தமிழ் புத்தாண்டின் சிறப்புகள் இது தான்!

Default Image

தமிழர்கள் தான் தமிழ் புத்தாண்டை மிக சிறப்பாக கொண்டாடுகின்றனர். இந்த சித்திரை புத்தாண்டை இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் மற்றும் பல நாடுகளிலும் கொண்டாடுகின்றனர். இவர்கள் சித்திரை மாதத்தின் முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடுகின்றனர். 

இந்த புத்தாண்டை, தமிழர் முந்தைய நாட்களை வீடு வாசலை சுத்தம் செய்வதிலும், அலங்கரிப்பதிலும்செலவழிப்பர். மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள், வெற்றிலை, பாக்கு, நகைகள், நெல் முதலான மங்கலப்பொருட்கள் வைத்த தட்டை வழிபாட்டறையில் வைத்து, அதை புத்தாண்டு அதிகாலையில் காண்பது புனிதமாகக் மக்கள் கருதுகின்றனர். 

புத்தாண்டன்று அதிகாலையில், குளித்து, வாசலில் கோலமிட்டு, புதிய ஆடைகள் அணிந்து கோவிலுக்கு சென்று வழிபடுவார்கள். பின் மாலை வேளையில், உறவினர்கள் வீடுகளுக்கு சென்று பலகாரங்களை பகிர்ந்து கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.  

வாழ்க்கை என்பது கசப்பும் இனிப்பும் கலந்தது.  இதற்க்கு அடையாளமாக வேப்பம்பூப்பச்சடி, மாங்காய்ப்பச்சடி என்பவற்றை உண்பது ஒரு கலாச்சாரமாக கொண்டுள்ளனர். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்