முருகனின் மூன்றாம் படைவீடாக கருதப்படும் பழனி திருத்தலத்தில் ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அதன் படி இந்த ஆண்டுக்கான திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது. இவ்விழாவினையொட்டி பழனி முருகன் கோவிலில் உபகோவிலாக உள்ள பெரியநாயகி அம்மன் கோவிலில் ராக்கால பூஜையானது கிராமசாந்தி பூஜை நடைபெற்றது. இந்நிலையில் வருகின்ற 20 தேதி திருக்கல்யாணமும் இதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான வருகிற 21 தேதி தைப்பூச தேரோட்டமும் நடைபெறுகிறது.இதில் பக்தர்கள் கலந்து கொண்டு காவடி,வேல் […]
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தைதேரோட்டமானது வருகின்ற 20 தேதி நடக்க உள்ளது.மேலும் இதற்காக நேற்றே கொடியேற்றும் விழா வெகு சிறப்பாக நடந்தது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பூபதி திருநாள் என்று அழைக்கப்படும் தைத்தேர்திருவிழாவானது நேற்று சனிக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் தொடங்குகியது.இந்நிலையில் இன்று காலை 6 மணி முதல் 6.30 மணிக்குள் தனுர் லக்னத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து வருகின்ற 22 ம் தேதி வரையிலான 11 நாட்கள் வெகுவிமரிசையாக இந்த திருவிழாவானது நடைபெறுகிறது. மேலும் விழாவின் […]
திருச்சியில் பிரசித்தி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா இன்று திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி தொடர்ந்து 20 நாட்கள் நடைபெறுகிறது. சொர்க்கவாசல் என்றே ஸ்ரீரங்கம் தான் வரும்.டிச.18ம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் 108 வைணவ திருத்தலங்களில் முதன்மை பெற்ற திருத்தலம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு இங்கு உற்சவங்கள் மற்றும் விழாக்கள் நடந்து வருகின்றன. மேலும் இங்கு கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் 20 நாட்கள் நடக்கிறது வைகுண்ட ஏகாதசி […]
ஆறுபடை வீடுகளிலும் இன்று தொடங்குகிறது கந்த சஷ்டி திருவிழா இன்று கோடியோற்றத்துடன் தொடங்கி 6 நாட்கள் நடைபெற்றும் இந்த விழாவனது சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாணத்துடன் நிறைவு பெறுகிறது. ஏறுமயில் ஏறுவிளையாடு முகம் ஒன்று ஈசனோடு ஞானமொழி பேசுமுகம் ஒன்று குன்றுருவ வேல் வாங்கி நின்று ஒன்று சூரனை வதைத்த முகம் ஒன்று வள்ளியை மணபுறிய வந்த முகம் ஒன்று ஆறுமுகமான பொருள் நீயருள வேண்டும் ஆதி அருணாச்சல மூர்த்தி அமர்ந்த பெருமானே…!!! என்று உணர்ச்சி பொங்க அப்பன் […]
ஐப்பசி திருக்கல்யாண திருவிழா சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தின் சைவ (ம)வைணவ திருத்தலங்களில் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் சிறப்பு வாய்ந்தது.இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் திருக்கல்யாண திருவிழா 12 நாட்கள் வெகுவாக சிறப்பாக நடைபெறும்.இந்த விழா நாட்களில் சுவாமி,அம்பாள் காலை இரவு என பல்வேறு வாகனங்களில் வீதி உலா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டிற்கான ஜப்பசி திருவிழா நேற்று காலை ஸ்ரீகோமதி […]
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித் திருவிழாவின் 3ம் நாளான நேற்று சுப்ரமணியசுவாமி குமரவிடங்க பெருமான் தங்கமுத்துகிடா வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.இந்நிலையில்நேற்றிரவு சுவாமி குமரவிடங்க பெருமான் தங்கமுத்துக்கிடா வாகனத்திலும், வள்ளி அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் எழுந்தருளி வீதிஉலா வந்து காட்சியளித்தனர். முருகப்பெருமானின் 6 படை வீடுகளில் 2ஆம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. DINASUVADU
