போகி பண்டிகைக்கு இதெல்லாம் பண்ண மறந்துடாதீங்க..!
போகி என்றாலே நம் அனைவரது நினைவுக்கும் வருவது பழையன கழிவதும் புதியன புகுதலுக்கும் உண்டான நாள். தை திருநாள் கொண்டாடுவதற்கு முதல் நாள் போகி கொண்டாடப்படுகிறது. இந்நாளில் பழைய பொருள்களை எரிக்க வேண்டுமே என்று தேவையற்ற பொருட்களை எரித்து காற்று மாசடைவதை ஏற்படுத்துகிறோம் எனவே எவற்றையெல்லாம் எரிக்கலாம் அன்று யாரை வழிபாடு செய்யலாம் என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்…
நம் முன்னோர்கள் அன்று வாழ்ந்த வாழ்க்கை முறை வேறு, ஆனால் இன்று நாம் வாழும் வாழ்க்கை முறை வேறு .அன்று ஓலை பாயில் படுப்பார்கள் பனை ஓலை மற்றும் தென்னை மரத்தினால் ஆன பொருட்களையே உபயோகப்படுத்துவார்கள், உதாரணமாக சமையலறையில் ஓலையில் செய்யப்பட்ட சுழகு, பொட்டி, கூடை போன்ற பொருட்களையும் மண் பாத்திரங்களையும் பயன்படுத்துவார்கள் இதை ஓராண்டுக்கு தான் உபயோகப்படுத்த முடியும் அதனால் அந்த வருடம் முடியும் கடைசி நாளான போகி அன்று பழைய பொருட்களை எரிக்கின்றார்கள் அன்று பயன்படுத்தப்பட்ட ஓலையில் ஆன பொருள்கள் காற்றை மாசுபாடு அடையச் செய்வதில்லை.
இன்று நாம் பயன்படுத்தும் பொருள்களில் பாதி பிளாஸ்டிக் பொருட்கள் தான் இவற்றை எரித்தால் நிச்சயம் காற்று மாசுபாடு அடையும். போகி அன்று எரிக்க வேண்டுமே என்பதற்காக கையில் கிடைக்கும் பொருள்களை அனைத்தும் எரித்து விடக்கூடாது. பழைய பொருட்கள் நன்றாக இருந்தால் அதை மற்றவர்களுக்கு கொடுக்கலாம்.
வாரத்தில் ஒரு நாள் மட்டுமே திறக்கப்படும் சிவன் கோவிலின் அதிசயம்..
போகி அன்று பழைய பொருட்களை எரிப்பதோடு சேர்த்து நம் மனதில் இருக்கக்கூடிய தேவையற்ற குப்பைகளான கோபம் ,ஆசை, பொறாமை ஆகியவற்றை சேர்த்து நீக்கிவிட வேண்டும்.
போகி அன்று வணங்க வேண்டிய தெய்வம்
அன் நன்னாளில் வீடு, பூஜை அறையை சுத்தம் செய்து விட்டு நம் வீட்டு தெய்வத்தை வணங்க வேண்டும் அதாவது நம் வீட்டின் குலத்தை காப்பாற்றி குலத்தை செழிக்கச் செய்யும் வீட்டின் பெண் குலதெய்வத்தை வழிபாடு செய்ய வேண்டும் . இவ்வாறு இன்றைய தலைமுறையினரிடம் சொல்வதற்கு ஆள் இல்லை இதனால் போகி எதற்கு கொண்டாடுகிறோம் என்று மறந்து விடுகிறார்கள்.போகி பழையது கழிவதற்கு மட்டும் அல்ல, பெண் குல தெய்வ வழிபாட்டிற்கு உகந்த நாள்
வழிபடும் முறை மற்றும் நெய்வேத்தியம்
நெய்வேத்தியத்திற்காக துள்ளு மாவு அதாவது பச்சரிசி ஊறவைத்து இடித்து அதில் நாட்டு சக்கரை மற்றும் வேப்பிலையை தூவி வைக்க வேண்டும் இளநீர் மற்றும் வெள்ளை சாதம், வெள்ளை சாதத்தின் மேல் வாழைப்பழம் மற்றும் வெல்லம் வைத்து அந்த தெய்வத்திற்குரிய ஸ்லோகங்கள் சொல்லி பூஜை செய்ய வேண்டும்.
நம் வீட்டை விட்டு கிளம்பும் போதும் சரி, வீட்டில் இருக்கையிலும் சரி நமக்கு எந்த ஒரு இன்னல்களும் வராமல் பாதுகாக்கும் தெய்வத்திற்கு போகி அன்றாவது வழிபாடு செய்து வாழ்வில் எல்லா வளமும் பெறுவோம்.