சுற்றுச்சூழலுக்கு மாசு இல்லாத விநாயகர் சிலை
ஆண்டு தோறும் ஆவணி மாதம் அமாவாசையை அடுத்த சதுர்த்தி அன்று உலகம் முழுக்க விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. வீடுதோறும் களி மண்ணால் செய்த பிள்ளையார் சிலைகளை எருக்கம் பூ அணிவித்து, அருகம்புல், செவ்வந்தி, மல்லிகை, அரளி போன்ற மலர்களால் அர்ச்சனை செய்வது வழக்கமாக இருக்கிறது.
விநாயகருக்கு விருப்பமான கொழுக்கட்டை, அப்பம், சுண்டல், வடை, அவல், பொரி என நிவேதனங்கள் செய்கிறார்க்ள். வாழை, திராட்சை, நாவல், விளாம்பழம், கரும்புத் துண்டுகள், ஆப்பிள் என மிகவும் பிரியமுடன் பிள்ளையாருக்கு படைத்து வழிபடுகின்றனர்.
இந்நிலையில், விநாயகர் வடிவிலான சிலைகளை செய்யும் பணியில் தொழிலாளர்கள் தொடங்கியுள்ளனர். இந்த சிலைகள் முழுக்க முழுக்க கலிமண்களால் மட்டுமே செய்யப்படுகிறது. சுற்றுச்சூழலுக்கு மாசு இல்லாத வகையில், இந்த சிலைகளை செய்து வருகின்றனர்.
2 முதல் 9 அடி வரை விநாயகர் சிலை செய்வது உண்டு. இந்த மண் சிலைகள் நீர்நிலைகளில் எளிதாக கரையக்கூடிய தன்மையை கொண்டது. மேலும், கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டுப்பார்க்கும் போது, இந்த ஆண்டு தமிழகத்தில் விநாயகர் சிலைகளின் விலை, 30 சதவீதம் அதிகமாக இருக்கும் என்கிறார்கள் சிலை தயாரிப்பாளர்கள். மேலும் 90 சதவீதம் பணிகள் முடிந்துள்ளதாகவும் கூறினார்கள்.