தானம் என்பது வேறு தர்மம் என்பது வேறு அது எவ்வாறு வேறுபடுகிறது என்பது பற்றியும் எது உயர்ந்தது என்பது பற்றியும் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தானம்
பலனை எதிர்பார்த்து ஒருவருக்கு கேட்காமலே நாம் செய்வது தானமாகும்.உதாரணமாக இந்த தானம் செய்தால் தனக்கு இவ்வளவு பலன் கிடைக்கும் என அறிந்து செய்வதாகும் .
தர்மம்
தர்மம் என்பது ஒருவர் கேட்டு நாம் உதவி செய்வதும் அதற்கு எந்த ஒரு பலனையும் எதிர்பாராமல் செய்வதும் ஆகும்.அதாவது வலதுகையில் கொடுப்பது இடது கைக்கு தெரியாமல் இருப்பது .விளம்பரம் செய்யாமல் கொடுப்பது .
மனித வாழ்வில் தானம் மிக அவசியமானது அதைவிட தர்மம் மிக மிக அவசியம். தர்மம் செய்த பாவத்தை மீண்டும் செய்ய விடாது புண்ணியத்தை நிலைநாட்டும். நாம் இந்தப் பிறவி எடுத்ததை ஊழ்வினையின் பலன் தான். நாம் செய்த வினைகளை முடிப்பதற்காக இப்பிறவி எடுத்துள்ளோம். எந்த ஒரு தர்மம் செய்தாலும் அதன் பலனை எதிர்பார்க்காமல் செய்தால் அது நமக்கு கவசமாக இருக்கும் என பெரியோர்கள் கூறியுள்ளனர்.
தான தர்மம் பணமாகவோ, உணவாகவோ, உடையாகவோ தான் கொடுக்க வேண்டும் என்று இல்லை. ஆறுதலாக சில வார்த்தைகளைக் கூட தான தர்மமாக கொடுக்கலாம். குறிப்பாக நமக்கும் கீழ் உள்ளவர்கள் கோடி என்ற வரிகளுக்கு இணங்க நம்மை விட கஷ்டப்படுபவர்கள் உள்ளார்கள், அவர்களுக்கு நிச்சயம் உதவி செய்ய வேண்டும். அது எந்த உயிராக இருந்தாலும் சரி.
ஆகவே நம் வாழ்வில் பாவம் குறைந்து, புண்ணியம் நிலைத்திருக்க வேண்டும் என்றால் இவை இரண்டுமே செய்ய வேண்டும். அதிலும் குறிப்பாக தர்மம் செய்ய வேண்டும் ஏனெனில் தர்மம் தலைகாக்கும் நாம் செய்யும் தர்மம் நமக்கு மட்டுமல்லாமல் நம் சந்ததியினரையும் நலமுடன் வாழ செய்யும்.நம் சந்ததியினருக்கு சொத்து, பணம் சேர்த்து வைக்கிறோமோ இல்லையோ தானம் தர்மத்தை சேர்த்து வைப்போம்.தர்மம் தலைகாக்கும்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…