கந்தசஷ்டி விரதம் 2024- திருசெந்தூர் கந்த சஷ்டி திருவிழா.. நடை திறக்கப்படும் நேரம் எப்போது ?
கந்த சஷ்டி விழாவையொட்டி திருசெந்தூர் முருகன் கோவிலின் நடை திறக்கும் நேரம் மற்றும் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்காரம் நடை பெறும் நாள் , நேரம் பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம் .
கந்த சஷ்டி விழாவையொட்டி திருசெந்தூர் முருகன் கோவிலின் நடை திறக்கும் நேரம் மற்றும் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்காரம் நடை பெறும் நாள் , நேரம் பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம் .
தூத்துக்குடி –திருச்செந்தூர் முருகன் கோவிலில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாவாக கந்த சஷ்டி விழா உள்ளது . ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் அமாவாசை திதி முடிந்து கந்த சஷ்டி துவங்குகிறது .அதன்படி இந்த ஆண்டு நவம்பர் இரண்டாம் தேதி துவங்குகிறது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் திருச்செந்தூரில் மிக விமர்சையாக இந்த விழா கொண்டாடப்படுகிறது.
கந்த சஷ்டி விழா காலங்களில் கோவிலின் நடை திறக்கப்படும் நேரம் மாற்றப்படுகிறது .அதன்படி நவம்பர் இரண்டாம் தேதி அதிகாலை 1 மணிக்கே நடை திறக்கப்பட்டு 1:30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்று இரவு 9 மணிக்கு நடை சாத்தப்படுகிறது.
நவம்பர் 3ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு 3;30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடைபெறுகிறது .நவம்பர் 7ஆம் தேதி கந்த சஷ்டி விழாவின் ஆறாம் நாளின் முக்கிய நிகழ்வான சூரசம்காரம் திருச்செந்தூர் முருகன் கோவில் கடல் கரையில் மாலை 4 மணியிலிருந்து 6 மணி வரை நடைபெறுகிறது.
நவம்பர் 7ஆம் தேதி அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு 1:30க்கு விஸ்வரூப தரிசனம் நடைபெறுகிறது. நவம்பர் 8ம் தேதி 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு 3:30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடைபெறுகிறது. அன்று இரவு 11 மணிக்கு மேல் திருக்கல்யாணம் நடைபெறும் என்று கோவில் நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.