நாளை நடுக்கும் நந்தி கல்யாணம் பார்த்தால் முந்தி கல்யாணம் நடக்குமாம் ..!
திருமழபாடி நந்தி கல்யாணம் – நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் காத்திருப்பவர்கள் செல்ல வேண்டிய முக்கிய கோவிலான திருமழபாடி வைத்தீஸ்வரன் ஆலயத்தின் சிறப்பு மற்றும் அமைந்துள்ள இடம் ,இந்த ஆண்டு நந்தி திருமணம் நடக்கும் நேரம் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
ஆலயம் அமைந்துள்ள இடம்:
அரியலூர் மாவட்டம் திருவையாறிலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் கொள்ளிடம் ஆற்றங்கரையில் சுந்தராம்பிகை திரு வைத்தீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.
ஆலயத்தின் சிறப்புகள்:
நந்தி வழிபாட்டில் திருமழபாடி வைத்தியநாதசுவாமி ஆலயம் மிக சிறப்பு வாய்ந்ததாகும் .ஏனென்றால் அங்கு நடக்கும் நந்தி திருமணம் மிக பிரசித்தி பெற்றது.ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் புனர்பூசம் நட்சத்திரத்தில் நந்திய பெருமானுக்கு திருமணம் நடைபெறுகிறது.
இந்தத் திருமணத்தை காண அப்பகுதியில் உள்ள மக்கள் கடலென திரள்வார்கள் என கூறப்படுகிறது. சிவபெருமானே முன் நின்று நந்திய பெருமானுக்கும் சுயசாம்பிகைக்கும் திருமணம் நடத்தி வைத்தார் என்பது ஐதீகம்.
திருமணம் ஆகாத அல்லது திருமண தடை இருக்கும் ஆண், பெண் இங்கு வந்து நந்தியபெருமானின் கல்யாணத்தை பார்த்தால் ஒரு வருடத்துக்குள் அதாவது அடுத்த நந்தி கல்யாணம் வருவதற்குள் திருமணம் நடக்கும் என்று அனுபவப் பூர்வமாக நம்பப்படுகிறது. இது நிதர்சியான உண்மையும் ஆகும். அதனால்தான் அப்பகுதியில் நந்தி கல்யாணம் பார்த்தால் முந்தி கல்யாணம் நடக்கும் என்று கூறுகிறார்கள்.
இங்கு நவகிரக சன்னதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது, ஏனென்றால் நவகிரகங்களின் சக்தியை இறைவனே தன் ஆதிக்கத்தால் கொண்டிருக்கிறார். இதனால் பக்தர்களுக்கு ஏற்படும் நவகிரக தோஷங்களை இறைவனே முன் நின்று தீர்த்து வைப்பார் எனவும் கூறப்படுகிறது.
மேலும் இங்கு உள்ள ஸ்தல மரம் பனைமரம் ஆகும். இங்கு ஒன்பது நந்திகள் அமைந்துள்ளது. பனை மரத்தின் கீழ் நாலு நந்தி உள்ளது, இது நான்கு வேதங்களையும் குறிப்பதாகும்.
இந்த வருடம் நந்தி கல்யாணம் நடக்கும் நாள்:
பங்குனி மாதம் 6ம் தேதி மார்ச் 19, 2024 அன்று இரவு 7 மணிக்கு மேல் 8.30க்குள் நந்திய பெருமானுக்கும் சுயசாம்பிகைக்கும் திருமணம் நடைபெற உள்ளது. ஆகவே திருமணத்திற்காக காத்திருப்பவர்கள் இங்கு வந்து நந்தி திருமணத்தில் கலந்து கொண்டு உங்கள் வாழ்வில் நற்பலனை பெற்று செல்லுங்கள் .