உங்கள் ராசிக்கு இன்று எப்படி இருக்கும் ?ராசிபலன்கள் ..!

Published by
K Palaniammal

மாசி மாதம் 4ம் தேதி [பிப்ரவரி 16, 2024] இன்றைக்கான ராசி பலன்களை இங்கே காணலாம்.

மேஷம்:

இன்று மகிழ்ச்சியான மனநிலையை வைத்துக்கொள்ள வேண்டும். இன்றைய நாளில் பணிகளை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும். துணையுடன் ஆன உறவில் உணர்ச்சிவசப்படுதலை தவிர்க்கவும். இன்று பணவரவு ஏற்பட்டாலும் தேவையில்லாத செலவுகளும் ஏற்படலாம். மூக்கு, வாய், தொண்டை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

ரிஷபம்:

இன்றைய நாளில் உற்சாகத்தை கடைபிடிக்க வேண்டும். பொறுமையை கடைப்பிடிப்பது மூலம் பணிகளை திறமையாக கையாளலாம். உங்கள் துணையுடன் அவரின் விருப்பப்படி நடந்து கொண்டால் சந்தோஷம் கிட்டும் .இன்றைய நாள் கூடுதல் செலவுகள் ஏற்படும். குளிர்ச்சியான உணவுகளை தவிர்ப்பது நல்லது.

மிதுனம்:

இன்று நீங்கள் புதிய முயற்சிகளில் இறங்கலாம். எடுக்கப்படும் முடிவுகளும் சரியானதாக இருக்கும். உங்கள் திறமையின் மூலம் மேல் அதிகாரிகளிடம் பாராட்டுகளை பெறுவீர்கள். உங்கள் துணையுடன் அன்னியோன்யம் பெருகும். இன்றுபண வரவு உற்சாகத்தை தரும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கடகம்:

இன்றைய நாளில் நீங்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். இன்று உற்சாகத்துடன் வேலைகளை செய்வீர்கள். உங்கள் துணையுடன் வெளியிடங்களுக்கு செல்ல வாய்ப்புள்ளது. இன்றைய பணவரவு உங்களுக்கு திருப்தி அளிக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

சிம்மம்:

இன்று எதிர்பார்ப்புகளை தவிர்த்து எதார்த்தமாக செயல்பட வேண்டிய நாள். இன்று அதிக பணிச்சுமை இருக்கும். கணவன் மனைவி உறவுக்குள்  உணர்ச்சிவசப்படுவதை தவிர்க்கவும். இன்று கூடுதல் செலவுகள் ஏற்படும். மன அழுத்தம் மூலம் முதுகு வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

கன்னி:

இன்று நீங்கள் கவலைகளால் பாதிக்கப்படும் நாள். நன்கு பணியாற்ற திட்டமிட்டு செயல்படுங்கள். உங்கள் துணையுடன் உணர்ச்சிவசப்படுவதை தவிர்க்கவும் இன்றைய நாள் செலவுகள் அதிகரிக்கும். தாயாரின் ஆரோக்கியத்திற்காக செலவுகளை செய்வீர்கள்.

துலாம்:

இன்று உங்கள் முயற்சிகள் வெற்றியடையும் நாள். உங்கள் பணியில் வளர்ச்சி காணப்படும். உங்கள் துணையுடன் அன்னியோன்யம் பெருகும். உங்கள் கடின உழைப்பிற்காக ஊக்கத்தொகை பெறுவீர்கள் .ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது.

விருச்சிகம்:

இன்று செய்யும் காரியங்கள் அனைத்தும் எளிதாக நடக்கும். முக்கியமான முடிவுகளை இன்று எடுக்கலாம். பணிகளை எளிதாக செய்வீர்கள். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள். எதிர்பாராத வகையில் பணவரவு கிடைக்கும். உங்கள் மனநிலை உங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

தனுசு:

இன்று அசவ்ரியங்கள்  ஏற்படலாம். நேர்மறை எண்ணங்களுடன் செயல்படுவது நல்லது. பணிகளை திட்டமிட்டு செய்வது அவசியம். கணவன் மனைவிக்குள் சச்சரவு ஏற்பட வாய்ப்புள்ளது. கூடுதல் செலவுகள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை, தியானம் மேற்கொள்வது சிறந்தது.

மகரம்:

இன்று சில தடைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் எதார்த்தமாக இருக்க வேண்டும். பணிகளில் அனுசரித்துப் போவதன் மூலம் திறம்பட பணியாற்ற முடியும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்படும். தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். உணவின் மூலம் ஒவ்வாமை ஏற்பட வாய்ப்புள்ளது.

கும்பம்:

இன்று மகிழ்ச்சியான மனநிலை இருக்கும். நீங்கள் வளர்ச்சி பாதையை நோக்கி செல்வீர்கள். உங்கள் மேல் அதிகாரிகளிடம் பாராட்டுகளை பெற இன்று வாய்ப்பு அமைந்துள்ளது. உங்கள் துணையுடன் நல் உறவு காணப்படும் .இன்றைய நாள் மிகவும் அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். ஆரோக்கியமும் சிறப்பாக உள்ளது.

மீனம்:

இன்றைய நாள் உங்களுக்கு மிதமான பலன்களையே தரும். நண்பர்கள் கூட விரோதியாக மாற வாய்ப்பு உள்ளது. பணிகளில் செய்ய நல்ல உத்தியை கையாளுங்கள். உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடுகள் உருவாகலாம். பண வரவும் செலவும் சமமாக காணப்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை, இறைவழிபாடு தியானம்  மூலம் நல்ல பலன்களை பெறலாம்.

Recent Posts

எறும்புகளுக்காக வளைந்து கொடுத்த சிவபெருமான்.. ஆச்சரியமூட்டும் திருத்தலம் எங்க இருக்கு தெரியுமா?.

சென்னை :எறும்பீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ள இடம் மற்றும் அதன் சிறப்புகளைப் பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம். திருத்தலம் அமைந்துள்ள…

10 minutes ago

மதுரை டங்ஸ்டன் சுரங்க விவகாரம் : அமைச்சர் துரைமுருகன் பதில்!

சென்னை : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என…

26 minutes ago

“கொடூரம் வெட்கக்கேடானது., பெண்களுக்கு பாதுகாப்பில்லை” எதிர்கட்சிகள் கடும் விமர்சனம்!

சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் ஒரு மாணவியை 2 பேர் நேற்று இரவு பாலியல்…

39 minutes ago

என் மகனை இழந்துட்டேன் ..நடிகை த்ரிஷா கண்ணீர்! என்ன நடந்தது?

சென்னை : சினிமா துறையில் இருக்கும் நடிகைகள் பலரும் ஆசையாக நாய் மற்றும் பூனைகள் போன்ற விலங்குகளை வளர்த்து வருவதை ஒரு…

1 hour ago

கஜகஸ்தான் விமான விபத்து : 42 பேர் உயிரிழப்பு!

கஜகஸ்தான்: நாட்டில் ஏர்லைன்ஸின் பாகு-க்ரோஸ்னி விமானம் மேற்கு கஜகஸ்தானின் அக்டாவ் அருகே அவசரமாக தரையிறக்க முயற்சி செய்தபோது தீ விபத்து ஏற்பட்ட…

1 hour ago

தமிழகத்தில் டிசம்பர் 31 வரை மிதமான மழைக்கே வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!

சென்னை: தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…

2 hours ago