சிவராத்திரி விரத வகைகள் எத்தனை தெரியுமா….?
- மஹாசிவராத்திரி இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதமாகும்.
- சிவராத்திரி விரதம் ஐந்து வகைப்படும்.
மஹாசிவராத்திரி இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதமாகும். இந்த சிவராத்திரி ஆண்டுதோறும் மார்ச் மாதம் கொண்டாடப்படுகிறது. இந்த சிவராத்திரியில் பக்தர்கள் கடைபிடிக்கும் விரதத்தின் வகைகள் பற்றி பார்ப்போம்.
சிவராத்திரி விரதம் ஐந்து வகைப்படும்.
- நித்திய சிவராத்திரி
- மாத சிவராத்திரி
- பட்ச சிவராத்திரி
- யோக சிவராத்திரி
- மகா சிவராத்திரி
விரதம் கடைப்பிடிப்போர் முதல் ஒருநாள் ஒரு பொழுது உணவருந்தி, சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து, நான்கு யாம வழிபாடு செய்யவேண்டும். அடுத்தநாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும்.