மஹாசிவராத்திரி பற்றிய வரலாறு…..!!!
- அம்பிகை உமாதேவி, பரமேஸ்வரனை நினைத்து நான்கு ஜாமங்களிலும் இரவு முழுவதும் ஆகம விதிப்படி பூஜை செய்தாள்.
- இந்த பூஜையே சிவராத்திரி என்று அழைக்கப்படுகிறது.
முந்தைய காலத்தில் போது பிரம்மனும், அவரால் படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்டது. இந்நிலையில், இரவுப்பொழுதில் அம்பிகை உமாதேவி, பரமேஸ்வரனை நினைத்து நான்கு ஜாமங்களிலும் இரவு முழுவதும் ஆகம விதிப்படி பூஜை செய்தாள்.
இதனையடுத்து பூஜையின் முடிவில் அம்பிகை ஈஸ்வரனை வணங்கி, அடியேன் தங்களைப் பூஜித்த இந்த இரவை, தேவர்களும், மனிதர்களும் தங்கள் திருநாமத்தாலேயே, பூஜை செய்ய வேண்டும் என்று வேண்டினாள். இந்த பூஜையே சிவராத்திரி என்று அழைக்கப்படுகிறது.
மேலும் அந்த சிவராத்திரி அன்று, சூரியன் மறைந்தது முதல், மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை, சிவனைப் பூஜை செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எல்லாவிதமான பாக்கியங்களையும் தந்து, முடிவில் மோட்சத்தையும் அருள வேண்டும்’ என்றும் உமாதேவி வேண்டிக்கொண்டாள். அதற்கு சிவபெருமானும், ‘அப்படியே ஆகட்டும்!’ என்று கூறி அருள் புரிந்தார்.