12 ராசிகளுக்கும் இன்றைய நாள் எப்படி இருக்கும்? இன்றைய ராசி பலன்கள்..

horoscope feb 9

தை மாதம் 26 ஆம் தேதி பிப்ரவரி9, 2024 இன்றைய நாளுக்கு உண்டான ராசி பலன்களை இங்கே பார்க்கலாம்.

மேஷம்
இன்று உங்களிடம் நம்பிக்கையும் உறுதியும் நிறைந்திருக்கும், இதனால் இலக்குகளை எளிதில் அடைவீர்கள். பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். உங்களுக்கும் உங்கள் துணைக்கும் மகிழ்ச்சி பொங்கும் நாளாக இருக்கும். பணப்புழக்கம் அதிகமாக காணப்படும் .ஆரோக்கியம் சிறப்பானதாக இருக்கும்.

ரிஷபம்
இன்று நீங்கள் அமைதியாக இருப்பது நல்லது. நீங்கள் திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி கிடைக்கும். உங்கள் துணையுடன் உறவை தக்க வைத்துக் கொள்ள சமநிலையோடு நடந்து கொள்ளவும். இன்று கூடுதல் செலவுகள் ஏற்படும். உங்கள் ஆரோக்கியத்திலும் சற்று கவனம் செலுத்த வேண்டும்.

மிதுனம்
இன்று நீங்கள் விவேகத்துடனும் நேர்மையான போக்கையும் மேற்கொள்ளவும். பணி சுமை அதிகமாக இருப்பதால் திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும். உங்கள் துணையுடன் இன்று நகைச்சுவையாக பேசுவது நல்லது. பண பற்றாக்குறை ஏற்படலாம். குளிர்ச்சியான உணவுகளை தவிர்ப்பது நல்லது.

கடகம்

கடக ராசிக்காரர்கள் இன்று உறுதியுடனும் திட்டமிட்டு செயல்படுவதன் மூலமும் வெற்றியை பெறலாம். பணிகளை அர்ப்பணிப்புடன் செய்வது நன்மையை பெற்றுத் தரும். உங்கள் துணையுடன் நட்பான அணுகு முறையில் மேற்கொள்வீர்கள். இதனால் நல்ல புரிதல் உண்டாகும். இன்று பணவரவு வர வாய்ப்புள்ளது. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

சிம்மம்

இன்று எதிர்காலத்தைப் பற்றி அதிகம் சிந்திப்பீர்கள். அதிகமாக உணர்ச்சிவசப்பட்டால் அது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். வேலை செய்யும் இடங்களில் சகப்பணியாளர்களுடனான உறவை கவனமாக கையாள வேண்டும். உங்கள் துணையுடன் அமைதியாகவும் கட்டுப்பாடான அணுகு முறையுடன் இருப்பது அவசியம். போதிய பண வரவு இருக்காது. மன உளைச்சல் காரணமாக ஆரோக்கியம் குறைவு ஏற்படும், தியானம் செய்வது சிறந்தது.

கன்னி

இன்று பதட்டமான சூழ்நிலைகள் காணப்படும், முடிவுகளை எடுக்க இன்று உகந்த நாள் அல்ல. பணிகளில் தவறு நேர வாய்ப்புள்ளது. உங்கள் துணையுடன் அகந்தை போக்கை தவிர்த்தல்   நல்லது .பண விரயம் ஏற்படும், உங்கள் தாயின் உடல் நலத்திற்காக பண செலவு செய்வீர்கள் இதனால் உங்களுக்கு கவலை ஏற்படும்.

துலாம்

இன்று நீங்கள் எதிர்பார்த்த பலன் கிடைக்காது .பதட்டமும் அவ நம்பிக்கைகளும் ஏற்படுவதால், இசை கேட்பது புத்தகம் படிப்பது போன்றவை ஆறுதலை கொடுக்கும். பணிச்சுமை அதிகமாக இருக்கும். உங்கள் துணையிடம்  குழப்பங்களை வெளிப்படுத்தாமல் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பது நல்லது. கூடுதல் செலவு ஏற்படுவதால்  கவலை ஏற்படும் . தலைவலி ஏற்பட வாய்ப்பு உள்ளது அதனால் தியானம் செய்வது நல்லது.

விருச்சிகம்

இன்று மிக வெற்றிகரமான நாளாக இருக்கும். உங்கள் செயல்களை எளிதாகவும் மகிழ்ச்சியாகவும் செய்வதால்  இலக்குகளை எளிதாக அடைவீர்கள். பணியிடத்தில் சிறப்பாக பணியாற்றுவீர்கள். உங்கள் துணையிடம் நல்ல புரிதல்கள் வளர்த்துக் கொள்ளும் நாளாக இருக்கும் .பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். உங்களின் மன உறுதி உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

தனுசு

இன்று பதட்டமான சூழ்நிலை காணப்படும், இதை தவிர்க்க இசை கேட்பது, திரைப்படம் பார்ப்பது போன்றவற்றை மேற்கொள்ளலாம். உங்கள் பணிகளில் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தவும். உங்கள் துணையிடம்  உணர்ச்சிவசப்படுவீர்கள் அதனால் அத்தகைய உணர்வை தவிர்த்தல் நல்லது. பண இழப்பு ஏற்படும் .ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை, தியானம் செய்வதன் நற்பலனை அடையலாம்.

மகரம்

இன்று அனைத்து செயல்பாடுகளிலும் எச்சரிக்கை தேவை. மேலும் பதட்டத்திற்கு ஆளாக வாய்ப்பு உள்ளது .பணிகளை முடிப்பதில் தாமதம் காணப்படும். உங்கள் துணையுடன் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது .அதிக செலவு ஏற்படும் ஆரோக்கியத்தில் குறைவு ஏற்படுவதால் சற்று கவலை அடைவீர்கள்.

கும்பம்

இன்று விரும்பிய பலன் கிடைக்காது .எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்ளவும். உங்களுக்கு வரும் தடைகளை சமாளிப்பது கடினமாக உணர்வீர்கள்.  பணியிடத்தில் கடினமான சூழல் ஏற்படுவதால் பணிகளை கவனமாக கையாள வேண்டும்.   . உங்கள் துணையுடன் நல்லுறவு பாதிக்கப்படும், நண்பர்களின் ஆலோசனைகளை கேட்டு தவறாக நடந்து கொள்வீர்கள். நிதி  நிலைமை குறைந்து காணப்படும். உங்களின் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்காக பண செலவு செய்ய நேரலாம்.

மீனம்

இன்று சிறந்த நாளாக இருக்கும். விரைவில் புனித யாத்திரைகள் செய்வீர்கள். ஆன்மீக ஈடுபாடு சிறந்த ஆறுதல் தரும். உங்கள் கடின உழைப்பால் பாராட்டு கிடைக்கும். உங்கள் துணையுடன் சுப நிகழ்ச்சிகள் குறித்து திட்டங்களை தீட்டுவீர்கள் இன்று சிறிது பண இழப்பு ஏற்படலாம். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live news tamil
tn rains
RepublicDayParade - Chennai
Nei vilakku (1)
vishal - vijayantony
Congress Leader Selvaperunthagai say about TVK Vijay
Heart Donation