துலாபார வழிபாடும் அதன் பலன்களும் ..!
துன்பங்களை துரத்தியடிக்கும் துலாபாரம் கொடுக்கும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
சென்னை –துன்பங்களை துரத்தியடிக்கும் துலாபாரம் கொடுக்கும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
துலாபாரம் என்றால் என்ன ?
இறைவழிபாட்டில் பல வகையான வழிபாட்டு முறைகள் உள்ளன. அதில் ஒன்றுதான் துலாபாரம் நேர்த்திக்கடன் வழிபாடு. இந்த வழிபாடு மன்னர் காலத்தில் இருந்து இருக்கக்கூடியதாகும். குறிப்பாக குழந்தை வரம் வேண்டும் என பிரார்த்தனை செய்து கொண்டு வேண்டுதல் நிறைவேறிய பின் நேர்த்திக்கடனாக செலுத்துவதாகும் . குழந்தையின் எடைக்கு நிகராக ஏதேனும் பொருளை கோவிலுக்கு தானமாக கொடுப்பது துலாபாரம் ஆகும்.
இது குழந்தை வரம் வேண்டி மட்டுமல்லாமல் நீண்ட நோய் உள்ளவர்கள் ,திருமண தடை உள்ளவர்கள், எதிரி தொல்லை விலக போன்றவற்றிற்கும் இந்த பிரார்த்தனையை மேற்கொண்டு நேர்த்திக்கடனை செய்யலாம்.
துலாபாரத்திற்கு என்னென்ன பொருட்கள் கொடுக்கலாம்?
மஞ்சள், உப்பு ,வாழைப்பழம் ,நாணயங்கள், வெல்லம் ,அரிசி, வெள்ளி மற்றும் பொன்னாலான பொருட்கள் போன்றவற்றை துலாபாரமாக எடைக்கு நிகராக கொடுக்க வேண்டும். அதிலும் கிரகண நேரத்தில் பொன்னால் ஆன நகைகளை துலா பாரமாக கொடுப்பது நன்மை அளிக்கும் என்றும் அமாவாசை தினத்தில் வெள்ளி நாணயங்களை துலாபாரமாக கொடுப்பது நன்மை என்றும் கூறப்படுகிறது .
மேலும் நெய் துலாபாரம் கொடுத்தால் உடலில் இருக்கும் பிணி தீரும் . தேன் துலா பாரமாக கொடுக்கும் போது அபரிவிதமான செல்வாக்கு கிடைக்கும். மஞ்சள் துலாபாரமாக கொடுக்கும் போது குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் நீங்கும், மாங்கல்ய பாக்கியம் கிட்டும் .எதிரிகள் தொல்லை அகல பஞ்ச பாத்திரங்களை துலாபாரம் ஆக கொடுக்கலாம்.
சந்தனம் துலாபாரமாக கொடுக்கும்போது தோற்றம் பிரகாசம் அடையும் . சர்க்கரை துலா பாரமாக கொடுக்கும்போது நோயில்லாமல் வாழலாம். பிரார்த்தனைகளில் மிக உயர்ந்த பிரார்த்தனையாக துலாபாரம் கூறப்படுகிறது. இது அனைவரும் செய்யக்கூடிய பிரார்த்தனையாகவும், இந்தப் பிரார்த்தனைகள் நிறைவேறிய பின் மகிழ்ச்சியாக இறைவனுக்கு துலாபார காணிக்கைகளை கொடுக்கும்போது இறைவனின் முழு அனுகிரகமும் துலாபாரத்தில் இருக்கும் குழந்தைக்கு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.