புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகேயுள்ள முள்ளிப்பட்டி முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது. இக்கோவிலின் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில், புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 800 க்கும் மேற்பட்ட காளைகள் கலந்துகொண்ட நிலையில், 200க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் களம்கண்டுள்ளனர். ஜல்லிக்கட்டை ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பார்த்துரசிக்கின்றனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
விருதுநகர் மாவட்டம் அருப்புகோட்டையில் அமைந்துள்ள மாரியம்மன் கோவலில் பங்குனி மாத திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் அக்னிச் சட்டி எடுத்து தங்களின் நேர்த்தி கடனை செலுத்தினர். இதனை தொடர்ந்து மாரியம்மன் கோவில் முளைப்பாரி திருவிழாவிலும் மக்களும்,பக்தர்களும் பெரும் திரளாக கலந்து கொண்டு முளைப்பரி எடுத்தனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்..,
சைத்ரா நவராத்திரி விழா வடமாநில நகரங்களில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பெருந்திரளாக பக்தர்கள் துர்க்கை அம்மன் கோவில்களில் வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றனர் ஜம்முவில் உள்ள வைஷ்ணவ தேவி கோவிலில் சைத்ரா நவராத்திரியை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர். நீண்ட வரிசையில் அவர்கள் காத்திருந்து குகைக்குள் கோவில் கொண்டுள்ள வைஷ்ணவ தேவியை வழிபட்டனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே தேரிக்குடியிருப்பில் அமைந்துள்ளது கற்குவேல் அய்யனார் கோவில். தேரிக்குடியிருப்பு மற்றும் சுற்றுவட்டார பகுதியில் முன்னொரு காலத்தில் கள்ளர்கள் நடமாட்டம் அதிகளவில் இருந்தாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளானதாகவும், அப்போது கற்குவேல் அய்யனார், கள்ளர்களை ஊரின் வெளியே விரட்டி சென்று செம்மண் நிறைந்த தேரிக்காட்டு பகுதியில் வெட்டி கொன்றதாகவும் கூறப்படுகிறது. அதனால் மகிழ்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் ஒவ்வொரு ஆண்டும் இந்நிகழ்வை திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். கள்ளர் வெட்டும் திருவிழாவில் கள்ளன் […]
திருவண்ணாமலை மாவட்டத்தில் கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி, டிசம்பர் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அறிவிப்பு செய்துள்ளார். கார்த்திகை தீபத்திருநாள் அன்று கார்த்திகை தீபத்தில் திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சல சுவாமியின் ஆலையமே வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் இதனால் அங்கு இந்த திருநாள் வெகுவிமர்சையாக கொண்டாடபடுவது வழக்கம்.
திருவண்ணாமலை தீபத்திருவிழா வருகிற டிசம்பர் 2ஆம் தேதி நடக்கவுள்ளது. அதில் பக்தர்கள் மகாதீபம் ஏற்றும் மலைமீது ஏற தடை விதித்துள்ளது. மேலும் கிரிவல பாதையில் அன்னதானம் வழங்கவும் தடை விதித்துள்ளது. இதனை கடந்த செவ்வாய் கிழமையன்று நடந்த தீபத்திருவிழா முன்னேற்ப்பாடு குறித்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் திரு.K.S.கந்தசாமி தெரிவித்தார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பொன்.ரத்தினசாமி, கோயில் இணை ஆணையர் R.ஜெகநாதன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் ரவாளி பிரியா மற்றும் M.ரங்கராஜன், கோட்டச்சியர் உமா மகேஸ்வரி, […]