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலின் ஆவணி மூலத்திருவிழா எனப்படும் பிட்டுத்திருவிழா வருகிற 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.விழா நடைபெறும் 14-ந்தேதி வரை காலை, மாலையில் சந்தரசேகரர் உற்சவம் நடைபெறுகிறது. வருகிற 15-ந் தேதி கருங்குருவிக்கு உபதேசம் நடைபெறுகிறது. 21-ந் தேதி சுந்தரேசுவரருக்கு சுவாமி சன்னதி ஆறுகால் பீடத்தில் இரவு 7.30 மணிக்கு கும்ப லக்கனத்தில் பட்டாபிஷேகம் நடைபெறுகிறது.விழாவின் முக்கிய நிகழ்வாக பிட்டுக்கு மண் சுமந்த லீலை பூஜையானது 23-ந் தேதி நடைபெறுகிறது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
ஆயிரக்கணக்கான பக்தர்கள் காரைக்காலில் நடைபெற்ற மாங்கனித் திருவிழாவில் மாங்கனிகளை இறைத்து சிவபெருமானை வழிபட்டனர். அறுபத்து 63 நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையார் சிவபெருமான்மீது கொண்ட பக்தியை விவரிக்கும் வகையில் ஆண்டுதோறும் மாங்கனித் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. காரைக்கால் அம்மையார்- பரமதத்தர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் நடைபெற்றது. நேற்று பவழக்கால் விமானத்தில் சிவபெருமான் பிச்சாண்டவர் மூர்த்தியாக எழுந்தருளி உலா வந்தார். அப்போது சிவபெருமானுக்கு பக்தர்கள் மாங்கனியை வைத்து அர்ச்சனை செய்து வழிபட்டனர். வீடுகளில் இருந்து வீசப்பட்ட மாங்கனிகளை ஏராளமானோர் […]
கொடியேற்றத்துடன் நெல்லையப்பர் கோவில் ஆனிப் பெருந்திருவிழா தொடங்கியது. அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சுவாமி மற்றும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து கோவில் யானை காந்திமதி மீது வைத்து திருகொடிப்பட்டம் வீதியுலாவாகக் கொண்டுவரப்பட்டு, வேதமந்திரங்கள் முழங்க தங்க கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறவுள்ள திருவிழாவில் காலை மற்றும் மாலையில் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 27-ஆம் தேதி நடைபெறும் நிலையில் அன்று நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை […]
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வைகாசி விசாக திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 8-ம் திருவிழாவான நேற்றுமுன்தினம் காலையில் விவேகானந்தபுரத்தில் உள்ள சக்கர தீர்த்த காசிவிஸ்வநாதர் கோவில் கிணற்றில் இருந்து வெள்ளி குடத்தில் தீர்த்தம் எடுத்து யானை மீது பவனி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. 10-ம் திருவிழாவான இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 5 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், 9 மணிக்கு முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் அம்மனுக்கு ஆறாட்டு நிகழ்ச்சியும் நடக்கிறது. 10 மணிக்கு […]
சித்திரை திருவிழா கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும், காலை, மாலையில் சுவாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது. மேலும் பரத நாட்டியம், திருமுறை இன்னிசை நிகழ்ச்சியும் நடக்கிறது. இதைத் தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடந்தது. இன்று அதிகாலை 4 மணி யளவில் பெரிய கோவிலில் இருந்து விநாயகர், சுப்பிரமணியர், நீலோத் பலாம்பாள், சண்டிகேஸ்வரர், தியாகராஜர்-கமலாம்பாள் ஆகிய பஞ்சமூர்த்திகள் ஒன்றன் பின் ஒன்றாக முத்துமணி அலங்கார சப்பரத் தில் புறப்பட்டு தேர் […]
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் முத்திரை பதிக்கும் சித்திரை திருவிழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி திருக்கல்யாணத்தின் முதல் நாளான 26-ந்தேதி மாலை 5 மணிக்கு முருகப்பெருமான் அருள் ஆட்சி புரியும் அறுபடைவீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றத்தில் இருந்து மதுரைக்கு பவளக்கனிவாய் பெருமாள் புறப்பட்டு செல்லுகிறார். அதேவேளை திருமணத்தில் பங்கேற்பதற்காக தெய்வானையுடன் முருகப்பெருமானும் மதுரைக்கு செல்லுகிறார். இதையொட்டி திருப்பரங்குன்றத்தில் இருந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வரை உள்ள சுமார் 125-க்கும் […]
