மகா சிவராத்திரி அன்று நாம் செய்ய வேண்டிய நற்செயல்கள் !!!!

Default Image
  • சிவராத்திரி என்றால்  பல கல்பகோடி இரவுகள் ஒன்று சேர்ந்து வந்த ராத்திரி என்று கூறுவர்.
  • சிவராத்திரி அன்று பூஜை செய்தால்  பல இரவுகளிலும் செய்கின்ற பூஜையின் பலனை சிவராத்திரி பூஜை ஒன்றே கொடுத்துவிடும் என்று  சித்தர்கள் கூறுகிறார்கள்.

சைவ சமயத்தில் முழுமுதற்கடவுளாக  திகழ்வது பரமசிவன் ஆவார்.இவர் மூன்று மூர்த்திகளில் ஒருவராவர்.இந்நிலையில் இன்று  பல கோவில்களில் சிவாராத்திரி திருவிழா மிகவும் சிறப்பாக அனுசரிக்கபடுகிறது. மகா சிவராத்திரியை  முன்னிட்டு இன்று சிவனை வழிபட்டால் அவரின் அருளை முழுவதுமாக பெறலாம்.மேலும் இன்றைய நாளில் தூங்காமல் அவரின் நாமங்களை உச்சரித்து அவரை வழிபட்டால் அவரின் அருளை முழுவதுமாக பெறலாம்.

சிவராத்திரி என்றால் என்ன :

 

சிவராத்திரி என்றால்  பல கல்பகோடி இரவுகள் ஒன்று சேர்ந்து வந்த ராத்திரி என்று கூறுவர். சிவராத்திரி அன்று பூஜை செய்தால்  பல இரவுகளிலும் செய்கின்ற பூஜையின் பலனை சிவராத்திரி பூஜை ஒன்றே கொடுத்துவிடும் என்று  சித்தர்கள் கூறுகிறார்கள்.

மயிலாப்பூர், திருவான்மியூர், திருவொற்றியூர், திருவேற்காடு, திருவலிதாயம் (பாடி), திருமுல்லைவாயல் ஆகிய 6 தலங்கள் பாடல் பெற்ற தலங்கள் ஆகும் . இந்த தலங்களுக்கு சென்று சிவனின் திருவருளை பெறலாம். மகா சிவராத்திரி தினத்தன்று இந்த 6 தலங்களில் ஏதாவது ஒரு கோவிலுக்கு சென்று வழிபடுவது மிக சிறப்பான பலன்களையும்  நமக்கு தரும்.

மகா சிவராத்திரி அன்று சிவன் கோவில்களில் நாம் அன்னதானம் வழங்கலாம் .இரவு முழுக்க  கண் விழிக்கும் பக்தர்களுக்கு டீ,காபி,மற்றும் நம்மால் இயன்ற உணவு பொருட்களை கொடுத்தால் மிகவும் நல்ல பலன்களை நமக்கு கொடுக்கும்.

மேலும் நாள் முழுவதும் சிவனுக்கு பூஜை,வழிபாடு முதலியவற்றை செய்வது மிகுந்த பலன் அளிக்கும்.மேலும் நாள் முழுவதும் சிவநாமத்தை உச்சரிப்பது மிகுந்த பலன் அளிக்கும்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்