வாழ்க்கையில் அடிமேல் அடி விழுகிறதா இந்த மந்திரத்தை ஆறு முறை உச்சரித்து வாருங்கள்..!
ஒரு சிலரின் வாழ்க்கையில் பல்வேறு கஷ்டங்கள் வந்துகொண்டே இருக்கும். இதிலிருந்து வெளிவர என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக் கொண்டிருப்பர். இது போன்ற கஷ்டங்கள் மீண்டும் மீண்டும் தொடர்ந்து வந்தால் முருகரின் இந்த மந்திரத்தை உச்சரித்துப் பாருங்கள். உங்களின் தீராத துன்பங்கள், மனக் கவலைகள் அனைத்தும் எங்கே போனது என்பது தெரியாமல் மாயமாய் மறையும். அத்தகைய சக்தி வாய்ந்த மந்திரத்தை பற்றி இந்த பதிவில் காணலாம். முருக பகவானை மனதார நினைத்து இந்த மந்திரத்தை ஆறு முறை உச்சரித்து வந்தால் உங்களின் துன்பங்கள் நீங்கும்.
நம்பிக்கையோடு இதனை செய்து பாருங்கள். ஏனென்றால் ஒவ்வொரு மந்திரத்திற்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் சக்தி இருக்கிறது. பிரணவ மந்திரமான ‘ஓம்’ என்ற மந்திரத்தை உச்சரித்தால் நமது உடலில் அடிவயிற்றில் இருந்து உச்சந்தலை வரை அதிர்வுகள் உருவாகும், அதை நம்மால் உணர முடியும்.இதைப்போன்ற ஒரு சக்திவாய்ந்த மந்திரம் தான் இந்த பதிவில் நாம் காணப்போகிறோம். இந்த மந்திரத்தை உச்சரித்தால் நம்மை சுற்றியுள்ள அனைத்துத் தீய சக்திகளும் விலகி நமக்கு அதிர்ஷ்டங்களை கொண்டு வரும்.
முருக மந்திரம்
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்,
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்,
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்,
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே..!
முருக பகவானுக்கு உகந்த நாளான செவ்வாய்க்கிழமையன்று மாலை நேரத்தில் இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். உங்கள் வீட்டு பூஜையறையில் முருகனின் சிலை இருந்தால் அதற்கு பசும்பால் கொண்டு அபிஷேகம் செய்து அலங்கரித்து பின்னர் நெய்வேத்தியம் வைக்க வேண்டும். உங்கள் வீட்டில் முருகனின் படம் இருந்தால் அதற்கு மாலை அணிவித்து அதன் முன்னால் நெய்வேத்தியம் வைத்து வழிபடவேண்டும். மனதார முருகப் பெருமானை வேண்டிக் கொண்டு உங்களின் துன்பங்கள் அனைத்தும் நீங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இந்த மந்திரத்தை 6 முறை உச்சரிக்க வேண்டும்.
கண்களை மூடி நிதானமாக முருகனை மட்டும் மனதில் நினைதது 6 முறை தொடர்ந்து உச்சரிக்க வேண்டும். இதேபோன்று ஒவ்வொரு செவ்வாய்க் கிழமைகளிலும் இந்த முருகன் மந்திரத்தை மனதார உச்சரித்து வந்தால் உங்களை ஆட்டிப் படைத்த துன்பங்கள் துயரங்கள் அனைத்தும் இருந்த இடம் தெரியாமல் அழிந்து போகும். தரையிலிருந்து உங்களை கோபுரத்தின் உச்சத்தில் அமர வைக்கும். அதனால் மனதார முருகப் பெருமானை நினைத்து இந்த மந்திரத்தை செவ்வாய்க் கிழமைகளில் ஆறு முறை உச்சரித்து வாருங்கள். முடிந்தால் இரண்டு நபர்களுக்காவது அன்னதானம் செய்யுங்கள்.
சென்னை : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாடு நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்றது. விழுப்புரம்-சென்னை சாலையிலுள்ள தனியாா்…
சென்னை : புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டியானது தொடங்கி நடைபெற்று வருகிறது. பல்வேறு மாவட்டங்களில்…
திருவனந்தபுரம் : கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் விரதம் இருந்து வரும் பக்தர்களின்…
விழுப்புரம் : விக்கிரவாண்டியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் எல்கேஜி பயின்று வந்த லியா லட்சுமி என்ற மூன்றரை வயது…
சிட்னி : இன்று பார்டர் கவாஸ்கர் தொடரின் 5வது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டம் சிட்னி மைதானத்தில் தொடங்கி…
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…