ஈஷாவில் மார்ச் 4-ம் தேதி மஹாசிவராத்திரி கொண்டாட்டம்!!பிரபல இசை கலைஞர்கள் அமித் திரிவேதி, ஹரிஹரன், கார்த்திக் பங்கேற்பு!!

Published by
Venu
  • கோவை ஈஷா யோகா மையத்தில் வரும் மார்ச் 4-ம் தேதி மஹாசிவராத்திரி விழா நடைபெறுகிறது.
  • பிரபல இசை கலைஞர்கள் அமித் திரிவேதி, ஹரிஹரன், கார்த்திக் பங்கேற்கின்றனர்.

கோவை ஈஷா யோகா மையத்தில் வரும் மார்ச் 4-ம் தேதி மஹாசிவராத்திரி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதில் பிரபல இசையமைப்பாளர்கள் திரு.அமித் திரிவேதி, திரு.ஹரிஹரன் மற்றும் பின்னணிப் பாடகர் கார்த்திக் உள்ளிட்டோரின் இசை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

நம் கலாச்சாரத்தில் மஹாசிவராத்திரி என்பது மிக முக்கியமான ஒரு நாளாகும். குறிப்பாக, ஆன்மீக பாதையில் இருப்பவர்களுக்கு அவர்கள் உள்நிலையில் வளர்வதற்கு இந்நாள் பல்வேறு சாத்தியங்களை வழங்குகிறது. இதன்காரணமாக, கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் மஹாசிவராத்திரி விழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டு, 25-வது ஆண்டு மஹாசிவராத்திரி விழா வரும் மார்ச் 4-ம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கி மறுநாளை காலை 6 மணி வரை மிக கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

Image result for isha yoga maha shivaratri 2019

ஆதியோகி முன்பு நடக்கும் இவ்விழாவில் சத்குருவின் அருளுரை, சக்திவாய்ந்த நள்ளிரவு தியானம், மந்திர உச்சாடனைகள், லிங்க பைரவி மஹா யாத்திரை, பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்து வரும் தலைசிறந்த கலைஞர்களின் பாரம்பரிய இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள், நாட்டுப்புற இசை நிகழ்ச்சிகள், சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா குழுவினரின் இசை நிகழ்ச்சிகள் என பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக, தேசிய விருது வென்ற பிரபல இசையமைப்பாளர் திரு.அமித் திரிவேதி, மெல்லிசை வித்தகர் திரு.ஹரிஹரன், பிரபல பின்னணி பாடகர் திரு.கார்த்திக் உள்ளிட்டோர் பங்கேற்று இசை விருந்து படைக்க உள்ளனர்.

இதுதவிர, இவ்விழாவை மேலும் அழகூட்ட நூற்றுக்கணக்கான நாட்டு மாடுகள் பங்கேற்கும் நாட்டு மாடுகள் கண்காட்சி, தலைப்பாகை கட்டுதல், வீதி நாடகங்கள், பல்வகை சேலை உடுத்தும் பயிற்சி, பல மாநில உணவு அரங்கங்கள் உள்ளிட பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இந்தாண்டு, மக்களின் கண்ணை கவரும் விதமாக ஆதியோகி குறித்த பிரத்யேகமாக ‘லேசர் ஷோ’ ஒன்றும் நடத்தப்பட உள்ளது.

மஹாசிவராத்திரி விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு ஆதியோகி ஒரு வருடமாக அணிந்திருந்த 1 லட்சத்து 8 ருத்ராட்ச மணிகள் மற்றும் சர்ப்ப சூத்திரம் பிரசாதமாக வழங்கப்படும். விழாவில் பங்கேற்கும் லட்சக்கணக்கான மக்களுக்கு மஹா அன்னதானமும் வழங்கப்பட உள்ளது.

மஹாசிவராத்திரி விழாவில் கலந்துகொள்வதற்காக தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்டங்களில் தன்னார்வ தொண்டர்கள் மூலம் பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், விழா நாட்களில் கோவையில் இருந்து ஈஷா யோகா மையத்துக்கு சிறப்பு பேருந்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பேருந்து முன்பதிவுக்கு 83000 83111 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

ஈஷா மஹாசிவராத்திரி விழா தமிழ், இந்தி, ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மராத்திரி என பல்வேறு மாநில மொழிகளில் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்பட உள்ளது.

Recent Posts

போரில் வெற்றி பெற்றாரா ஹிப்ஹாப் ஆதி? “கடைசி உலகப் போர்” டிவிட்டர் விமர்சனம் இதோ!

சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…

3 mins ago

துணை முதல்வர் கேள்வி., “அரசியல் வேண்டாம்” ஒதுங்கிய ரஜினிகாந்த்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…

12 mins ago

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

2 hours ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…

2 hours ago

“சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்”…மணிமேகலை அட்வைஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…

2 hours ago

இன்னும் 10 நாளில் உதயநிதி துணை முதல்வர்.! அமைச்சர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…

3 hours ago