை சேர்ந்தவர் அல்ல. ஆதியோகி எதிர்காலத்துக்கானவர் என்றும் கூறினார்.
மேலும் அவர் யோகா என்னும் அற்புத கருவியை ஜாதி, மதம், இனம், தேசம் கடந்து அனைவருக்கும் நன்மை பயக்கும் விதமாக இந்த உலகம் முழுவதும் கொண்டு சேர்க்க வேண்டும்.
ஆதியோகி மனிதன் தன் உச்சபட்ச நிலையை அடைய முடியும் என, 15 ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் இந்த உலகத்திற்கு உணர்த்தியவர் என்று கூறினார். மேலும் நாம் மதங்களை தாண்டி, மனிதநேயத்துடன் வாழ வேண்டும் என்றும் அவர் பேசினார்.