ஆமை மோதிரம் அணிந்தால் இத்தனை நன்மை நடக்குமா?இதனை யார் அணியக்கூடாது?
ஆமை மோதிரம் சிலர் அணிந்து பார்த்திருப்பீர்கள். இதனை அணிந்தால் அத்தனை நன்மை நடக்கும்.
பொதுவாகவே சிலர் கைகளில் ஆமை மோதிரம் அணிந்து பார்த்திருக்க வாய்ப்பிருக்கும். இதனை எதார்க்காக அணிகிறார்கள் என்ற கேள்வி அனைவரிடத்திலும் இருக்கலாம். ஆமை தசாவதாரங்களில் ஒரு அவதாரம் ஆகும். பாற்கடலில் அமிர்தம் கடைய இந்த கூர்ம அவதாரம் உடைய ஆமை மிகவும் உதவியது. மேலும், ஆமைக்கு மகாலட்சுமியின் ஆசி பரிபூரணமாக உள்ளது. இப்படிப்பட்ட ஆமை இருக்கும் மோதிரம் நாம் அணிவதால் நாம் செல்வ செழிப்போடு இருக்கலாம்.
ஆமை இருக்கும் மோதிரத்தின் அதன் தலைக்கு பின்பக்கத்தில் ஸ்ரீ என்ற எழுத்து இடம் பெற்றிருக்க வேண்டும். இதனை வலது கையில் நடு விரல் அல்லது மோதிரவிரலில் அணியலாம். அதில் ஆமையின் தலை உங்களை நோக்கி இருக்குமாறு அணிந்து கொள்ள வேண்டும். மேலும், இதனை அணியும் முன் இந்த மோதிரத்தை காய்ச்சாத பால் மற்றும் கங்கை நீரில் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பின்னர் மகாலட்சுமியின் ஸ்தோத்திரங்களை உச்சரித்து உங்களை நோக்கி ஆமை முகம் இருக்குமாறு இந்த மோதிரத்தை அணிந்து கொள்ள வேண்டும்.
இதை அணிந்து கொண்டால் அதிர்ஷ்டம் வர தொடங்கும்.மேலும், பணம் கொட்டோ கொட்டென்று கொட்டும். அந்த அளவு இந்த மோதிரத்திற்கு சக்தி உண்டு. மேலும் ஆமை தண்ணீரில் அதிகம் வாழும் என்பதால் நீர் ராசிகளாக இருக்க கூடிய கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு இது எதிராக செயல்படும். அதனால் இந்த மோதிரத்தை இவர்கள் அணிய வேண்டாம். இதனை அணிந்து கொள்பவர்களுக்கு மனம் தெளிவடைந்து அமைதியாகும். மேலும், ஐஸ்வர்யம் பெருகும்.