உங்க வீட்டு பீரோவில் இந்த இரண்டு பொருட்கள் வைத்திருந்தால் போதும் பணம் பல மடங்காக அதிகரிக்கும்..!
உங்க வீட்டு பீரோவில் இந்த இரண்டு பொருட்கள் வைத்திருந்தால் போதும் பணம் பல மடங்காக அதிகரிக்கும்.
இந்த காலத்திலும் எந்த காலத்திலும் பணம் இல்லாமல் வாழ்க்கை நடத்துவது என்பது முடியாத ஒரு காரியம். பணம் அவசியம் தான். அதை எவ்வளவு கஷ்டப்பட்டு உழைக்கிறோம் என்பதை விட அதை எப்படி பாதுகாப்பாக சேமித்து வைப்பது என்பதுதான் அதைவிட மிக முக்கியமான ஒன்று. சிலர் நாள் முழுவதும் உழைத்து வேர்வை சிந்தி உழைத்த பணத்தை வீட்டிற்கு வந்து நுழைந்த உடனேயே கையில் இருந்து தண்ணி போல் பணத்தை செலவாக்கிவிடுவார்கள். இது போல் இருக்கும் நிலை உங்கள் வீட்டில் இருந்தால் இந்த முறையை பின்பற்றி பாருங்கள், நிச்சயமாக உங்களுடைய வீட்டு பீரோவில் இருக்கும் பணம் பல மடங்காக அதிகரிப்பதை நீங்கள் உணர்வீர்கள்.
முதலில் உங்கள் வீட்டு பீரோ மற்றும் உங்கள் வீட்டில் பணம் வைக்கும் இடம், பூஜை அறை இவை அனைத்தும் வாசனை மிகுந்த இடங்களாக இருக்க வேண்டும். ஏனென்றால் மகாலட்சுமி வாசனை மிகுந்த இடங்களிலேயே வாசம் செய்வாள். அதனால் உங்கள் வீட்டு பூஜை அறை மற்றும் பீரோ போன்றவற்றில் பச்சை கற்பூரத்தை வைத்திருங்கள். இதில் இருந்து வரக்கூடிய வாசனை நறுமணம் மகாலட்சுமி அவ்விடத்தில் தங்குவதற்கு உதவி செய்யும். மேலும் உங்கள் விட்டு பணப்பெட்டி அல்லது பீரோல் வடக்கு திசை நோக்கி இருக்க வேண்டும்.
இதில் நீங்கள் பணம் வைக்கும் பொழுது பணத்துடன் சேர்த்து சிறிய மாதுளை குச்சியையும், மல்லிகை பூவையும் சேர்த்து வைக்க வேண்டும். ஏனென்றால் மாதுளை மகாலட்சுமி தேவியின் அம்சமாகும். அதனால் மாதுளை மரத்தில் இருந்து வரக்கூடிய அந்த சிறிய குச்சியை எடுத்து உங்கள் வீட்டு பீரோவில் வைக்கும்போது அந்த இடத்தில் பணம் அதிகரித்துக் கொண்டே இருக்கும். மேலும் பணம் சேமிப்பதற்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கும். மல்லிகைப்பூ வாசனை மிகுந்த பூ ஆகும். அதனால் மல்லிகை பூவில் மகாலட்சுமி வாசம் செய்கின்றாள். இதனையும் சேர்த்து வைக்கும் பொழுது மகாலட்சுமி தேவியின் அருள் நமக்கு எப்போதுமே கிடைத்துக் கொண்டே இருக்கும். பணமும் உங்கள் வீட்டில் சேர்ந்து கொண்டே இருக்கும்.