கும்பகோணம் அருகே சுவாமிமலையில் சித்திரைப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.அறுபடை வீடுகளில் முருகனின் 4ஆம் படை வீடான சுவாமிமலையில் ஆண்டுதோறும் சித்திரைப் பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டுக்கான சித்திரைப் பெருந்திருவிழா தொடக்க நிகழ்வில் விநாயகர், சண்டிகேஸ்வரர் சகிதம் சுப்ரமணியர் வள்ளி தெய்வானையுடன் உற்சவ மண்டபத்தில் எழுந்தருளினார். பின்னர் கொடிமரத்திற்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து கஜ வாகனம் பொறிக்கப்பட்ட கொடி வேத மந்திரங்கள், மங்கல வாத்தியங்கள் […]
சென்னை எண்ணூர் கத்திவாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள சூசையப்பர் ஆலயத்தில் 57-வது ஆண்டு ஆசீர்வாத பெருவிழா நடந்து வருகிறது. கடந்த 12-ந்தேதி கொடியேற்றுத்துடன் திருவிழா நிகழ்ச்சிகள் ஆரம்பித்தன. தினமும் மாலை பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. 18-ந்தேதி தேவ அழைத்தல் தினம் மேற்கொள்ளப்பட்டது. நேற்று மாலை இளையோர் தினத்தை இளைஞர் இயக்கத்தினர் கொண்டினர்.நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை நற்கருணை தினம் கொண்டாடப்பட்டது. இன்று (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு தேர் திருவிழா நடைபெற உள்ளது. நாளை சிறப்பு திருப்பலிகள் நடைபெற உள்ளன. […]
சித்திரை திருவிழா நாகர்கோவில் கிருஷ்ணசாமி கோவிலில் தொடங்கியது இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து வருகிற 29-ந் தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடக்கிறது. இதையொட்டி நேற்று அதிகாலையில் கணபதி ஹோமம் நடந்தது. பின்னர் காலை 9.15 மணிக்கு திரளான பக்தர்களுக்கு மத்தியில் திருக்கொடியேற்றம் நடந்தது. அதன்பிறகு அன்னதானம் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு உணவு அருந்தினர். இரவில் பக்தி இன்னிசையை தொடர்ந்து புஷ்பக வாகனத்தில் சாமி எழுந்தருளினார். திருவிழாவின் […]
தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் சித்திரை தேர் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கடந்த 19-ந்தேதி மாலை 6 மணிக்கு விக்னேஸ்வர பூஜையும், வாஸ்து பூஜையும் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து நேற்று மாலை தாயுமானசுவாமி கோவிலில் கொடியேற்றத்துடன் சித்திரை தேர் திருவிழா தொடங்கியது. பின்னர் இரவு சுவாமி அம்பாள் கேடயத்தில் புறப்பாடு நடைபெற்றது. 2-ம் நாளான இன்று(சனிக்கிழமை)இரவு சுவாமி கற்பகத்தரு வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் புறப்பாடு நடைபெறுகிறது. தொடர்ந்து 22-ந் […]
நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா 10 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறும். விழா நாட்களில் காலை, மாலை, இரவு ஆகிய மூன்று வேளைகளிலும் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வருவது வழக்கம். இந்த ஆண்டிற்கான சித்திரை திருவிழா இன்று (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நாளை காலை 5.30 மணிக்கு மேல் 6.00 மணிக்குள் சங்கரலிங்க சுவாமி சன்னதி முன்பு […]
சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலை 7 மணியளவில் கொடி பவனி தொடங்கி ரதவீதிகள் வழியே வலம் வந்து சன்னதியை அடைந்தது. அதனைத்தொடர்ந்து 8 மணியளவில் கும்ப ஹோமம் மற்றும் நந்தி, அபிராமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. 9.30 மணியளவில் கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, நந்தி உருவம் வரையப்பட்ட வெண்கொடி ஏற்றப்பட்டது. அதன்பிறகு அலங்கார தீபாராதனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. 10 மணியளவில் அனைத்து சுவாமிகளுக்கு காப்பு கட்டுதலும், […]