நகரத்தார் கோவில்களில் ஒன்றான இரணியூர் கோவில் மிக சிறப்பான கலை நயத்துடன் அமைந்துள்ள மிக பழமையான கோவிலாகும்.
இரணியனை சம்ஹாரம் தோஷம் நீங்க அருளை பெற்ற தளம் என்பதால் இவ்வூர் இரணியூர் என்று அழைக்கப்படுவதாக கூறுகின்றனர்.
கி.பி 713 ம் ஆண்டில் காருண்யா பாண்டிய மன்னர்களால் இக்கற்சிற்பக் கோவில்கள் கட்டப்பட்டது.பின்னர் மகுட தனவைசியர் என்னும் நாட்டுக்கோட்டை நகரத்தார்களில் ஒரு பிரிவினரான திருவேட்பூருடையார் என்பவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இக்கோவிலைஸ் சுற்றிலும் பாண்டிய மன்னர் கால சிற்ப கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இரணியனை சம்ஹாரம் செய்த நரசிம்மர் இரணியன் மார்பை கீறி வழுந்தோர் வேகம் மாற இரணியூர் ஈசனை வணங்கினான்.
ஈசனும் சிங்க முகமும் ,மானிட உடலும் ,மிருகத்தின் காலும்,வாலும், பறவையின் இறக்கையும், இணைந்த வீரசபேஸ்வராய் உருவெடுத்து நரசிம்மரை ஆட்கொண்டு சாந்தப்படுத்தினார் என்பது வரலாறு.
இதனால் இத்திருத்தலத்தில் அமைந்துள்ள ஈசனை ஆட்கொண்ட நாதர் என்றும் இரணிஸ்வரன் என்றும் அழைக்கப்படுகிறார்.ஆட்கொண்ட நாதரால் இத்திருத்தலத்தில் நரசிம்மர் குளிச்சி பொருந்திய நீலமேக பெருமாளாக இத்திருத்தலத்தில் கோவில் கொண்டுள்ளார்.இக்கோவில் உள்ள தூண்களில் கலை நயமிக்க சிற்பங்கள் காண்பவரை வியக்க வைக்கிறது. மேலும் இச்சிற்பங்கள் விலைமதிப்பற்ற பொக்கிஷங்களாக கருதப்படுகிறது.
ஆட்கொண்ட நாதர் சுயம்பு மூர்த்தியாக காட்சியகிக்கிறார்.இக்கோவிலில் அமைக்கப்பட்டு இருக்கும் விமானம் சுவாமி அம்சம் என்பது ஐதீகம்.
நடை அடைக்கப்பட்டிருக்கும் வேளையில் விமானத்தையே சுவாமியாக கருதி வழிபடுவது வழக்கமாக இருக்கிறது.கோவில் முன் மண்டபத்தில் இருந்து ஒரே சமயத்தில் சாமியையும் விமானத்தையும் தரிசிக்கும் விதத்தில் அமைக்கப்பட்டு இருக்கிறது.
இவற்றுள் அம்பாள் முன் உள்ள தூர்க்கை மண்டபத்தில் உள்ள தூணில் செதுக்கப்பட்டுள்ள நவதூர்க்கை சிற்ப வல்லுனர்களால் போற்றும் பொக்கிஷமாய் திகழ்கிறது.
பிற சிவாலயங்களை விட மிக முக்கியமான ஒன்று இத்திருத்தலத்தில் நவக்கிரக சன்னதியின் அருகில் மேலே குபேரர் கல்லில் செதுக்கப்பட்டுள்ள சிற்பத்தில் காட்சியாளிக்கிறார்.இரணியூர் கோவிலில் உள்ள குபேரர் தன் வாகனமான குதிரையில் உள்ளபடி கட்சியாளிக்கிறார்.மேலும் இங்கு தமிழ் வருடப் பிறப்பின்றும் ,அட்சய திருத்தி அன்றும் குபேர பூசையானது நடைபெறும்.
வரலாற்று சிறப்பு மிக்க கலைநய மிக்க கற்சிற்பங்கள் நிறைந்த இக்கோவிலினை அதிகமான பக்தர்களும் , சுற்றுலாப் பயணிகளும் கோடை விடுமுறை நாட்களில் காண வருகின்றனர்.
ஆட்கொண்ட நாதரை தரிசித்து விட்டு அங்கு ஒவ்வொரு தூணிலும் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்களை அருகில் சென்று கண்டு வியக்கின்றனர்.சிற்ப கலையில் முன்னோர்களின் செயல்மிகு திறனை ரசிக்கின்றனர்.
இத்தகைய சிறப்புக்கு சொந்தமான கோவிலானது சிவகேங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள இரணியூர் இந்த ஊரானது திருப்பத்தூர் இருந்து சுமார் 13 கீ.மீ தொலையில் உள்ளது.சென்று ஆட்கொண்ட நாதரையும் ,அழகிய சிற்பங்களையும் தரிசித்து விட்டு வாருங்கள்.
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…
ஹைதராபாத்: ஹைதராபாத்தின் செர்லப்பள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக, அதிநவீன வசதிகளுடன் கூடிய 'ஸ்லீப்பிங் பாட்'…
சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…
ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…
சென்னை :இந்த மார்கழி மாதம் கிடைக்கக்கூடிய காய்கறிகளில் ஏதேனும் ஏழு வகை காய்கறிகளைக் கொண்டு கூட்டு செய்வது எப்படி என…
HMPV வைரஸ் கொரோனா அளவிற்கு ஆபத்தானதா என்றும் இதிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி என்றும் இந்த செய்தி குறிப்பில் காணலாம்.…