சைவ சமயத்தில் முழுமுதற்கடவுளாக திகழ்வது பரமசிவன் ஆவார்.இவர் மூன்று மூர்த்திகளில் ஒருவராவர்.இந்நிலையில் இன்று பல கோவில்களில் சிவாராத்திரி திருவிழா மிகவும் சிறப்பாக அனுசரிக்கபடுகிறது. மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று சிவனை வழிபட்டால் அவரின் அருளை முழுவதுமாக பெறலாம்.மேலும் இன்றைய நாளில் தூங்காமல் அவரின் நாமங்களை உச்சரித்து அவரை வழிபட்டால் அவரின் அருளை முழுவதுமாக பெறலாம்.
சிவராத்திரி என்றால் பல கல்பகோடி இரவுகள் ஒன்று சேர்ந்து வந்த ராத்திரி என்று கூறுவர். சிவராத்திரி அன்று பூஜை செய்தால் பல இரவுகளிலும் செய்கின்ற பூஜையின் பலனை சிவராத்திரி பூஜை ஒன்றே கொடுத்துவிடும் என்று சித்தர்கள் கூறுகிறார்கள்.
மயிலாப்பூர், திருவான்மியூர், திருவொற்றியூர், திருவேற்காடு, திருவலிதாயம் (பாடி), திருமுல்லைவாயல் ஆகிய 6 தலங்கள் பாடல் பெற்ற தலங்கள் ஆகும் . இந்த தலங்களுக்கு சென்று சிவனின் திருவருளை பெறலாம். மகா சிவராத்திரி தினத்தன்று இந்த 6 தலங்களில் ஏதாவது ஒரு கோவிலுக்கு சென்று வழிபடுவது மிக சிறப்பான பலன்களையும் நமக்கு தரும்.
மகா சிவராத்திரி அன்று சிவன் கோவில்களில் நாம் அன்னதானம் வழங்கலாம் .இரவு முழுக்க கண் விழிக்கும் பக்தர்களுக்கு டீ,காபி,மற்றும் நம்மால் இயன்ற உணவு பொருட்களை கொடுத்தால் மிகவும் நல்ல பலன்களை நமக்கு கொடுக்கும்.
மேலும் நாள் முழுவதும் சிவனுக்கு பூஜை,வழிபாடு முதலியவற்றை செய்வது மிகுந்த பலன் அளிக்கும்.மேலும் நாள் முழுவதும் சிவநாமத்தை உச்சரிப்பது மிகுந்த பலன் அளிக்கும்.
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…