புனிதத் தலங்களான குருதுவாராவில் ஹோலிப் பண்டிகையை முன்னிட்டு சீக்கியர்களின் ஹோலா மொஹலா பண்டிகை கொண்டாடப்பட்டது. சீக்கியர்களின் பத்தாவது மதகுருவான குரு கோபிந்த் சிங், 18ம் நூற்றாண்டில் வண்ணங்கள் வீசும் ஹோலி நாளில்தான் , அவுரங்கசீப் உள்ளிட்டோரின் இஸ்லாமியர் படைகளை முறியடிக்க தனக்கான சீக்கியர்களின் ராணுவப் படையை அமைத்தார் என்று கூறப்படுகிறது. சீக்கியர்களின் புத்தாண்டும் இந்த நாளிலிருந்துதான் தொடங்குகிறது.
இந்தப் புனித நாளை முன்னிட்டு வண்ண மயமான ஆடைகளுடன் ஏராளமான சீக்கியர்கள் அமிர்தசரஸ் நகரில் உள்ள பொற்கோவிலுக்குத் திரண்டனர். ஒளிவீசும் மின்விளக்குகளால் பொற்கோவில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதே போன்று பஞ்சாபில் உள்ள அனந்தபுர் சாகிப் குருதுவாராவிலும் ஹோலா மொஹலா கொண்டாடப்பட்டது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ராஜஸ்தான் : ஜெய்ப்பூர் - அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் நிலையம் முன் இன்று வெள்ளிக்கிழமை காலை டிரக் மற்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
சென்னை : கேரள மாநிலத்தில் இருந்து மருத்துவக் கழிவுகள் தமிழ்நாட்டின் எல்லை மாவட்டங்களில் தொடர்ந்து மருத்துவ கழிவு குப்பைகள் கொட்டப்பட்டுள்ள நிலையில்,…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
டெல்லி : அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட…
சென்னை : 2024 சென்னை சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 12, முதல் டிசம்பர் 19, வரை சென்னையில் நடைபெற்றது. தமிழக…