மாசி மகம் வருகின்ற மாசி மாதம் 12ஆம் தேதி, பிப்ரவரி 24,2024 கொண்டாடப்பட உள்ளது. மாசி மகத்தின் சிறப்புகள் மற்றும் பலன்கள் அன்று நாம் வணங்க வேண்டிய தெய்வங்கள் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். மாசி மகம் பௌர்ணமி திதியுடன் மக நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாளை மாசி மகமாகும். மாதம் தோறும் மக நட்சத்திரம் வந்தாலும் மாசி மாதம் வரும் மக நட்சத்திரத்திற்கு சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது இந்த மாசி மகத்தை கடலாடும் தினம் எனவும் […]
வரும் நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகையானது நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த தீபாவளிக்கு உருவான வரலாறு குறித்து பல்வேறு புராண கதைகள் கூறப்பட்டாலும், அவை அனைத்தும் வட மாநிலங்களை சார்ந்து குறிப்பிடப்பட்டவகையாக உள்ளது. இந்த பண்டிகை எவ்வாறு தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது என்பது பற்றிய தெளிவான விளக்கம் தற்போது வரை இல்லை. தீபாவளி புறக்கணிப்பு : தமிழகத்தின் உள்ள பல்வேறு கட்சியினர் குறிப்பாக ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம் கூட தீபாவளி பண்டிகையை தினத்தை […]
திண்டுக்கல்:பழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா பக்தர்கள் இன்றி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டது.அதில்,ஜன.14 முதல் 18 வரை அனைத்து வழிபாட்டு தளங்களிலும் மக்களுக்கு அனுமதி இல்லை என்றும் பொங்கல், தைப்பூசம் நாட்களில் கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை எனவும் அறிவிக்கப்பட்டது. மேலும்,வரும் 16-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனையடுத்து,பழனி முருகன் கோயில் தைப்பூச திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி […]
பழனி முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சண்முகர், வள்ளி-தெய்வானை திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது . கடந்த 15-ஆம் தேதி முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவில் கந்தசஷ்டி திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கி சூரசம்ஹார நிகழ்வும் நேற்று முன்தினம் கோலாகலமாக நடந்து முடிவடைந்தது .அதே போன்று திருவிழாவின் முக்கிய நிகழ்வான சண்முகர் ,வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நேற்று காலை மலைக்கோயிலில் உள்ள மகா மண்டபத்தில் உள்ள மணமேடையில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நிலையில் […]
திருவண்ணாமலை தீப திருவிழாவிற்கு பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு. விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் துணைத் தலைவர் சக்திவேல், சென்னைஉயர்நீதிமனறத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா மற்றும் தேர் திருவிழாவை நடத்த தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தீப திருவிழா மற்றும் தேர் திருவிழா நடத்துவது தொடர்பாக, திருவண்ணாமலை கோவில் நிர்வாகம், அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்படும் […]
தசரா திருவிழா மைசூருக்கு அடுத்தபடியாக குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் வெகுவிமரிசையாக நடைபெறும். இந்தாண்டு பக்தர்களின்றி கொண்டாட்டம். இந்தாண்டு திருவிழாவிற்கான கொடியேற்றம், நேற்று காலை 10.45 மணியளவில் நடந்தது. பின்னர் கொடிமரத்திற்கு 16 வகையான நறுமணப் பொருட்களால் அபிஷேகமும், சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது. அதை தொடர்ந்து முத்தாரம்மன், ஞானமூர்த்தீஸ்வரருக்கு சிறப்பு பூஜை நடந்தது. பின், மாலை 6 மணிக்கு அபிஷேக ஆராதனை, இரவு 8 மணிக்கு சிம்ம வாகனத்தில் துர்க்கை அம்மன் திருக்கோலத்தில் அம்மன் எழுந்தருளல் நடந்தது. இந்நிகழ்ச்சிகளில் […]
