இந்த நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்? இன்றைய ராசி பலன்கள்.!

Published by
K Palaniammal

Today horoscope-மாசி மாதம் 23ஆம் தேதி[ மார்ச் 6, 2024] இன்றைக்கான ராசி பலன்களை இங்கே காணலாம்.

மேஷம்:

இன்று சவால்களை உற்சாகமாக கையாள வேண்டும் .இன்று பணியில் வளர்ச்சிக்கான கூடுதல் முயற்சி எடுக்க வேண்டும். உங்கள் துணையுடன் நல் உறவு ஏற்பட அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும் .நிதி நிலைமையில் வளர்ச்சி காணப்படாது. உங்கள் பதட்டம் உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும்.

ரிஷபம்:

இன்று சற்று சுமாரான நாளாக இருக்கும். இன்று விட்டுக் கொடுத்து சொல்வது நால்ல பலன்களை தரும். உங்கள் பணிகளை விவேகத்துடன் கையாள வேண்டும் .உங்கள் துணையுடன் தேவையற்ற விவாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. நிதி நிலைமை திருப்திகரமாக இருக்காது. உங்களுக்கு சளி ஏற்பட வாய்ப்புள்ளது ,குளிர்ச்சியான உணவுகளை தவிர்த்தல் நல்லது.

மிதுனம்:

இன்று நன்மை விளையும் நாள். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். எதிர்பாராத பணம் வரவு காணப்படும். உங்கள் பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். உங்கள் துணையுடன் நல் உறவு காணப்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கடகம்:

இன்று உங்கள் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். புதிய நண்பர்கள் மற்றும் புதிய தொடர்புகளை பெறுவீர்கள். உங்கள் பணியில் திருப்தி காண்பீர்கள். உங்கள் துணையுடன் நகைச்சுவையான உணர்வுகளை பகிர்ந்து கொள்வீர்கள். போதிய பண வரவு காணப்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

சிம்மம்:

இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இருக்காது .உங்கள் பணி இடத்தில் நீங்கள் கவனமாக செயல்பட வேண்டும். உங்கள் வேறுபாடான அணுகுமுறை உங்கள் துணையுடன் உறவை பாதிக்கும். இன்று லாப நஷ்டம் இரண்டும் காணப்படாது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கன்னி:

இன்று நீங்கள் விரும்பிய பலனை அடைய பொறுமை அவசியம்.  பணியில் தவறுகள் செய்ய வாய்ப்புள்ளது, உங்கள் துணையுடன் முரண்பாடு காணப்படும் .இன்று தேவையற்ற செலவுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை ,குளிர்ச்சியான உணவுகளை தவிர்க்க வேண்டும்.

துலாம்:

இன்று சுமூகமான பலன்கள் கிடைக்கும் நாள். உங்கள் பணி திறமைகள் உங்களை சிறப்பாக செயல்பட வைக்கும். உங்கள் துணையுடன் உறவில் பரஸ்பரம் அன்பும் மலரும். நிதி நிலைமை சிறப்பாக காணப்படும். ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம்:

இன்று நாள்  பலன்களை காண மிகுந்த முயற்சி எடுக்க வேண்டும். அமைதியாகவும் ஓய்வாகவும் இருப்பது நல்லது. குறித்த நேரத்தில் பணிகளை முடிக்க முடியாது. உங்கள் துணையுடன் குழப்பமான உணர்வுகளை வெளிப்படுத்துவீர்கள். இன்று தேவையற்ற செலவு செய்ய நேரும்.  உங்கள் தாயின் ஆரோக்கியத்திற்காக பண செலவு செய்வீர்கள்.

தனுசு:

இன்று துடிப்பான நாளாக இருக்காது. பிரார்த்தனை மேற்கொண்டால் மன ஆறுதலை பெறலாம். இன்று பணிச்சுமை அதிகமாக காணப்படும். உங்கள் துணையுடன் சண்டை ஏற்பட வாய்ப்புள்ளது. பண பற்றாக்குறை ஏற்படும். இனிப்பு சுவை உணவுகளை தவிர்க்கவும்.

மகரம்:

உங்கள் செயல்களை கையாள்வதில் சில தடைகள் காணப்படும். இன்றைய நாள் சராசரி பலன்களை அளிக்கும். பணியிடத்தில் வெற்றிக்கான கடுமையாக முயற்சி செய்ய வேண்டும். உங்கள் துணையுடன் தவறான புரிந்துணர்வு காணப்படும். இன்று செலவு செய்ய நேரலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை, தண்ணீர் அதிகமாக குடிக்கவும்.

கும்பம்:

இன்று முன்னேற்றகரமான பலன்கள் கிடைக்கும் நாள். அனைத்து விதத்திலும் செழுமை காணப்படும் .புதிய வாய்ப்புகள் கிடைக்கும் .உங்கள் பணிகளை விரும்பி செய்வீர்கள் .உங்கள் துணையுடன் மகிழ்ச்சியுடன் வெளியிடங்களுக்கு சென்று வருவீர்கள். நிதி நிலைமை சிறப்பாக உள்ளது. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மீனம்:

இன்று உங்கள் செயல்களில் வெற்றி காண்பீர்கள். பணியிட சூழல் சிறப்பாக இருக்கும். உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வு காணப்படும். இன்று எதிர்பாராத பண வரவு காணப்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

Recent Posts

‘மகா கும்பமேளாவில் குளித்தே தீருவேன்’ அடம்பிடிக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி!

அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…

19 hours ago

திருப்பதி கோயிலில் முட்டி போட்டு நேர்த்திக் கடன் செலுத்திய நிதிஷ் ரெட்டி!

திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…

19 hours ago

ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை கிடைக்குமா? அமைச்சர் மூர்த்தி பதில்!

மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…

20 hours ago

பொங்கல் ஸ்பெஷல் : தென்மாவட்ட மக்களுக்காக சிறப்பு ரயில்களை அறிவித்த ரயில்வே!

சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…

21 hours ago

கரும்பு சாறில் பொங்கல் செய்யலாமா?. அது எப்படிங்க.?

சென்னை :கரும்புச்சாறை   வைத்து பொங்கல் ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில்  காணலாம். தேவையான பொருள்கள்: பச்சரிசி…

22 hours ago

ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பொங்கல் வாழ்த்து கூறிய அஜித்குமார்!

சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின்…

23 hours ago