இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும்? இன்றைய ராசி பலன்கள்.! 

horoscope 12

Today horoscope  -மாசி மாதம் 29 ஆம் தேதி [மார்ச் 12, 2024] இன்றைக்கான ராசி பலன்களை இங்கே காணலாம்.

மேஷம்:

இன்று நீங்கள் பொறுமை இழந்து காணப்படுவீர்கள், பிரார்த்தனை செய்வதன் மூலம் ஆறுதல் பெறலாம். இன்று உங்கள் பணிகளை திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். உங்கள் துணையுடன் அமைதியை கடைபிடிப்பது நல்லது. பயணத்தின் போது பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது .இன்று சுறுசுறுப்பு இழந்து காணப்படுவீர்கள் உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது.

ரிஷபம்:

இன்று இனிமையான தருணங்கள் காணப்படும், அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் வர வாய்ப்புள்ளது. பணியிடத்தில் சாதகமான பலன்கள்  காணப்படும், மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். உங்கள் துணையுடன் இனிமையான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள். பண வரவு சிறப்பாக இருக்கும் ,ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.

மிதுனம்:

இன்று நீங்கள் தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள், முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். பணியிடத்தில் வளர்ச்சி காணப்படும். உங்கள் துணையுடன் வெளியிடத்திற்கு செல்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கடகம்:

இன்று சவால்கள் நிறைந்து காணப்படலாம், மன குழப்பங்கள் ஏற்படலாம், பணிகளை திட்டமிட்டு செய்ய செய்ய வேண்டும். உங்கள் துணையுடன் அமைதியாக பேச வேண்டும். பண வரவு குறைந்து காணப்படும் .ஆரோக்கியத்தில் கவனம் தேவை ,எண்ணெய்  பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது.

சிம்மம்:

இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையாது. பொறுமையை மேற்கொள்ள வேண்டும். பணியில் தவறுகள் நேர வாய்ப்புள்ளது. உங்கள் துணையுடன் சகஜமான அணுகுமுறையை மேற்கொள்வது நல்லது. இன்று அதிக செலவுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை, இனிப்பு வகைகளை தவிர்க்கவும்.

கன்னி:

இன்று மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறைந்திருக்கும், பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். உங்கள் துணையுடன் இனிமையான வார்த்தைகளை பேசுவீர்கள். இன்று பணவரவு அதிகமாக இருக்கும் .ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும்.

துலாம்:

இன்று உற்சாகத்துடன் ஆர்வத்துடன் காணப்படுவீர்கள், முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள் .பணியிடத்தில் புதிய வாய்ப்புகளும் வளர்ச்சியும் காணப்படும். உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வு இருக்கும் .பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும், ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம்:

இன்று நீங்கள் பொறுமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் .அதிக பணிகள் காரணமாக பணியில் தவறுகள் செய்ய நேரலாம், குடும்ப பிரச்சினை ஒன்றில் உங்கள் துணையை நீங்கள் சமாளிக்க இயலாத நிலை இருக்கும். இன்று அதிக செலவுகள் ஏற்படும், உங்கள் ஆரோக்கியத்தில் செலுத்த வேண்டும்.

தனுசு:

இன்று சிறப்பான பலன்கள் கிடைக்க உகந்த நாள் அல்ல, இறைவழிபாடு மூலம் ஆறுதல் பெறலாம். உங்கள் பாதையில் சில தடைகள் காணப்படும். பணிகளை கவனமுடன் செய்ய வேண்டும். உங்கள் துணையுடன் வேறுபட்ட மனநிலை காணப்படும். இன்று பணவரவு குறைந்து காணப்படும். உங்களிடம் பதட்டமான நிலை காணப்படுவதால் இறைவழிபாடு மேற்கொள்வது நல்லது.

மகரம்:

இன்று உங்களுக்கு அனுகூலமான நாள், பணியிட சூழல் மகிழ்ச்சிகரமாக இருக்கும். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும் .உங்கள் துணையுடன் வெளியிடங்களுக்கு சென்று வருவீர்கள் .பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது.

கும்பம்:

இன்று உங்கள் வளர்ச்சி குறித்த கவலை காணப்படும், உங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி சாதகமான பலன்களை காணுங்கள். பணியிடத்தில் கவனம் அவசியம். உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வு காணப்படும். பண வரவு எதிர்பார்த்த அளவில் இருக்காது .ஆரோக்கியத்தில் கவனம் தேவை, குளிர்பானங்களை தவிர்க்கவும்.

மீனம்:

பணியிடத்தில் சில பிரச்சனைகள் வர  வாய்ப்பு உள்ளதால் சக பணியாளர்களுடன் கவனமாக பழக வேண்டும். உங்கள் துணையுடன் கருத்துக்களை வெளிப்படையாக பகிர மாட்டீர்கள். பணத்தை கையாளும்போது கவனமாக இருக்க வேண்டும். தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனை காணப்படும் எண்ணெய் பதார்த்தங்களை தவிர்க்கவும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்