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனிப் திருவிழாவை ஆகம விதிப்படியே கோயிலுக்குள்ளேயே கொண்டாடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. வருடாவருடம் வெகுச்சிறப்பாக கொண்டாடப்படும் பங்குனி திருவிழா நடப்பாண்டிற்கான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனிப் பெருவிழா எவ்வாறு கொண்டாடுவது என்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியா் ஆா். சௌந்தா்யா, கோயில் துணை ஆணையா் ராமசாமி, வட்டாட்சியா் நாகராஜன் ஆகியோா் கலந்து கொண்டனர்.மேலும் கூட்டத்த்தில் திருப்பரங்குன்றம் கோயிலில் மாா்ச் 28 ம் தேதி […]
மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் பங்குனி திருவிழா மற்றும் விடையாற்றி கலை விழா வருகிற 29ந்தேதி கொடியேற்றத்தோடு தொடங்குகிறது. இவ்விழா நாட்களில் பல்வேறு வாகனங்களில் பகல் மற்றும் இரவு நேரங்களில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சிகள் நடக்கிறது.விழாவின் முக்கிய திருவிழாவான தேர்திருவிழா வருகிற 4ந்தேதி காலை 6 மணிக்கு சுவாமி மற்றும் அம்பாள் திருத்தேரில் எழுந்தருள்கின்றனர். இதைத்தொடர்ந்து காலை 7 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. திருவிழாவின் 5ந்தேதி மாலை 3 மணிக்கு அறுபத்து மூவர் திருவிழா நடக்க உள்ளது.இவ்விழாவையொட்டி காலை […]
ஆன்மீகத் தொண்டில் முருகனின் அடியராக தனது வாழ்நாள் முழுவதும் ஆன்மீகத்தை பரப்பிய திருமுருக கிருபானந்த வாரியார் அவதரித்த புண்ணிய பூமி என்று கூறப்படும் காங்கேயநல்லூரில் அருள்பாலித்து வரும் சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. இங்கு லட்ச தீபத்திருவிழா நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு மாலை 6 மணிக்கு மகாதீபாராதனையும், லட்ச தீப காட்சியும் நடந்தது. இரவு 11.30 மணிக்கு சுவாமி வீதிஉலா வரும் நிகழ்ச்சியும் நடந்தது. இவ்விழாவில் வாரியார் சுவாமிகளின் சகோதரர் மகன் புகழனார், உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து […]
திண்டுக்கல் மாவட்டத்திலே மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக திகழ்வது திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் இக்கோவிலில் மாசிதிருவிழா வெகுச்சிறப்பாக நடைபெறும் அவ்வாறு நடப்பாண்டிற்கான மாசித்திருவிழா கடந்த மாதம் 20ந் தேதி பூத்தமலர் பூ அலங்காரத்துடன் தொடங்கி கொடியேற்றம், பூக்குழி இறங்குதல், தசாவதாரம், ஊஞ்சல் உற்சவம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. அம்மனின் தெப்ப உற்சவம் நடந்தது. இதனால் காலை 10.30 மணியளவில் அன்னைக்கு பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 21 வகையான பொருட்களால் உள்ளம் குளிரும் படியாக மகா […]
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் காந்திமதியம்மன் கோயிலில் மார்ச்., 8ஆம் தேதி தெப்பத் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற உள்ளது. பண்டைய காலத்தில் சைவ மதத்திற்கும் சமண மதத்திற்கும் கருத்து வேறுபாடுகள் காணப்பட்டதை அனைவரும் அறிவோம்.இந்த கருத்து வேறுபாடு காரணமாக சைவசமயக் குரவா்களில் ஒருவரான அப்பா் என்று அழைக்கப்படுகின்ற திருநாவுகரசரின் ஆழ்ந்த பக்தியினை பரிசோதிக்கும் விதமாக கல்லில் கட்டி கடலில் போட்டாா்கள் சமண மதத்தினர். சற்றும் அஞ்சாமல் ஆண்டவனையே நினைத்து அப்பா் “கற்றுணை பூட்டியோா் கடலினில் பாய்ச்சினும் நற்றுணையாவது நமசிவாயவே” […]
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாசி தெப்பத்திருவிழா நாளை தொடங்குகிறது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாசி தெப்பத்திருவிழா நாளை (வியாழக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் 6ந் தேதி வரை நடைபெறுகின்றது. தெப்பத்திருவிழாவின் முதல் நாள் சுவாமி ஹம்ச வாகனத்திலும், 2வது நாள் ஹனுமந்த வாகனத்திலும், 3வது நாள் கற்பகவிருட்ச வாகனத்திலும், 4வது நாள் வெள்ளி கருட வாகனத்திலும், 5வது நாள் இரட்டை பிரபை வாகனத்திலும், 6வது நாள் யானை வாகனத்திலும் நம்பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். […]
