குலதெய்வ வழிபாட்டை செய்யாமல் இருந்தால் இந்த பாதிப்புகள் வீட்டிற்கு ஏற்பட வாய்ப்புள்ளது.
பொதுவாக எந்த ஒரு காரியமாக இருந்தாலும் நாம் நமது குலதெய்வத்தை வழிபட்டு தான் ஆரம்பிப்போம். ஆனால், இன்றைய காலத்தில் பலர் குலதெய்வ கோயில் சென்று வழிபடுவது கிடையாது. அதற்காக நேரம் ஒதுக்குவதும் கிடையாது. வீட்டில் நல்ல காரியம் தொடர்பாக பத்திரிகை வைக்க தான் பலபேர் குலதெய்வ கோயில்களுக்கு சென்று வருகிறார்கள்.
ஆனால், இதுபோன்று குலதெய்வத்தை மறந்து எப்போவாவது செல்வது என்பது தவறு. அதேபோல் வீட்டில் உள்ள பூஜை அறையில் நீங்கள் உங்கள் குலதெய்வத்தின் படத்தை மாட்டி வைக்கலாம். மற்ற சாமி படங்கள் வைத்து கொள்ளுங்கள், இருந்தபோதிலும் உங்களது குலதெய்வத்தின் படம் முக்கியமாக இருக்க வேண்டும்.
உங்களின் பூஜை அறையில் உக்கிரமான தெய்வங்களின் படங்களை வைப்பதை தவிர்த்து கொள்ளுங்கள். ஏனென்றால் உக்கிர தெய்வங்களை சாந்தப்படுத்துவது என்பது எளிமையான காரியம் இல்லை. அதனால் அதனை தவிர்த்து கொள்வது நல்லது. பூஜை அறையில் சிலை வைத்து வழிபாடு செய்வதையும் தவிர்த்து கொள்ளுங்கள்.
ஏனென்றால் சிலை நீங்கள் வைத்து வழிபடுகிறீர்கள் என்றால், அதற்கு சரியான முறையில் அபிஷேகம் செய்து நெய்வேத்தியம் வைக்க வேண்டும். அதனால் வீட்டில் சிலை வழிபாட்டை தவிர்த்து கொள்வது நல்லது. அதேபோல் வீட்டில் பூஜை அறையில் வைத்துள்ள சாமிகளுக்கு தினமும் விளக்கேற்றி பூஜை செய்வது என்பது முக்கியமான ஒன்று.
நீங்கள் உங்கள் குலதெய்வத்தை தினமும் வேண்டிக்கொள்வது உங்களுக்கு பல்வேறு நன்மைகளை ஏற்படுத்தும். எல்லா நேரங்களிலும் குலதெய்வத்தின் அருள் நமக்கு இருந்துகொண்டே இருக்கும். முக்கியமாக வருடத்திற்கு ஒருமுறையாவது குலதெய்வ கோயிலுக்கு சென்று வர வேண்டும். குலதெய்வத்தின் அருள் ஒரு வீட்டிற்கு இருந்தால் நீங்கள் நினைக்கும் வரம் உங்களுக்கு கிடைக்கும்.
ஆனால் பலபேர் குலதெய்வத்தை மறந்து விடுகின்றனர். அதனால் அவர்களது வீட்டில் பல்வேறு பாதிப்புகள் தொடர்ந்து நடைபெறுவதை காண முடியும். உங்கள் குடும்பத்தில் அசுப நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தாலோ, வீட்டில் தொடர்ந்து பிரச்சனைகள் இருந்தாலோ, வீட்டில் உள்ள பிள்ளைகளுக்கு திருமணம் தடைபட்டு கொண்டிருந்தாலோ, குழந்தை பாக்கியம் கிடைக்காமல் இருந்தாலோ, தொடர்ந்து தீமை ஏதும் நடைபெற்று கொண்டிருந்தாலோ உங்களுக்கு குலதெய்வத்தின் அருள் கிடைக்கவில்லை என்று அர்த்தம்.
குலதெய்வத்தின் அருள் கிடைக்க நீங்கள் நிச்சயமாக குலதெய்வத்தின் கோயிலுக்கு சென்று வழிபாடு மேற்கொள்ள வேண்டும். குலதெய்வத்தை சாந்தப்படுத்தினால் தான் உங்கள் குறைகள் நீங்கி நிறைகள் அதிகரிக்க தொடங்கும். குலதெய்வத்தின் ஆசி நிறைவாக இருந்தால் உங்கள் வீட்டில் எல்லா நன்மைகளும் நடக்க ஆரம்பிக்கும்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…