பசு மாட்டுக்கு இந்த ஒரு பொருளை வாங்கிக் கொடுத்தால் நீங்கள் கோடீஸ்வரர் ஆவீர்கள்..!
பசு மாட்டுக்கு இந்த ஒரு பொருளை வாங்கிக் கொடுத்தால் போதும், நீங்கள் கோடீஸ்வரர் ஆவீர்கள்.
வாழ்க்கையில் ஒவ்வொருவரும் வருமானத்தை பெருக்க பல்வேறு துறைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இருந்தபோதிலும், கையில் கிடைக்கும் வருமானம் வீட்டிற்குள் நுழைந்த சில மணிநேரங்களிலேயே தண்ணி போல் செலவாகி விடுகிறது. இதுபோன்ற நிலையில் இருப்பவர்கள் இந்த பரிகாரத்தை செய்தால் நிச்சயமாக உங்களது செலவு குறைந்து வருமானத்தில் சேமிக்க இயலும். மேலும், உங்களுக்கு அதிகமான வருமானம் கிடைக்க வேண்டும் என்றாலும் கையில் பணம் நிலைக்க வேண்டும் என்றாலும் இந்த ஒரு பரிகாரத்தை செய்து வரலாம். செல்வம் என்றாலே நமது நினைவிற்கு வருவது மகா லட்சுமி தாயார்.
வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமியை வழிபடுவது மிகவும் உகந்தது, இருந்தாலும் சனிக்கிழமை அன்றும் பெருமாள் கோயிலுக்கு சென்று மகாலட்சுமியை வழிபாடு செய்து வந்தால் மிகச் சிறப்பான பலன்கள் உங்களுக்கு கிட்டும். இதனை எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். சனிக்கிழமை அன்று காலை 6 மணிக்கு பெருமாள் கோவிலுக்கு சென்று பெருமாளை மனதார வேண்டி விட்டு அங்கிருக்கும் மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்யுங்கள். மகாலட்சுமிக்கு வாசனை மிகுந்த பூக்களை வாங்கிக்கொடுத்து சன்னிதானத்தில் முன்பு அமர்ந்து உங்களுடைய அனைத்து பிரச்சினைகளையும் பண கஷ்டங்களையும் தீருமாறு மனதார வேண்டிக்கொள்ளுங்கள்.
மேலும் உங்களுடைய வருமானம் அதிகரிக்க வேண்டும் என்றும் அதனை சேமிக்க வேண்டும் என்றும் வேண்டிக் கொள்ளுங்கள். வேண்டி விட்டு வீட்டிற்குத் திரும்பும்போது ஒரு கட்டு அகத்திக் கீரையை பசு மாட்டிற்கு உங்களது கையால் கொடுத்து விடுவது மிகவும் சிறப்பான ஒன்று. இதனை மதியம் 12 மணிக்குள் செய்ய வேண்டும். உங்களால் முடிந்த அளவு அகத்திக்கீரை கட்டுகளை வாங்கிக் கொடுக்கலாம். குறைந்தபட்சம் ஒரு கட்டு கீரையாவது வாங்கிக் கொடுத்தாலே போதும். இதனை ஒரு வாரம் மட்டும் செய்துவிட்டு பலன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கக்கூடாது.
தொடர்ந்து செய்து வாருங்கள் நிச்சயமாக நீங்கள் வேண்டியது நிறைவேறும். உங்களது பண கஷ்டம் தீரும். லாபம் மேலும் அதிகரிக்கும். உங்களது கையில் கிடைக்கும் வருமானம் இரட்டிப்பாகும். அதனை சேமிக்க இயலும். உங்களுக்குக் கிடைக்கக்கூடிய பணத்தை வைத்து நல்ல தர்ம விஷயங்களுக்கு பயன்படுத்துங்கள். இதனால் மேலும் உங்களுக்கு பண வரவு அதிகரிக்கும். நம்பிக்கையோடு இதனை செய்து வாருங்கள் நிச்சயம் பலன் பெறுவீர்கள்.