தீபாவளி பண்டிகையும்… மகாலட்சுமி குபேர பூஜையும்…

Diwali Mahalakshmi Pooja

வரும் நவம்பர் 12ஆம் தேதி, தமிழ்மாதத்தின்படி, வரும் ஐப்பசி மாதம் 26ஆம் நாள் தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் அமாவாசைக்கு முந்தைய நாள் தீபாவளி தினமாக கொண்டாடப்படுகிறது.

இந்த தீபாவளி பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது என்பதற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பல்வேறு புராண கதைகள் கூறப்படுகின்றன. ஆனால், எது எப்படி ஆயினும் எல்லாம் ஒரே நாளில் தான் தீபாவளி பண்டிகையை கொண்டாடுகின்றனர் என்பது ஆச்சரியமான உண்மை.

லட்சுமி தேவி புராண கதைகள் :

 தீபாவளி பண்டிகை வரலாறு அனைத்திலும் குறிப்பிட்ட வகையில் பொதுவாக இருப்பது லட்சுமி தேவி வழிபாடு ஆகும். அதாவது பார்கடலில் தேவர்களும், அசுரர்களும் அமிர்தம் கடையும்போது மகாலட்சுமி தன்னை வெளிப்படுத்திக் கொண்டாள் என்றும், சமுத்திரகுப்தனின் மகளான மகாலட்சுமி தன்னை வெளிப்படுத்திக் கொண்ட தினத்தை குறிப்பிடும் வகையில் லட்சுமி தேவியை வழிபடுகிறோம் என்றும்.

மகாபலி என்னும் மிகவும் சக்தி வாய்ந்த மன்னர் ஒருமுறை இந்த பூமியை ஆண்ட சமயத்தில், அனைத்து கடவுள்களையும் தோற்கடித்துவிட்டு வட்சுமி தேவியை அடிமைப் படுத்தினார். விஷணு தனது ஐந்தாவது அவதாரமான வாமனன் அவதாரத்தில் ஒரு குள்ள பிராமணனாக தோன்றி உலகில் சில இடங்களை ஆள வேண்டும் என்று கேட்டார். குரு சுக்ராச்சாரியாரபின் ஆலோசனையை எதிர்த்து மகாபலி இதற்கு சம்மதித்தார் வாமனன் இந்த மூன்று உலகையும் வென்றார். மகாபலி தன் தவறுகளுக்காக தன் தலையை கொய்தார் அதன் பின்பு வாமனன் லட்சுமி தேவியை பாலியின் சிறையிலிருந்து மீட்டெடுத்தார். இதற்காக லட்சுமி தேவியை இந்நாளில் வழிபடுகிறார்கள் என்றும் இரு வேறு விதமாக புராண கதைகள் கூறப்படுகின்றன.

மகாலட்சுமி குபேர வழிபாடு : 

தீபாவளி தினத்தன்று மகாலட்சுமி வழிபாடானது குறிப்பிட்ட வழிமுறைகளை பின்பற்றி செய்யப்படுகிறது. அன்றைய தினம் வீடு மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும். வீட்டில் உள்ள பொருட்களும் சுத்தமாக இருக்க வேண்டும். ஏனென்றால் மகாலட்சுமி எப்போதுமே சுத்தத்தை விரும்புபவள். சுத்தம் இருக்கும் இடத்தில் மகாலட்சுமி இருப்பாள் என்பது ஐதீகம்.

பூஜை ஏற்பாடு :

அன்றைய தினம் அனைவரும் குளித்து புத்தாடை உடுத்தி மகாலட்சுமி மற்றும் விநாயகர் சிலைகள் அல்லது புகைப்படங்களை வைத்து பூஜிக்க வேண்டும். ஒரு சிவப்பு நிற துணியில் நவதானியங்களை குவித்து, அதில் செம்பு அல்லது பித்தளை கலசங்களை வைத்து, அதன் மேல் மாவிலை, தேங்காய் உள்ளிட்டவற்றை வைத்து பூஜைக்கு தயார் செய்ய வேண்டும்.

அதன் பிறகு லட்சுமி தேவியை மனதில் வேண்டிக்கொண்டு தீபாராதனை கட்ட வேண்டும். பிறகு முதல் பிரசாதத்தை விநாயகருக்கும், அடுத்ததாக லட்சுமி தேவிக்கும் படைக்க வேண்டும். பின்னர் வீட்டில் உள்ள அனைவரும் பிரசாதங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும். அனைவரும் நெற்றியில் திலகமிட்டுக் கொள்ள வேண்டும்.

தீபாவளி தினத்தன்று லட்சுமி குபேர பூஜையை செய்வதன் மூலம் வீட்டில் செல்வம் பெருகும். தொழில் வளர்ச்சி மேம்படும். அன்றைய தினம் வண்ண விளக்குகளால் வீட்டை அலங்கரிக்க வேண்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்