திருத்தணி முருகன் கோயிலில் மாசி மாத பிரம்மோற்சவ விழாவானது வரும் பிப்.27ந் தேதி கோலகலமாக தொடங்குகிறது. தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி முருகன் கோயிலில் மாசி பிரம்மோற்சவ விழாவானது ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடைபெறும். அவ்வாறு நடப்பாண்டிற்கான பிரம்மோற்சவ விழா வரும் 27ம் தேதி முதல் அடுத்த மாதம் 9ம் தேதி வரை நடைபெற உள்ளது. வரும்27ந் தேதி விநாயகர் வீதி உலாவுடன் தொடங்குகிறது.அடுத்த நாள் காலை 7.30 மணிக்கு கொடியேற்ற நிகழ்ச்சி […]
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் கோயிலில் இம்மாதம் 21, 22ஆம் தேதிகளில் சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. இது குறித்து கோவில் நிர்வாகம் அறிவித்துள்ள செய்திக்குறிப்பில் சிவராத்திரி விழாவையொட்டி நெல்லையப்பா்-காந்திமதியம்மன் கோயிலின் நடை பிப்.,21ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று முழுவதும் நடை திறந்தே இருக்கும்.அன்று இரவு இரவு 10 மணிக்கு முதல் கால சிவராத்திரி சிறப்பு பூஜை தொடங்கும்.நள்ளிரவு 12 மணிக்கு இரண்டாம் கால பூஜையும் , அதிகாலை 2 மணிக்கு மூன்றாம் கால பூஜையும், […]
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைந்து அருள்தரும் வெயிலுகந்தம்மன் திருக்கோயில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு கோயில் அதிகாலை கோவில் நடைதிறக்கப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து திருவிழா கொடிப் பட்டமானது திருக்கோயிலிலிருந்து புறப்பட்டு, ரதவீதி மற்றும் மாடவீதிகள் வழியாக எடுத்து சென்று மீண்டும் காலை 5.10 மணிக்கு கோயிலுக்கு வந்தடைந்தது.பின்னர் கொடிமரத்தில் காப்பு கட்டி திருவிழா கொடியினை ஏற்றினாா்.அதன்பின்னா் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகாதீபாராதனை நடைபெற்றது. […]
தென்காளஹஸ்தி சிவன் கோவிலில் மகா சிவராத்திரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஈத்தாமொழி அருகே அமைந்துள்ள இலந்தையடித்தட்டு பிரசித்திப்பெற்ற தென்காளஹஸ்தி சிவன் கோவிலில் மகா சிவராத்திரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை 5.30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கிய நிலையில் காலை 9.30 மணிக்கு மகாசிவராத்தி திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நடைபெற்றது.சிவராத்திரி நெருங்குவதால் அனைத்து சிவஸ்தலங்களிலும் சிவராத்திரி வெகுச்சிறப்பாக கொண்டாடப் படுவது குறிப்பிடத்தக்கது.இதனை முன்னிட்டு தற்போது பிரசித்திப்பெற்ற சிவ ஆலங்களிலும் கொடியேற்றம் நடைபெற்று வருகிறது.
ராமேசுவரம் கோவில் மகா- சிவராத்திரி திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பிரசித்தி பெற்ற ராமேசுவரம் கோவில் மாசி மகா சிவராத்திரி திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கிறது.கொடியேற்றத்தோடு தொடங்குகிற இந்த விழாவனது வருகிற 25-ந் தேதி வரை 12 நாட்கள் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. திருவிழாவின் முக்கிய நாள்: இன்று காலை 9 மணியில் இருந்து 10.30 மணிக்குள் கோவிலின் சுவாமி சன்னதி எதிரே உள்ள நந்தி மண்டபம் அருகில் உள்ள கொடிமரத்தில், கொடி ஏற்றத்தோடு […]
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் தெப்பத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. உலகப்பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலின் தெப்பத் திருவிழா ஜன., 27ந் தேதி கொடியேற்றத்தோடு தொடங்கியது. கோடியேற்றத்தை தொடர்ந்து தினமும் சுவாமி மற்றும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் சித்திரை வீதிகளில் திருவீதி உலா வரும் நிகழ்வும் நடைபெற்றது.தெப்ப உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான கதிர் அறுப்பு திருவிழா மதுரை சிந்தாமணி பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. விழாவின் முக்கியத்துவமாக கருதப்படும் தெப்பத்திருவிழா சனிக்கிழமை […]