கோவிலில் கொடுக்கும் துளசி தீர்த்தத்திற்கு இவ்வளவு மகிமை இருக்கா?

thulasi

Devotion -துளசி தீர்த்தத்தின் நன்மைகள் மற்றும் பெருமாள் கோவிலில்  தருவது ஏன் என்ற ஆன்மீக தகவலை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

துளசி மற்றும் துளசி தீர்த்தத்தின் சிறப்புகள் ;

துளசியின் நுனிப்பகுதியில் நான்முகனும் மத்தியில் திருமாலும் அடிப்பகுதியில் சிவபெருமானும் இருப்பதாக ஐதீகம். துளசிக்கு பிரிந்தை, விஷ்ணு பிரியா, ஹரிப்பிரியா, போன்ற பல பெயர்களும் உள்ளது .பொதுவாக வைணவ ஸ்தலங்களில் பெருமாள் கோவிலில் கொடுக்கப்படும் துளசி தீர்த்தம் விசேஷமாக கருதப்படுகிறது.

அது மட்டுமல்லாமல் துளசி பெருமாளுக்கு உகந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் பச்சை கற்பூரத்தோடு சேர்த்து கொடுக்கும்போது இந்த தீர்த்தம் உடலுக்கு புத்துணர்ச்சியை தரக்கூடியதாகவும் உள்ளது. இந்த துளசி ஒரு காயகல்ப மூலிகை என சித்தர்களால் போற்றப்படுகிறது. சுத்தமான நீரை விட துளசி நீரை அருந்துவதால் ஆயிரம் மடங்கு உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும் என அறிவியல் கூறுகிறது.

துளசியில் செந்துளசி, கருந்துளசி என இரு வகை உள்ளது. அதில் கருந்துளசி சிறந்ததாக கூறப்படுகிறது .துளசி நீர் கங்கை நீருக்கு சமமாக கருதப்படுகிறது . ஒரு நந்தவனத்தில் எத்தனை வகை பூக்கள் இருந்தாலும் துளசி இல்லை என்றால் அது நந்தவனமே கிடையாது என்ற சிறப்பும் துளசிக்கு உள்ளது.

ஒருவர் துளசி மாலை அணிந்தோ அல்லது கையில்  துளசியை வைத்தோ   பூஜை செய்தால் ஆயிரம் யாகம் செய்ததற்கு பலன் கிடைக்கும். மரண படுக்கையில் இருப்பவர்களுக்கு துளசி நீரை அருந்தும் போது பெருமாள் தன்னோடு சேர்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கையும் உள்ளது.

துளசி இலைகளை எப்போது பறிக்கக் கூடாது தெரியுமா?

பௌர்ணமி ,அமாவாசை ,சஷ்டி ,மாத பிறப்பு, துவாதசி, உச்சி வேளை,  இரவு வேளை  போன்ற நாட்களிலும் எண்ணெய்  தேய்த்த பிறகும் துளசி இலைகளை பறிக்கக் கூடாது.

அதிகாலை நேரம் மற்றும் சனிக்கிழமைகளில் விரலின் நகம் படாமல் துளசி இலைகளை பறிப்பது சிறந்ததாக கூறப்படுகிறது .பறித்த மூன்று நாட்கள் வரை துளசியை பயன்படுத்திக் கொள்ளலாம். விரத நாட்கள் ,முன்னோர்களின் திதி நாட்கள் ,இறைவனை வணங்கும் வேளைகள், தானம் செய்யும் போது போன்ற நேரத்தில் துளசியை பயன்படுத்தும் போது அந்த செயல் பரிபூரண பலனை கொடுக்கும்.

முன்பெல்லாம் அனைவருக்கும் வீடுகளிலும் துளசி மாடம் இருக்கும் ஆனால் அதன் மகத்துவமும் மருத்துவமும் இக்கால தலைமுறையினருக்கு தெரியாததால் வீடுகளில் வளர்ப்பது குறைந்து வருகிறது. துளசி இலைக்கு நம் உடலின் வெப்பத்தை குறைக்கும் தன்மையும் உள்ளது. துளசி ஆன்மீகத்தில் மட்டும்  சிறப்பு பெற்றது அல்ல அறிவியலிலும் முக்கிய மூலிகை தாவரமாக உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்