ரம்ஜான் நோன்பில் இவ்வளவு ரகசியம் இருக்கா..!

Ramjan fasting

ரம்ஜான் -நோன்பு இருப்பதால் நம் உடலில் ஏற்படும் மாற்றங்களை பற்றி  இப்பதிவில் காணலாம்.

ரம்ஜான் நோன்பின் ஆரம்ப காலம்:

இஸ்லாமிய பெருமக்கள் சூரிய உதயம் முதல் அஸ்தமம் வரை தொடர்ந்து 30 நாட்கள் நோன்பு இருக்கிறார்கள் இதனால் பல உடல் ஆரோக்கியமும் மாற்றமும் ஏற்படுகிறது.

நோன்பு துவங்கும் முந்தைய நாள் எடுத்துக்கொண்ட உணவின் ஊட்டச்சத்துக்களை உடல்  உறிஞ்சி முடிக்க எட்டு மணி நேரம் ஆகும். இதற்குப் பின் உங்கள் உடலானது ஆற்றலைப் பெற கல்லீரலில் சேமித்த குளுக்கோசை நாடும். அந்த குளுக்கோஸ் தீர்ந்த பிறகு உடலானது உடலில் உள்ள கொழுப்பை ஆற்றலாக மாற்றும்.

இதனால் உடலில் உள்ள கொழுப்புகள் குறைந்து உடல் எடை குறைக்கப்படும்.  நீரிழிவு, ரத்த கொதிப்பு போன்றவை ஏற்படாமல் தடுக்கப்படுகிறது . மேலும் இந்த ஆரம்ப நாட்களில்  உடலானது நோன்பை ஏற்றுக் கொள்ள தகுதியற்றதாக இருக்கும்.

அந்த காலங்களில் உடல் சோர்வு, பலவீனம் ,தலைசுற்றல், குமட்டல் போன்றவை ஏற்படும். இவ்வாறு நிகழாமல் இருக்க உணவு அருந்தும் போது நீராகாரம் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்,

மேலும் கார்போஹைட்ரேட், கொழுப்பும் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் பிறகு எட்டாம் நாளில் உடல் நோன்பிற்கு தகுதியானதாய் விடும்.

நோன்பின் நன்மைகள் :

இவ்வாறு நோன்பு இருப்பதன் மூலம் நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ளவும், நோய் தொற்றுடன் போராடவும் இந்த காலகட்டம் உதவுகிறது. மேலும் நோன்பின் பாதி நாட்களுக்குப் பிறகு நுரையீரல் ,தோல் ,பெருங்குடல் ,சிறுநீரகம் ஆகியவற்றில் உள்ள  நச்சுக்கள்  வெளியேற்றப்படுகிறது.

மேலும் நினைவாற்றல் கவனிக்கும் திறன் போன்றவை மேம்படுகிறது. ஆனால் ஒரு மாதத்திற்கு மேல நோன்பு கடைப்பிடிப்பது தவறு என மருத்துவர்கள் கூறுகின்றனர், ஏனெனில்  உடலானது கொழுப்பை ஆற்றலாக மாற்றும் நிலை மாறி  தசைகளை ஆற்றலாக மாற்ற நேரிடும் இது ஆரோக்கியமற்றதாகும்.

ஆகவே மனிதர்களை படைத்த இறைவன் மனிதர்களுக்கு வழங்கிய வாழ்வியல் வழிகாட்டல்களில், ஒரு மாதம் நோன்பு இருப்பதும் ஒரு பகுதியாகும்.நோன்பு இருக்கும் காலகட்டத்தில் எப்படி சாப்பிட வேண்டும் ,எதை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை முறையாக கடைபிடித்தால் அதன் முழு பலனையும் பெறலாம்  .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்